பப்பாளி இலை சாறு 
ஆரோக்கியம்

புற்றுநோய் கட்டிகளை கரைத்து குணப்படுத்தும் பப்பாளி இலை சாறு!

பொ.பாலாஜிகணேஷ்

மது இந்திய நாட்டில் புற்றுநோய் மிக வேகமாகப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது மிகவும் கவலை தரும் விஷயம். இயற்கையாகவே புற்றுநோயை குணப்படுத்த நிறைய வழிகள் உண்டு. ஆனால், இயற்கை வைத்தியம் என்றால் கொஞ்சம் தாமதமாகும். ஆனால், நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.

நோய்களில் பெரிது என்றால் அது புற்றுநோயாகத்தான் இருக்கும். உடலை உருக்குலைத்து நோயுற்றவரை கொல்லக் கூடியது. உலகில் பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோய் வந்த அறிகுறிகள் கூட தெரியாமல் பலர் இறந்துள்ளனர். அவ்வளவு கொடியது இந்த நோய். புற்றுநோய் உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை முற்றிலும் பாதிக்க செய்து, உயிரை பறித்துவிடும்.

முதல் நிலை புற்றுநோயை சரி செய்ய முடியும் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், மிகவும் கடுமையான நிலைக்கு புற்றுநோய் முற்றிவிட்டால் அவர்களை குணப்படுத்துவது கடினம். இவ்வளவு கொடிய நோயை சரி செய்ய பப்பாளி இலைகளே போதுமானது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இது உண்மைதானா என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

புற்றுநோயை உருவாக்குவது புற்றுநோய் செல்களே. ஆரம்பத்தில் சிறிய கட்டிகள் போன்று தோன்றி பிறகு பெரிதாகும். கொழுப்புக் கட்டிகள் போல இருக்கும் இவை குறைந்த காலத்திலேயே அதிக எண்ணிக்கையுடன் பல மடங்காகும். இவற்றின் எண்ணிக்கையை பொறுத்தே அவற்றின் நிலை அறியப்படும்.

அதாவது, அதிக எண்ணிக்கையில் இந்த செல்கள் இருந்தால் பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பது கடினம். பொதுவாகவே, நாம் எந்தப் பழத்தின் இலைகள் என்றாலும் அதை கண்டுகொள்ளவே மாட்டோம். ஆனால், இந்த பப்பாளி இலையில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் உள்ளதால் உடலில் பல நன்மைகளை செய்ய கூடியது.

எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செல்களை பலமாக வைக்க உதவும். ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகம் இருப்பதால் உடலுக்கு வலிமை தரும். புற்று நோய் செல்களை அழித்து, இனி அவை உடலில் வராத அளவிற்கு பாதுகாப்பை ஏற்படுத்தும். பப்பாளி இலையின் சாற்றைக் கொண்டு கல்லீரல், கணையம், நுரையீரல் ஆகியவற்றில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த முடியும்.

பல ஆராய்ச்சிகள் பப்பாளி இலையை சாப்பிட்டால் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்றே சொல்கிறது. ‘பாப்பின்’ (papain) என்ற நொதி பப்பாளி இலையில் உள்ளது. இது இரத்த நாளங்களை சரி செய்து நோயற்ற வாழ்வை தரும். குணப்படுத்த முடியாத பல நோய்களையும் இது குணபடுத்தும் ஆற்றல் பெற்றது. குறிப்பாக, புற்றுநோயை சரி செய்ய அசிடோஜெனின் (acetogenin) என்ற மூலப்பொருள் உதவுகிறது. சிதைவடைந்த இரத்த செல்களை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்து உடல் நலத்தை பாதுகாக்கிறது.

பப்பாளி இலையை ஒரு தெய்வீக மூலிகை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அதில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலுக்குத் தேவையான ஆரோக்கியம் அனைத்தும் அடங்கி இருக்கிறது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT