Padikaram 
ஆரோக்கியம்

படிகாரம் பரிகாரத்துக்கு மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்துக்கும்தான்!

ம.வசந்தி

டிகாரம், சீனக்காரம், ஆலம், பிட்காரி என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இயற்கையாக உருவாகும் கற்கண்டு போன்ற கல்லான படிகாரம் பாரம்பரிய மருத்துவ முறையிலும், சரும பளபளப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. சரும தொற்றுக்கு: படிகாரத்தில் உள்ள நுண்ணுயிர்கள் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிரான குணங்கள், சரும நோய்களுக்கு தீர்வளித்து, வீக்கத்தைக் குறைக்கிறது. சருமத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் படிகாரத்தை கரைத்து தடவினால் அந்த இடத்தில் அது குணமளிக்கிறது.

2. துர்நாற்றம் நீங்க: படிகாரம் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் வியர்வை நுண்ணுயிர்களைப் போக்கி, துவாரங்களை அடைத்து வியர்வையை குறைக்கும் இயற்கை நிவாரணியாகும்.

3. ஷேவிங்: ஆண்கள் தங்கள் முகத்தை ஷேவ் செய்த பின்னர் படிகாரத்தை பயன்படுத்தி சருமத்தை குளுமையாக்கி, தொற்றுக்களை அடித்து விரட்டி, ஷேவ் செய்ய பயன்படுத்தும் ரேசர்கள் ஏற்படுத்தும் எரிச்சலைப் போக்கி, காயங்களை குணமாக்கி சருமத்தை மிருதுவாக்குகிறது.

4. வாய்ப்புண்ணை ஆற்றுகிறது: வாயில் ஏற்படும் அல்சர், வாய்ப்புண் மற்றும் வாயில் ஏற்படும் அசௌகரியங்களை போக்குகிறது. படிகாரத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மவுத் வாஷ்கள், வாயில் உள்ள காயங்களை விரைந்து குணப்படுத்துகின்றன.

5. தண்ணீரை சுத்தமாக்குகிறது: படிகாரம் மாசு கலந்த தண்ணீரில் உள்ள மாசுக்களை அகற்றி, தண்ணீரை வடிகட்டி, சுத்தம் செய்வதை எளிதாக்கி, தூய்மையாக பருகும் அளவுக்கு ஏற்ற தண்ணீரை வழங்குவது நமது பாரம்பரிய முறைகளுள் ஒன்றாக உள்ளது.

6. ஈறுகளை இறுக்கமாக்குகிறது: படிகாரம், கிராம்பு இரண்டையும் பொடியாக்கி டூத் பேஸ்ட்டாக பயன்படுத்த ஈறுகளை இறுக்கமாக்கி பற்களை பாதுகாத்து நல்ல தோற்றத்தைத் தருகிறது.

7. முகப்பருக்களை குணப்படுத்துகிறது: படிகாரத்தில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் முகப்பருக்கள் உள்ள இடத்தில் பூச, பருக்களை அடித்து விரட்டி, பாக்டீரியாக்களைப் போக்கி வீக்கத்தைக் குறைக்கிறது.

8. பாத வெடிப்புக்கு சிகிச்சையளிக்கிறது: படிகாரத்தை சேர்த்த தண்ணீரில் பாதத்தை அரை மணி நேரம் ஊற வைக்க பாதத்தில் உள்ள பூஞ்சைகள் மற்றும் கிருமிகளைப் போக்குவதோடு, பாத வெடிப்பையும், வறட்சியை நீக்கிப் பாதத்தை மிருதுவாக்குகிறது.

சலூன் கடைகளில் மட்டும் நாம் பெரும்பாலும் பார்த்த படிகாரத்தை மேற்கண்ட முறையில் பயன்படுத்தி பலன் பெறுவோம்.

சத்தான முறுக்கு வகைகள்!

திருப்பதி லட்டுக்கே அல்வா கொடுத்த ஜெகன் மோகன் ரெட்டி!

உலர் உச்சந்தலையும் (Dry scalp) பொடுகும் ஒன்றா? வேறு வேறா?

Baakiyalakshmi update: பாக்கியாவை பழி வாங்கத் துடிக்கும் கோபி… வலையில் சிக்கிக்கொள்வாரா பாக்கியா?

இது என்னது,  வித்தியாசமான தழும்பா இருக்கே? 

SCROLL FOR NEXT