Soap Vs Body Wash Image Credits: Shinagawa Philippines
ஆரோக்கியம்

Soap Vs Body Wash: உடல் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

நான்சி மலர்

ம் உடலை புத்துணர்வாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள தினமும் குளிக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு குளிப்பதற்கு சோப் பயன்படுத்தி வந்தோம். தற்போது சந்தையில் பாடி வாஷ் அதற்கு மாற்றாக வந்து விட்டது. எனவே, இதில் எதைப் பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும் என்பதைப் பற்றி காண்போம்.

நம் உடலில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் எண்ணெய்யை நீக்குவதற்காகவே சோப் மற்றும் பாடி வாஷ் பயன்படுத்துகிறோம். சோப் கடுமையான செயல்முறைகள் மூலம் உருவாக்கப்படுகிறது. இதுவே பாடி வாஷ் உருவாக்க சற்று லேசான செயல்முறையே போதுமானதாக உள்ளது.

சோப்பில் தண்ணீர் இல்லாததால், அதில் பாக்டீரியா உருவாகும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. அது மட்டுமில்லாமல், இதை Package செய்வதற்கு குறைந்த செலவே ஆகிறது. சோப்பில் அதிகமாக PH இருப்பதால், சருமத்தில் வறட்சி உருவாகும் பிரச்னைகள் ஏற்படலாம். சோப்புகளைப் பயன்படுத்தும்போது, சில நேரங்களில் அதன் பிசுக்குத்தன்மை சருமத்திலிருந்து போகாமல் அப்படியே தங்கிவிடும். அது சிலருக்குப் பிடிக்காது.

பாடி வாஷ்ஷில் மென்மையான, ஈரப்பதம் கொண்ட பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது நிறைய மக்களைக் கவர்கிறது. சில பாடி வாஷ்ஷில் Emollients மற்றும் Ceramides உள்ளது. இது சருமத்தில் உள்ள எண்ணெய்யை பாதிக்காமல் சருமத்தை மிருதுவாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

சோப்போடு ஒப்பிடுகையில் பாடி வாஷ் பாட்டில்களில் வருவதால், சுகாதாரமாகக் கருதப்படுகிறது. தண்ணீர் இதில் படாமல் இருப்பதால், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் உருவாகாமல் இருக்கும். இதில் உள்ள PHன் அளவு சருமத்தின் PH அளவிற்கு இணையாக இருப்பதால் சருமத்தை வறட்சியிலிருந்து பாதுகாக்கிறது.

உங்களுடைய சருமத்தில் உணர்திறன் அதிகமாக இருந்தால், சோப் பயன்படுத்துவது சிறந்தது. உங்களுடைய சருமம் வறண்டு காணப்பட்டால், பாடி வாஷ் பயன்படுத்துவது நல்லதாகும். பாடி வாஷ் பயன்படுத்துவதால், சருமத்தில் மாய்ஸ்டரைசாக செயல்பட்டு ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளும்.

பாடி வாஷ் மிகவும் லேசாகவும், மென்மையாகவும் இருப்பதால் Eczema, Acne போன்ற பிரச்னைகள் உள்ளவர்களும் பயன்படுத்தலாம். எனவே, சோப் மற்றும் பாடிவாஷ் இரண்டிலுமே அதிகப் பயன்கள் இருந்தாலுமே, ஒருவருடைய தேவை, சரும வகை, அதற்கு ஏற்ற பராமரிப்பை வைத்து எதை வாங்க வேண்டும் என்று முடிவெடுப்பது சிறந்ததாகும்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT