Some simple ways to get rid of hoarse throat
Some simple ways to get rid of hoarse throat 
ஆரோக்கியம்

தொண்டை கரகரப்பு நீங்க சில எளிய வழிகள்!

மகாலட்சுமி சுப்பிரமணியன்

ழைக்காலங்களில் ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று சளி, இருமல்; அதன் தொடர்ச்சியாக தொண்டை கரகரப்பு. மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் சட்டென நிவாரணம் கிடைக்க வீட்டிலிருந்து எடுத்துக்கொள்ள கூடிய எளிய வைத்தியமாக  சில வழிகளைப் பார்க்கலாம்.

* கரகரப்பு, தொண்டை க் கட்டு நீங்க மா இலையை சுட்டு தேனில் வதக்கி சாப்பிட வேண்டும்.

* இஞ்சி சாறு, துளசி சாறு,தேன் மூன்றையும் சம அளவில் கலந்து குடிக்க சளி, இருமல், மற்றும் நெஞ்சில் கபம் சேருதல் குணமாகும்.

* பொடித்த பனங்கற்கண்டு, அதிமதுரப் பொடி, தேன் மூன்றையும் சூடான பாலில் கலந்து பருகினால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

* நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர தொடர் விக்கலையும் விரட்டிடலாம்.

* இஞ்சியுடன் தேன், லவங்கப்பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும்.

* உப்பை வெந்நீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் தொண்டைக்கட்டு குணமாகும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி யை வறுத்து பொடித்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

* வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தேன் ஊற்றி மூடி நன்றாக ஊறும் வரை வைத்து பின் சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண்கள் ஆறும்.

* சுடு தண்ணீரில் துளசியை போட்டு ஆவி பிடிக்கலாம். இதனால் சளி, தொடர் இருமல் குணமாகும்.

* மாதுளம்பழச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நாள்பட்ட வறட்டு இருமல் குணமாகும்.

* அன்னாசிப் பழச்சாறுடன் மிளகுத்தூள், தேன் கலந்து சாப்பிடலாம்.

* மாந்தளிரை நன்றாகக் காய வைத்து பொடித்து அதில் தண்ணீரை கலந்து குடிக்க தொண்டை தொடர்பான பிரச்னைகள் வராது.

* தொண்டைப் புண், எரிச்சல் நீங்க மல்லிகை இலையை நெய்யில் வறுத்து துணியில் கட்டி தொண்டைக்கு ஒத்தடம் கொடுக்கலாம்.

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

SCROLL FOR NEXT