Healthy Foods https://www.freepressjournal.in
ஆரோக்கியம்

உடலுறுப்புகளைக் காக்கும் உன்னத உணவுகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

ம் உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் காப்பதற்கு நாம் புரதம், கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு, வைட்டமின் மற்றும் மினரல்கள் நிறைந்த உணவுகளைத் தேடித் தேடித் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருகிறோம். நம் உடலின் உள்ளிருக்கும் ஒவ்வொரு முக்கிய உறுப்புகளின் ஆரோக்கியதைக் காக்க உதவும் குறிப்பிட்ட சில வகை  உணவுகளும் உள்ளன. எந்தெந்த உணவுகள் எந்த உறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன என்ற விவரத்தை இந்தப் பதிவில் காணலாம்.

1. இதயம்: இதய ஆரோக்கியம் காப்பதில் பேக் (Baked) செய்யப்பட்ட உருளைக் கிழங்கு, புரூனே (உலர்ந்த பிளம்ஸ்), மாதுளம் பழம் ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன.

2. நுரையீரல்: புரோக்கோலி, ஸ்பிரௌட்ஸ் (Sprouts), போக் சோய் (Bok Choy) ஆகியவை நுரையீரல் ஆரோக்கியத்தைப் பலப்படுத்த பெரிதும் உதவி புரிகிறது.

3. கண்கள்: முட்டை, மக்காச் சோளம், கேரட் ஆகியவை நம் கண்களைக் 'கண்ணும் கருத்துமாய்க்' காக்கக் கூடியவை.

4. கோலன் (பெருங்குடல் பகுதி): பெருங்குடலின் ஒரு பகுதியாகிய கோலனை ஆரோக்கியமாய் வைத்திருக்க பீன்ஸ் மற்றும் லெக்யூம்ஸ் (பயறு வகைகள்) பெரிதும் உதவுகின்றன.

5. மூளை: மூளையின் ஆரோக்கியத்திற்கு வால்நட் மற்றும் சால்மன், துனா, சர்டைன்ஸ் போன்ற மீன் வகைகள் நல்ல முறையில் உதவி புரிபவை.

6. எலும்புகள்: எலும்புகளின் ஆரோக்கியம் காக்க பால் மற்றும் சோயா பீன்சில் தயாரிக்கப்பட்ட பானங்கள் அதிகளவில் உதவக் கூடியவை.

7. புரோஸ்டேட்: புரோஸ்டேட் என்னும் சுரப்பி சிறந்த முறையில் செயல்பட க்ரீன் டீ மற்றும் பச்சைக் காய்கறிகள் பெரிய அளவில் உதவி புரியும்.

மேற்கூறிய உணவுகளை நாமும் அடிக்கடி உட்கொண்டு ஆரோக்கியம் காப்போம்.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT