தற்காலத்தில் நாற்பது வயதைத் தாண்டி விட்டாலே தாடி, மீசை, தலைமுடி என எல்லா இடங்களிலும் கிரே ஹேர் (Grey Hair) தோன்றி, பெப்பர் சால்ட் லுக் வந்துவிடுகிறது. இதைத் தடுக்க நம் உணவில் தடை செய்ய வேண்டிய 10 வகை உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. காஃபின்: நாம் அதிகளவு காபி அருந்தினால் அதிலுள்ள காஃபின் நம் உடலுக்குள் இரும்புச் சத்து உறிஞ்சப்படும் செயலில் குளறுபடி உண்டுபண்ணும். இதனால் முடியின் வேர்க்கால்களின் அருகில் உள்ள நுண்ணறைகள் பலமிழந்து சீக்கிரமே நரை முடி தோன்ற ஆரம்பித்து விடும்.
2. ஆல்கஹால்: வைட்டமின் B, சிங்க் மற்றும் காப்பர் சத்துக்கள் நம் முடியை கருமை நிறம் மாறாமல் பாதுகாத்து இள நரையைத் தடுக்க உதவுபவை. ஆல்கஹால்அருந்தினால் இச்சத்துக்கள் அளவில் குறைந்து கிரே ஹேர் வளர வாய்ப்பாகிவிடும்.
3. சர்க்கரை: சர்க்கரை சேர்ந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால் ஊட்டச்சத்துக்களின் அளவில் குறைபாடு உண்டாகும். அது சருமத்துக்கு அருகில் இருக்கும் கொலாஜனை சேதப்படுத்தி முடி வளர்ச்சி பலவீனமடையவும் கிரே ஹேர் தோன்றவும் காரணியாகிவிடும்.
4. கார்பனேட்டட் ட்ரிங்க்ஸ்: இவற்றில் உள்ள அதிகளவு சர்க்கரை மற்றும் இரசாயனங்கள் முடிக்கு நிறம் தரக்கூடிய நிறமிகளுக்கு கிடைக்கும் ஊட்டச் சத்துக்களில் குறைபாட்டை உண்டுபண்ணிவிடும். அதனால் கருப்பு நிறம் மாறி கிரே ஹேர் தோன்ற ஆரம்பித்துவிடும்.
5. பொரித்த உணவுகள்: இந்த வகையான உணவுகளில் உள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உடலில் வீக்கங்கள் உண்டுபண்ணவும், முடிக்கு கருமை நிறம் தர உதவும் மெலனின் உற்பத்தி குறையவும் செய்துவிடும். இதுவே முடி நரைக்கவும் காரணமாகிவிடும்.
6. அதிகமாக பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ்: சிப்ஸ் மற்றும் க்ராக்கர்ஸ் போன்ற ஸ்நாக்ஸ்களில் உள்ள ஊட்டச் சத்துக்கள், பதப்படுத்தப்படும் செயலில் மிகவும் குறைந்துவிடும். ஊட்டச்சத்து குறைபாட்டினால் வழக்கத்துக்கு முன்பே வெள்ளை முடி வளர ஆரம்பித்துவிடும்.
7. ரிஃபைன்ட் கார்போ ஹைட்ரேட்ஸ்: ஒயிட் பிரட், பாஸ்தா மற்றும் அரிசி சாதம் போன்ற உணவுகள் அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட பொருள்களால் தயாரிக்கப்படுவதால், இவற்றில் உள்ள ஊட்டச் சத்துக்கள் மிகவும் குறைந்து, இனிப்புச் சத்தின் ஆதிக்கம் அதிகமாகிவிடும். இதுவும் முடியின் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டுபண்ணி கிரே ஹேர் தோன்ற வாய்ப்பளிப்பதாகும்.
8. ஜங்க் ஃபுட்: ஜங்க் ஃபுட் அதிகளவு ஆரோக்கியமற்ற கொழுப்புகள் கொண்டது. இதில் ஊட்டச்சத்துக்களும் மிகவும் குறைவு. இவற்றை உண்பதால் சீக்கிரமே முதுமைத் தோற்றம் பெறவும், முடியின் ஆரோக்கியம் மற்றும் கருமை நிறத்தை இழக்கவும் வேண்டிய நிலை உருவாகும்.
9. அதிகளவு சால்ட்: உணவில் அதிகப்படியாக உப்பு சேர்த்து உண்பதால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு உடல் ஊட்டச் சத்துக்களை உறிஞ்சுவதில் சிரமம் ஏற்படும். இதுவும் சீக்கிரமே கிரே ஹேர் தோன்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கிவிடும்.
10. கேன்ட் ஃபுட்ஸ்: டின்களில் அடைக்கப்பட்டு வரும் (Canned) உணவுகளில், அவற்றை நீண்டநாள் உபயோகப்படுத்த உதவும் வகையில் இரசாயனப் பொருள்கள் கலக்கப்படுவதுண்டு. இது மெலனின் உற்பத்தியைக் குறைத்துவிடும். இதனால் முடி வெண்மை நிறம் பெற்றிட வாய்ப்பாகிவிடும்.
முதுமைக்காலம் வரும் வரை கரு கரு முடியைத் தக்க வைத்துக்கொள்ள விரும்புவோர் மேற்கூறிய 10 வகை உணவுகளை தொலைவில் ஒதுக்கி வைத்தாலே போதுமானது.