Some healthy foods to relieve stress https://www.houseofwellness.com
ஆரோக்கியம்

மன அழுத்தத்தை அறவே நீக்கும் சில ஆரோக்கிய உணவுகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

ந்த நவீன யுகத்தில் கவலையே இல்லாத மனிதரைக் காண்பது அரிது. அதேபோல் சிறிதும் மன அழுத்தமின்றி நூறு சதவிகிதம் மகிழ்ச்சியுடன் காணப்படும் மனிதரைச் சந்திப்பதும் அரிது. இந்த மாதிரியான சூழ்நிலையில் மருத்துவ உதவியை நாடாமல் நாம் உண்ணும் உணவுகளின் வழியாகவே கவலைகளிலிருந்தும் மன அழுத்தங்களிலிருந்தும் சுலபமாக விடுபட முடியும். அதற்கு நாம் உட்கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

* அவகோடா மற்றும் வாழைப் பழங்களில் வைட்டமின் B6 அதிகளவில் நிறைந்துள்ளது. இது மனச்சோர்வை நீக்கி, புத்துணர்வு அளிக்கும். செரடோனின் (Serotonin) என்ற ஹார்மோன் சுரப்பி நன்கு வேலை செய்வதற்கும் உதவி புரிகிறது. இதனால் மனநிலை மேன்மையுறுகிறது; மன அழுத்தம் குறைகிறது.

* ப்ளூபெரி பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளன. இவை மன அழுத்தம் காரணமாக உண்டாகும் தீய விளைவுகளை எதிர்த்துப் போராடி ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க உதவும் குணம் கொண்டவை.

* சால்மன் மீனில் உள்ள ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் மூளையில் ஏற்படும் வீக்கங்களைக் குறைத்து நல்ல மனநிலை உருவாக உதவுகின்றன.

* பசலை மற்றும் காலே போன்ற பச்சைக் கீரைகளில் நிறைந்துள்ள வைட்டமின்களும் கனிமச் சத்துக்களும் மனக் கவலைகளையும் அழுத்தங்களையும் நீக்க உதவி புரிகின்றன.

* தாவர வகைக் கொட்டைகள் மற்றும் விதைகளில் நிறைந்துள்ள மக்னீசியம் சத்தானது மன அழுத்தத்தைக் குறைத்து உடல் நன்கு தளர்ச்சியுற உதவுகின்றன.

* மூலிகை டீ அருந்துவது உடலுக்கு வெது வெதுப்பைக் கொடுத்து, அமைதியான மனநிலையைத் தருகிறது; இதனால் கவலைகளும் மன அழுத்தங்களும் நீங்குகின்றன.

* டார்க் சாக்லேட்களில் அடங்கியிருக்கும் வேதியல் மற்றும் உணர்வுப்பூர்வ அடிப்படையிலான தாக்கங்கள் ஸ்ட்ரெஸ்ஸை கணிசமான அளவிற்குக் குறைக்க வல்லவை.

மேற்கூறிய ஆரோக்கிய  உணவுகளை அடிக்கடி உட்கொண்டு கவலைகளை விரட்டுவோம்; மகிழ்ச்சியான வாழ்வு பெறுவோம்!

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

SCROLL FOR NEXT