Sesame Oil Vs Coconut Oil: Which Is Better For Health? Image Credits: YouTube
ஆரோக்கியம்

நல்லெண்ணெய் Vs தேங்காய் எண்ணெய்: ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது?

நான்சி மலர்

ரும ஆரோக்கியத்திற்கும், சமையலுக்கும் தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகிய இரண்டையுமே பயன்படுத்துகிறோம். இரண்டிலுமே அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இருப்பினும், இந்த இரண்டு எண்ணெய்யில் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

நல்லெண்ணெய் எள்ளில் இருந்து எடுக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக இந்த எண்ணெய்யை மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். ஆசிய நாடுகளில் இந்த எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். இதில் இருக்கும் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டதாகும்.

நல்லெண்ணெய்யில் அதிக அளவில் வைட்டமின் மற்றும் மினரல் சத்து உள்ளது. இது இரண்டுமே முடி வளர்ச்சிக்கு பயன்படுகிறது. இந்த எண்ணெய்யை மாய்ஸ்டரைஸர் மற்றும் கண்டீஷ்னராக தலைமுடி பராமரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த எண்ணெய்யில் அதிகமாக வைட்டமின் ஈ உள்ளது. அது சருமத்தை சேதமடையாமல் பாதுகாக்கும். மேலும். இது ஆக்னே மற்றும் பிக்மெண்டேஷன் போக்கவும் உதவுகிறது.

இந்த எண்ணெய்யை உணவில் எடுத்துக்கொள்வதால், அதிக இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதியைப் போக்குகிறது. இந்த எண்ணெய்யில் அதிக அளவில் மெக்னீசியம் உள்ளது. இதில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதால், அதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்பு சொரியாசிஸ் மற்றும் டெர்மாடிட்டீஸை போக்கும்.

தேங்காய் எண்ணெய் அழகுப் பராமரிப்பிற்கும் மற்றும் சமையலுக்கும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறோம். தேங்காய் எண்ணெய்யில் இயற்கையாகவே இருக்கும் Medium chain Triglycerides குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு மட்டுமில்லாமல், உடலில் உள்ள கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.

தேங்காய் எண்ணெய்யில் உள்ள அதிக அளவிலான Lauric acid தலைமுடியின் வேர் வழியே இறங்கி தலைமுடியை  ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்கிறது. அதிகமாக முடி உடையும் அல்லது பாதிக்கும் நபர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.

இதில் அதிகமாக உள்ள Fatty acids சருமத்தில் மாய்ஸ்டரைசராக செயல்பட்டு சருமத்தை பாதுகாக்கிறது. தேங்காய் எண்ணெய்யில் உள்ள Medium chain triglycerides மூளையை அறிவாற்றலோடு செயல்பட உதவுகிறது. உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவுகிறது. இதில் இருக்கும் Medium chain fatty acids மெட்டபாலிசத்தை அதிகரித்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை குறைப்பதால், உடல் எடை குறைப்பிற்கு வழிவகுக்கிறது.

நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டுமே அதிக ஆரோக்கிய பயன்களைக் கொண்டிருக்கிறது. இதில் எதைப் பயன்படுத்த வேண்டும் என்பது ஒருவருடைய தேவையைப் பொறுத்ததேயாகும். உடலை மசாஜ் செய்ய நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்.

இதில் அழற்சி எதிர்ப்புத்தன்மை உள்ளதால் சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கு நல்லதாகும். தேங்காய் எண்ணெய் மாய்ஸ்டரைசர், சன் ஸ்கிரீன், மேக்கப் ரிமூவர் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. Medium chain triglycerides உடலில் வேகமாக மெட்டபாலிசம் நடப்பதற்கு உதவுகிறது. உணவு மற்றும் சரும பராமரிப்பிற்கு இந்த இரண்டு எண்ணெய்யுமே நல்ல சாய்ஸ் ஆகும்.

அவசர காலத்தில் விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? 

உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுக்கும் 8 விஷயங்கள் எவை தெரியுமா?

கருப்பு ஆப்பிள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அடிக்கடி ஜெல்லி மிட்டாய் சாப்பிடுபவரா நீங்க? போச்சு போங்க..! அப்போ உங்களுக்கும் இந்த விஷயம் தெரியாதா?

கதைகளை எங்கிருந்து எடுக்கலாம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

SCROLL FOR NEXT