Methods to prevent Stomach bloating https://tamil.oneindia.com
ஆரோக்கியம்

வயிற்று உப்புசத்தை தடுக்கும் முறைகள்!

எஸ்.விஜயலட்சுமி

யிற்று உப்புசம் என்பது பொதுவாக பலருக்கும் ஏற்படும் ஒரு பிரச்னையாகும். உலகெங்கிலும் கிட்டத்தட்ட 18 சதவீத மக்கள் வயிற்று உப்புசத்தால் அவதிப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வயிறு வீக்கம் அல்லது உப்புசத்தத்தின் அறிகுறிகள்: உணவு உண்ட பின் வயிறு வீங்கியது போல வயிற்றில் ஒரு அழுத்தமான சங்கடமான உணர்வு இருக்கும். வாயிலிருந்து ஆசன வாய் வரை செல்லும் செரிமான அமைப்பு காற்றால் நிரப்பப்படும்போது இந்த வீக்கம் அல்லது உப்புசம் நிகழ்கிறது. வயிறு வீக்கத்தின்போது வயிற்றுப்பகுதியில் அசௌகரியம் அல்லது வலி தோன்றும். வயிற்றில் இன்னும் இடமில்லை என உணரும் அளவிற்கு உடைகள் இறுக்கமாகும்.

சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசம் ஏற்பட காரணம் என்ன?

இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. உணவு முறை, வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள், உணவு ஒவ்வாமை போன்றவை. சில பொதுவான காரணங்களை பார்ப்போம்.

1. உணவை மெல்லும்போது காற்றை விழுங்குதல்,

2. ஒரே அமர்வில் அதிகமாக உணவு உண்பது,

3. நார்ச்சத்து அல்லது சர்க்கரைக்கு மாற்றாக உள்ள உணவுகளை உண்ணுதல்,

4. லாக்டோஸ் சகிப்புத்தன்மை அல்லது உணவு செரிமானம் தொடர்பான பிற பிரச்னைகள்,

5. மலச்சிக்கல் இருப்பது,

6. இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் இருப்பது,

7. சில மருந்துகளை எடுத்துக்கொள்வது,

8. வயிற்றில் கட்டி, கருப்பை புற்றுநோய், செலியாக் நோய்,

9. பசையம் வினைபுரியும்போது ஏற்படும் ஒரு நிலை,

10. கணையப் பற்றாக்குறை, (கணையம் தேவையான நொதியை போதுமான அளவு உருவாக்காதபோது),

11. டம்பிங் சிண்ட்ரோம், உணவு செரிமானப் பாதை வழியாக மிக விரைவாக நகரும் போது உப்புசம் நிகழ்கிறது,

வயிறு உப்புசத்தை எப்படி குறைப்பது?

1. உணவு உண்ணும் முன்பும், உணவு உண்ட பின்பும் ஒரே இடத்தில் அமராமல் அங்கும் இங்கும் எழுந்து நடக்க வேண்டும். இது செரிமானத்திற்கு உதவுகிறது.

2. வயிற்றுப் பகுதியை தானாக மசாஜ் செய்துகொள்வது. படுத்து இருக்கும்போது இதைச் செய்வது ஆரோக்கியமான செரிமானத்திற்கு வழி வகுக்கும்.

3. மூலிகை தேநீர் அருந்தலாம்.

4. நிறைய தண்ணீர் குடிப்பது, மெதுவாக உணவை உண்ணுதல், ஆரோக்கியமான உணவுகளை உண்பது.

5. பாட்டிலில் அடைக்கப்பட்ட செயற்கை பானங்கள், அதிகப்படியான சர்க்கரை மற்றும் உப்பு உள்ள உணவுகளை உண்ணுதலை தவிர்த்தல்.

6. பீன்ஸ் முட்டைக்கோஸ் காலிஃப்ளவர் மற்றும் பால் போன்ற வயிறு உப்புசத்தை தூண்டும் உணவுகளை தவிர்த்தல்.

7. போதுமான நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணுதல்.

8. குடி, புகை பழக்கத்தைத் தவிர்த்தல்.

9. ப்ரோ பயோடிக்குகள் உள்ள தயிர் போன்ற உணவுகளை உண்பது.

10. குளூட்டன் உள்ள உணவுகளை தவிர்த்தல்.

11. மலச்சிக்கல் இருந்தால் சரி செய்ய வேண்டும்.

இந்தக் குறிப்புகளை பயன்படுத்தி செயல்பட்டால் வயிறு உப்புசத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT