ஆரோக்கியம்

பிறந்த குழந்தை பாதுகாப்பு டிப்ஸ்… உங்கள் கவனத்திற்கு.

கல்கி டெஸ்க்

* பிறந்த முதல் இரண்டு வாரங்களுக்குள் BCG எனப்படும் TB நோய்த் தடுப்பு ஊசி இடது தோள் பட்டைக்கு கீழ் போடப்படவேண்டும்.

* போலியோ சொட்டு மருந்து (Oral Polio Vaccine) ஒரு முறை
தர வேண்டும்.

* B வகை மஞ்சள் காமாலை (Hepatitis B Vaccine) ஒரு முறை தொடையின் முன்புறத்தில் போட வேண்டும். இந்த ஊசி 45 நாட்களிலும் போடப்படலாம்.

* முதல் ஒரு மாதத்திற்கு சொட்டு மருந்து, கிரைப் வாட்டர் எதுவும் கொடுக்கக் கூடாது.

* குழந்தைக்கு அதிக வியர்வை வரக் கூடாது. அப்படி இருந்தால் இதயக் குறைபாடு இருக்கக் கூடும். மருத்துவ ஆலோசனை தேவை.

* எண்ணெய்க் குளியல், சாம்பிராணி, பவுடர், கிரீம்கள், லோஷன்கள் வேண்டாம். அதிக செலவு செய்து ஆலிவ் ஆயில் தடவி அடிக்கடி குளிப்பாட்டினாலும் சரும நிறம் வெளுக்காது. குழந்தையின் நிறம் மரபணு நிச்சயித்தி படிதான் அமையும்.

* ஒரு முறை பாட்டிலில் பால் கொடுத்து விட்டாலும் குழந்தை தாயின் மார்பில் அருந்த விரும்பாது. பாப்பாவுக்கு ‘நிப்பிள்’ குழப்பம் வந்து விடும்.

* பிறந்த முதல் ஒரு சில மாதங்களில் அழுகை ஒன்றுதான் குழந்தையின் மொழி, மற்றும் மக்கள் தொடர்பு சாதனம். பசித்தாலும் அழும், வலித்தாலும் அழும். தூக்கம் வந்தாலும் அழும். ஏக்கம் வந்தாலும் அழும். பிரித்துப் பார்த்து தாய் அறிய வேண்டும்.

* குழந்தைக்குப் பெயர் சூட்டுதல், தொட்டிலில் இடுதல் என்ற சடங்கு பல குடும்பங்களில் உள்ளது. அப்போது பலரும் குழந்தையைத் தொடலாம். முத்தம் கொடுக்கலாம். இதனால் கிருமித் தொற்று ஏற்படக் கூடும். குழந்தையை யாரும் முகத்துடன் முகம் சேர்த்துக் கொஞ்சக் கூடாது. கன்னத்தில், வாயில், நெற்றியில் முத்தம் கொடுக்கக் கூடாது. தேவையானால் உள்ளங்காலில் மட்டும் முத்தம் கொடுக்கலாம்.            

* குழந்தைக்குப் பவுடர் போடக்கூடாது. வியர்வை நாளங்கள் அடைபட்டு கிருமித் தொற்று உண்டாகும். ரோஜாவிற்கு மேக்கப் தேவையா?

* குழந்தைக்கான ஆடைகள், நகைகள் ஆகிய வற்றில் குழந்தைக்கு அலர்ஜி, காயங்கள் உண்டாகக் கூடிய பொருட்கள் இருக்கக் கூடாது. ஜரிகை வேலை, குந்தன் ஸ்டோன், சமுக்கி போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். நமக்கு குழந்தையின் பாதுகாப்புதானே முக்கியம் தாய்மார்களே!

பிக்கி உண்டியலின் வரலாறு தெரியுமா?

வேகமாகச் சுழலும் இறந்த நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்! 

இன்சுலின் சுரப்பை இயற்கையாக சீராக்க உதவும் எளிய உணவுகள்!

உடலில் மருக்கள் இருந்தால் சாதாரணமாக நினைக்காதீங்க… ஜாக்கிரதை! 

கனக விநாயகர் கணக்கு விநாயகர் ஆன கதை தெரியுமா?

SCROLL FOR NEXT