National Cancer Awareness Day 
ஆரோக்கியம்

புற்றுநோய் வரும்முன் காக்க சில யோசனைகள்!

நவம்பர் 7, தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

கோவீ.ராஜேந்திரன்

மது உணவில் காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் சேர்த்து வந்தோமானால், அவை புற்றுநோயை வருமுன் தடுக்க வல்லவை என்பது துருக்கியில் நடைபெற்ற ஊட்டச்சத்து தொடர்பான கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. காய்கறிகளும் பழங்களும் ஆயுளை நீட்டிக்க உதவுவதோடு, பல வகையான புற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பு தருபவை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. புற்றுநோயை வருமுன் தடுப்பதற்கு பழங்களையும் காய்கறிகளையும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். குறிப்பாக, கழுத்து, தலை, வாய், தொண்டை, உணவுக் குழாய் புற்றுநோய் பாதிப்பு வருவதைக் தடுக்க இவை பெரிதும் உதவும் என்கிறார்கள். இவற்றோடு அன்றாடம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மற்றவர்களை விட 34 சதவீதம் புற்றுநோய் பாதிப்பு குறையும் என்கிறார்கள்.

புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள டாப் 10 விஷயங்கள்:

புகைப்பிடித்தல், அதிகப்படியான உடல் எடை, மது அருந்துதல், அல்ட்ரா வயலட் கதிர்வீச்சுக்கு ஆளாவது, குறைந்த உடல் உழைப்பு வாழ்க்கை முறை, HPV நோய் தொற்று தாக்குதல், காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைவாக சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவு, நார்ச்சத்து குறைந்த உணவு, H pylori நோய் தொற்று, சிவப்பு இறைச்சியை அதிகம் சாப்பிடுவது, ஹெப்பாட்டைஸ் சி மற்றும் பி வைரஸ் தொற்று தாக்குதல், HIV நோய் தொற்று, கால்சியம் குறைபாடு (லோ டையட்டரி கால்சியம்), செகண்ட் ஹேன்ட் புகைப்பிடிக்கும் நபர்கள், எப்பாஸ்டியன் பார் தொற்று (Epstein bar infection) ஆகியவையாகும்.

40 சதவீதம் புற்றுநோய்க்குக் காரணமாக அதிக உடல் எடையே உள்ளதாகவும், அதிகப்படியான கொழுப்பு 13 விதமான புற்றுநோய்க்குக் காரணமாகிறது என்கிறார்கள் அமெரிக்காவின் நோய் தடுப்பு அமைப்பு ஆய்வாளர்கள். காபியோ, டீயோ சுடச்சுட குடிப்பவர்களுக்கு தொண்டை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் இண்டர்நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள். காபியோ, டியோ 65 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் குடிப்பது தொண்டை புற்றுநோய்க்கு காரணமாகிறது என்கிறார்கள். தினமும் ஒரு கிளாஸ் மது அது ஒயின் அல்லது பீர் எதுவாக இருந்தாலும் சரி குடிப்பவர்களுக்கு பலதரப்பட்ட புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் இங்கிலாந்து நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

தினமும் சிறிது நேரமாவது சூரிய ஒளி நம் மீது பட வேண்டும். அப்படி சூரிய ஒளியையே அதிகம் உடலில் பட விடாதவர்களுக்கும், வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளவர்களுக்கும் இரத்த புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் கலிபோர்னியா கார்வே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். போதிய அளவு வைட்டமின் டி எடுத்துக்கொள்வதால் உடலில் மார்பகம், ஆணுறுப்பு மற்றும் பெருங்குடல் ஆகியவற்றில் புற்றுநோய்கள் வருவது தடுக்கப்படுகிறது. சூரிய ஒளியில் நடப்பது, உணவு மற்றும் துணை உணவுகள் என உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின் டி எடுத்துக்கொள்ளலாம். சராசரியாக ஒரு நாளைக்கு 25 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு கேன்சர் அபாயம் குறைகிறது என்பதை அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

வைட்டமின் சியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலில் உள்ள செல்கள் சேதமடைவதில் இருந்து பாதுகாக்கிறது. செல்கள் சேதமடைந்தால் புற்றுநோய் ஏற்படும். பழங்கள் மற்றும் காய்கறிகள் குறிப்பாக சிட்ரஸ் பழங்கள் ஸ்ட்ராபெரிகள், குடை மிளகாய் ஆகியவை வைட்டமின் சிக்கு எடுத்துக்கொள்ள சிறந்தது. வைட்டமின் இ, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. உடலில் உள்ள ஃப்ரிரேடிக்கல்ஸை சமப்படுத்த இது உதவுகிறது. சில வகை புற்றுநோய்களை குணப்படுத்த இது உதவுகிறது. செல்கள் சேதமடைவதையும் தடுக்கிறது. நட்ஸ், விதைகள் மற்றும் காய்கறி எண்ணெய்களில் வைட்டமின் இ சத்து நிறைந்துள்ளது.

போதிய ஃபோலேட் உட்கொள்வது சில புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. குறிப்பாக, பெருங்குடல் கேன்சர். கீரை வகைகள், பருப்பு வகைகளில் இந்தச் சத்து நிறைந்துள்ளது. வைட்டமின் பி6, உடலில் பல்வேறு பயோ கெமிக்கல் எதிர்வினைகளில் துணைபுரிகிறது. டிஎன்ஏ தொகுப்பை சரிசெய்வது உள்ளிட்டவற்றுக்கு துணைபுரிகிறது. போதியளவு வைட்டமின் பி6 அளவு பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. வாழைப்பழம், கோழி, பருப்பு வகைகளில் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது.

செலினியம், சில புற்றுநோய்களுக்கு எதிராக போராடும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களை கொண்டுள்ளது. மீன், கோழி, தானியங்கள், நட்ஸ்களில் இது உள்ளது. துத்தநாகச் சத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் தேவையான ஒன்று. புற்றுநோயை தடுக்க துத்தநாகச் சத்து மிகவும் அவசியம். இறைச்சி, பால் பொருட்கள், நட்ஸ் ஆகியவற்றில் துத்தநாகச் சத்து நிறைந்துள்ளது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT