Nutrient given by fungus tuber known as Truffle https://www.rd.com/
ஆரோக்கியம்

ட்ரஃபிள் (Truffle) எனப்படும் பூஞ்சை கிழங்கு தரும் போஷாக்கு!

ஜெயகாந்தி மகாதேவன்

ட்ரஃபிள் என்பது, ஓக், பைன், ஹேஸல் நட் போன்ற மரங்களின் வேர்களுக்கருகில், (பூமிக்கடியில்) வளரக்கூடிய ஒரு பூஞ்சைத் தாவரம். உணவுப் பண்டங்களில் அதிக சுவை, மணம் ஊட்டுவதற்காக இது சேர்க்கப்படுவது. தனித்துவ மணம் கொண்ட இதை, 'சமையல் பொருள்களின் ஜுவல்' என்று கூறுகின்றனர். ஸ்பெயின், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்து வந்த இது காலப்போக்கில் பிற நாடுகளிலும் வளர்த்து வரப்படுகிறது. இவற்றிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

இதில் எண்ணற்ற ஊட்டம் தரும் என்ஸைம்கள், வைட்டமின்கள், மினரல்கள், கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளன. அமினோ ஆசிட் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இதை உணவுடன் சேர்த்து உண்ணும்போது கூடுதல் சகிப்புத் தன்மையுடன் உடலுழைப்பு செய்ய சக்தி கிடைக்கிறது. இதிலுள்ள பாலிஃபினால், பிளவோனாய்ட், ஃபினோலிக் காம்பௌண்ட் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் உடலிலுள்ள நச்சுக்களைக் களைய வல்லது.

ட்ரஃபிளில் அடுக்குகளாகக் காணப்படும் சல்போர்பேன் (Sulforaphane) என்ற கூட்டுப் பொருளானது ஆன்டி மைக்ரோபியல் குணம் கொண்டது. அவை உடலுக்குள் வளரும் எந்த வகையான தீங்கு தரும் நுண்ணுயிரிகளையும், தொற்று நோய்க் கிருமிகளையும் அழிக்கக் கூடியவை.

வைட்டமின் B 6 மற்றும் மினரல்கள் ட்ரஃபிளில் அதிகளவில் உள்ளன. அவை உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. மேலும், இதில் நிறைந்துள்ள பாலிசாச்சரைட் என்ற பொருள் வீக்கத்தைக் குறைக்கும் குணம் கொண்டது. கேன்சர் செல்களை அழிக்கவும், மற்ற செல்களை சிதைவடையாமல் காக்கவும் உதவுகிறது.

ட்ரஃபிள், உடலில் தேவைக்கு அதிகமாக உள்ள கொழுப்பைக் குறைத்து இரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிக்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து உண்ணும்போது பலவிதமான இதயநோய்க்கு ஆளாகும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது. ட்ரஃபிள், ஜீரண மண்டல அனைத்து உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கு உறுதுணை புரிகிறது. இரைப்பை-குடல் சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளுக்கும் தீர்வளிக்கிறது.

குறைந்த கலோரி ரெசிபிகளில் ட்ரஃபிள் சேர்ப்பதால் எடை அதிகரிக்காமலும் எனர்ஜி குறையாமலும் உடம்பை வைத்துக்கொள்ள முடிகிறது. இது கேன்சரை எதிர்த்துப் போராடும் குணம் கொண்டுள்ளது என்பதை பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. ஈரல் மற்றும் நுரையீரலில் வளரக்கூடிய கேன்சர் செல்களை வளரவிடாமல் தடுக்கும் குணம் இதற்கு உண்டு. இதை பாஸ்தா, ரிசொட்டோ (Risotto) போன்றவற்றுடன் சேர்த்து சமைக்கலாம். சாஸ், பட்டர், ஆயில் வடிவிலும் உணவுடன் சேர்த்து உண்ணலாம். துருவிய ட்ரஃபிளை சாலட், மீன், இறைச்சி ஆகியவற்றின் மீது தூவி அலங்கரித்து உண்ணலாம்.

குறிப்பிட்ட காலநிலையில் வளரக்கூடியதும், வளர்ந்து பலன் கொடுக்க நீண்ட காலம் எடுத்துக்கொள்வதும், ஈடிணையற்ற மணமும், சுவையும், சத்துக்களும் கொண்ட தாவரமாக இருப்பதால் இதன் விலை மிக அதிகம். நான்கு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் இக்கிழங்கில், கருமை நிறம் கொண்ட ட்ரஃபிளை 'கருப்பு வைரம்' என்றே அழைக்கின்றனர்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT