Plant leaves and their uses
Plant leaves and their uses 
ஆரோக்கியம்

ஆரோக்கிய நன்மை தரும் ஏழு தாவர இலைகளும் அவற்றின் பயன்களும்!

ஜெயகாந்தி மகாதேவன்

வைட்டமின் A, இரும்புச்சத்து, ஃபோலேட், மாங்கனீஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்த புதினா இலை, வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், உண்ணும் உணவு நல்ல முறையில் ஜீரணமாகவும் உதவுகிறது. இந்த இலைகளை வாயில் போட்டு மென்று தின்னலாம். மற்ற காய்களோடு சேர்த்து ஸ்மூத்தியாக்கியும் பயன்படுத்தலாம்.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய வேப்பிலை உடல் வலியை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கம் குறைக்கவும், பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவக்கூடிய மருத்துவ குணங்கள் கொண்டது. மேலும் தொற்று நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி அழிக்கவும், வயிற்றில் உள்ள தீமை செய்யும் புழுக்களை அழித்து வெளியேற்றவும் செய்யும்.  இதன் கொழுந்து இலைகளை வாயில் போட்டு மென்று தின்னலாம். இலைகளை அரைத்து சாறு பிழிந்து வெறும் வயிற்றில் அருந்தலாம்.

பல வகை மருத்துவ குணம் கொண்ட துளசி இலைகள் உள்மனதின் வேதனை, மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்கி மன அமைதி தர வல்லது. துளசி டீ, குளிருக்கும் தொண்டை வறட்சிக்கும் இதமளித்து, அதிலிருந்து விடுபடவும் உதவும்.

ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிமைக்ரோபியல் குணங்கள் கொண்ட கறிவேப்பிலை இலைகள் வாய் வழி சுகாதாரத்தை மேம்படுத்தக் கூடியவை. மேலும், இரத்த சர்க்கரை அளவையும் கொழுப்பின் அளவையும் சம நிலையில் வைக்க உதவும். இந்த இலைகள் சமையல் ரெசிபிகளில் அநேக உணவுகளில் சேர்க்கப்படுபவை. காலையில் வெறும் வயிற்றில் நான்கைந்து ஃபிரஷ் கறிவேப்பிலைகளை மென்று தின்பது உடலுக்கு அதிக பலனளிக்கும்.

அதிகளவு வைட்டமின் A, C உள்ளடக்கிய பார்ஸ்லி இலைகள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை இயற்கையான முறையில் வெளியேற்றுபவை. ஈரல் மற்றும் கிட்னியின் செயல்பாடுகளை சிறந்த முறையில் ஆற்ற உதவும்.

பல வகையான ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெந்தயக் கீரை (phytonutrients) குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவாதலால், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். இதிலுள்ள அதிகளவு கால்சியம் ஆஸ்டியோபொரோசிஸ் நோய் வராமல் பாதுகாக்கும். நல்ல பசியைத் தூண்டி செரிமானத்தை ஊக்குவிக்கும்.

முகப்பருவை நீக்க உதவும் அற்புதத் தாவரம் வெற்றிலை. இது வாய் துர்நாற்றத்தை நீக்கி, பற்சிதைவை தடுக்கும். ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டி ஆக்சிடேடிவ் குணங்களைக் கொண்டுள்ளதால் வெற்றிலை உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரக்கூடியது.

இவ்வாறு இயற்கை முறையில் உடலுக்கு நலம் தரும் தாவர இலைகளை உணவோடு சேர்த்துப் பயன்படுத்தி நலம் பெறுவோம்.

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT