உடல் சோர்வு, தூக்கமின்மை, ஞாபக மறதி, எண்ணம் தடுமாறுவது ஆகியவை நரம்பு பிரச்னையின் அறிகுறிகள் ஆகும். இதுபோன்ற பாதிப்புகளை உரிய நேரத்தில் கண்டறிந்து, தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியமாகும். ஒரு பொருளை எடுக்கும்போதும், கோபத்தின்போதும் நம்மை அறியாமல் நமது கை நடுங்கும். இது நரம்புத் தளர்ச்சியின் அறிகுறியாகும். 40 மற்றும் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வரும் நரம்பு தளர்ச்சி மற்றும் அதனால் ஏற்படும் சோர்வு பற்றியும் அதனை சரி செய்யும் முறைகளைப் பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நரம்புத் தளர்ச்சி ஒரு மனிதனுக்கு இயற்கையாக வருவது அல்ல, தவறான உணவுப் பழக்கம் காரணமாக செயற்கையாக இந்த நோய் ஏற்டுகிறது. தேவைக்கு அதிகமாக அல்லது குறைவாக உணவை சாப்பிடுவதன் காரணமாக வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களின் தன்மையில் ஏற்படும் குறைபாடு காரணத்தினால் நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகிறது. நமது உணவுப் பழக்கத்தை சரிசெய்தால் இந்நோயின் தீவிரம் குறையும். 40 மற்றும் 50 வயதில் ஏற்படும் சர்க்கரை நோய் இந்த நரம்புத் தளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
சர்க்கரை நோய் வந்த பின்னர் சர்க்கரை மற்றும் இதர பொருட்களை குறைவாக உட்கொள்வதாலும், சர்க்கரை நோய்க்கு சாப்பிடும் மருந்துகளும் நமது உடலின் செயல்பட்டை மாற்றி நரம்புத் தளர்ச்சியை தீவிரப்படுத்துகிறது. நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்தை அதிகப்படுத்தினால் நரம்புத் தளர்ச்சி நோய்க்கு முருங்கைப் பூக்கள் நல்ல மருந்தாகும்.
வாத நோய், நரம்புத் தளர்ச்சி, மன சோர்வு, முதுமையில் ஏற்படும் சோர்வு, கை நடுக்கம் போன்றவற்றிற்கு முருங்கை பூ உணவு நிவாரணமாகிறது. 200 கிராம் முருங்கை பூவை எடுத்து நெயில் வறுத்து நன்றாக குழைய வேகவைத்த பச்சரிசி சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நோயின் தீவிரம் குறைந்து நோய் குணமாகும். காலை ஒரு வேளை மட்டுமே முருங்கை பூ சாதத்தை சாப்பிட வேண்டும்.
நரம்புகள் செயலிழந்தால், முருங்கைப் பூவில் தயாரிக்கப்படும் கஷாயம் சரி செய்கிறது. பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் கோபம், எரிச்சல், தலைவலி, வயிற்று வலியை இந்தக் கஷாயம் சரிசெய்கிறது. தனியா, சீரகம், மிளகு, சுக்கு, பூண்டு, எல்லாவற்றையும் அரைத்து வைத்துகொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து, அரைத்து வந்த விழுதோடு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். மசாலா வாசனை போனதும், பொடியாக நறுக்கிய முருங்கைப்பூக்களைச் சேர்த்து மறுபடியும் கொதிக்க விட வேண்டும். பூ நன்றாக வேக வேண்டும். இதுதான் முருங்கை பூ சூப். இதனை அவ்வப்போது எடுத்துக்கொள்ள நரம்புகள் பலம் பெறும்.
ஒரு வாணலியில் எண்ணெய், சின்ன வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கி, சுத்தம் செய்த முருங்கை பூவையும் சேர்த்து உப்பு போட்டு நன்றாக வதக்க வேண்டும். இதை சாப்பிட்டாலும் உடல் பலம் பெறும்.
முருங்கை பூவை காய வைத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து 48 நாள் சாப்பிட்டு வந்தாலும் நரம்புத் தளர்ச்சி நீங்கும். முருங்கை பூக்கள் கண் தொடர்பான அனைத்துக் கோளாறுகளையும் சரிசெய்யக் கூடியது.. முருங்கை பூவை பாலில் வேக வைத்து அந்தப் பாலை வடிகட்டி குடித்து வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும். கணினில் வேலை பார்ப்பவர்கள் இந்த முருங்கை பூவை அடிக்கடி சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
50 வயதுக்கு மேல் முருங்கை பூவை அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்னை ஏற்படுத்தும் என்பதால், வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் போதுமானது. முருங்கை பூவை நெயில் வறுக்கும்போது உடன் சுவைக்கு மிளகு, சீரகம் சேர்த்து பொங்கல் போல் செய்தும் சாப்பிடலாம்.