Type 1 நீரிழிவு நோயானது உடலால் போதிய அளவு இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாததால் ஏற்படும் ஒரு நிலையாகும். இது Type 2 நீரிழிவு போலல்லாமல் சில வாழ்க்கை முறை காரணங்களால் உருவாகலாம். இந்த வகை நீரிழிவு பொதுவாக குழந்தை பருவத்திலோ அல்லது இளமை பருவத்திலோ கண்டறியப்படுகிறது. இருப்பினும் இது எந்த வயதிலும் ஏற்படலாம். சரி வாருங்கள் இப்பதிவில் Type 1 நீரிழிவுக்கான அறிகுறிகளைத் தெரிந்து கொள்வோம்.
கவனிக்க வேண்டிய அறிகுறிகள்:
டைப் 1 நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று அதிகப்படியான தாகம். சிறுநீர் வழியாக அதிகப்படியான குளுக்கோஸ் உடலை விட்டு வெளியேறுவதால், நீரிழிப்புக்கு வழி வகுத்து, அதிக திரவத்தைக் குடிக்கத் தூண்டுகிறது.
சிறுநீரகங்கள் ரத்தத்திலிருந்து அதிகப்படியான குளுக்கோசை வடிகட்ட அதிக நேரம் வேலை செய்வதால், அதிகப்படியான சிறுநீர் உற்பத்தி செய்யப்பட்டு, அவ்வப்போது சிறுநீர் கழிக்க நேரிடலாம்.
அதிகப்படியான பசி ஏற்பட்டு முறையாக உணவு உட்கொண்டாலும், Type 1 நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரிக்க முடியாத திடீர் எடை இழப்பை சந்திக்கலாம்.
உடல், குளுக்கோசை சரியாக பயன்படுத்த முடியாததால், செல்கள் அதன் ஆற்றலை இழந்து தொடர்ச்சியான பசி மற்றும் அதிக உணவு உட்கொள்ளகளுக்கு வழிவகுக்கும்.
போதுமான குளுக்கோஸ் செல்களுக்குள் செல்லாமல் போவதால், உடலுக்குப் போதிய ஆற்றல் கிடைக்காமல் சோர்வு, பலவீனம் மற்றும் சோம்பல் ஏற்படும்.
உயர் ரத்த சர்க்கரை அளவுகள், கண்களின் லென்ஸில் உள்ள திரவத்தை உறிஞ்சிக் கொள்வதால், பார்வைத்திறன் பாதிக்கப்படலாம்.
ரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மனநிலையில் மாற்றங்களைக் கொண்டு வரும்.
நீரிழிவு நோய் ரத்த ஓட்டத்தை பாதிப்பதால், நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனம் அடைகிறது. இது வெட்டுக் காயங்கள், புண்கள் மற்றும் தொற்று நோய்களின் குணப்படுத்தும் செயல்முறையைத் தாமதப்படுத்தும்.
இந்த வகை நீரிழிவு நோய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கத் தவறினால், சில கடுமையான சந்தர்ப்பங்களில், குமட்டல், வாந்தி வயிற்று வலி போன்றவற்றால் மோசமான நிலை ஏற்படலாம்.
எனவே இந்த வகையில் நீரிழிவு நோயின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து, சிகிச்சையைத் தொடங்குவது முக்கியமாகும். உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ மேற்கூறிய அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம். Type 1 நீரிழிவு நோய்க்கு தற்போது எவ்விதமான குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லை என்றாலும், இன்சுலின் சிகிச்சை, ரத்த சர்க்கரை கண்காணிப்பு, ஆரோக்கியமான உணவு, முறையான உடற்பயிற்சி மற்றும் தொடர் மருத்துவப் பராமரிப்பு மூலமாக இந்த நோயால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும்.