சாமை ஒரு சிறு தானிய வகையாகும். இதில் உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, கால்சியம், நார்ச்சத்து, தயமின், நியாஸின் போன்றவை அடங்கியுள்ளது. இது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைவாகவே உயர்த்துகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சாமையை உணவாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிவதில்லை. இந்த பதிவின் வாயிலாக அதை நாம் தெரிந்து கொள்வோம்.
சாமையில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் குளூட்டன் இல்லை. எனவே குளூட்டன் அலர்ஜி உள்ளவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும். எனவே மற்ற உணவுகளுடன் இதை கலந்து தாராளமாக சாப்பிடலாம். கோதுமை பிடிக்காதவர்கள் அதற்கு மாற்றாக சாமையை உட்கொள்வதால் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.
இதில் அதிகப்படியான நார்ச்சத்து நிறைந்துள்ளதால் நம்முடைய செரிமான மண்டலத்தை பலப்படுத்தி குடல் இயக்கத்தை சிறப்பாக ஊக்குவிக்கிறது. எனவே சாமை உட்கொள்வதால் நமது செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் நம்முடைய ரத்த சர்க்கரை அளவை பராமரித்து நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு நன்மை பயக்கிறது. இதன் ஆற்றல் அளிக்கும் தன்மை, உடலுக்குத் தேவையான சக்தியை உடனடியாக கொடுத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும்.
குறிப்பாக சாமையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது உங்களை மன அழுத்த பாதிப்பிலிருந்து காக்கும். மேலும் நாள்பட்ட நோய்கள் உங்களை அண்டாமல் பாதுகாக்கும். நம்முடைய திசுக்கள் சேதம் அடையாமல் ஆன்டி ஆக்சிடென்ட் செல்கள் தடுக்கிறது. எனவே சாமை உட்கொள்வதால் புற்றுநோய் பாதிப்பு தடுக்கப்படும்.
ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாக சாமை அமைகிறது. இதனால் இதய நோய்கள் ஏற்படாது. மேலும் நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளையும் சரி செய்கிறது. நார்ச்சத்து மிகுந்த சாமை சிறப்பான குடல் இயக்கத்திற்கு வழிவகுத்து கூடுதல் ஆரோக்கியத்தை குடலுக்கு வழங்குகிறது. இதன் மூலமாக நம் உடல் கழிவுகள் வெளியேறிவதில் எந்த பிரச்சனைகளும் ஏற்படாது. அடிக்கடி சாமையை உணவில் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.
எனவே இதை நீங்கள் உங்கள் உணவில் தினசரி சேர்த்துக் கொண்டால் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.