Stomach problem 
ஆரோக்கியம்

வயிறு உப்புசத்தை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்வது எப்படி?

நான்சி மலர்

‘உப்புசம்’ என்பது குடல் பகுதியில் காற்று அல்லது வாயு நிரம்பி இருப்பதேயாகும். இதனால் வயிறு வீங்கியிருப்பது போலவும், வயிற்றில் அழுத்தம், வயிறு நிரம்பியிருப்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும். அதிகமாக சாப்பிடுவது, மாதவிடாய், அதிகமாக மது அருந்துதல் போன்றவை இதற்குக் காரணமாகும்.

1. தண்ணீர் மற்றும் ஆயுர்வேத டீ வயிற்றில் ஏற்படும் உப்புசத்தை சரிசெய்ய உதவுகிறது. தண்ணீர் அதிகம் குடிப்பதால் ஈரப்பதத்துடன் உடலை வைக்க உதவுகிறது. Peppermint, Chamomile, ginger போன்றவற்றில் டீ போட்டு குடிப்பதும் உப்புசத்தை குறைக்கிறது.

2. உடற்பயிற்சியில் ஈடுபடுவது குடல் இயக்கத்தை சீராக்கி உப்புசத்திலிருந்து பாதுகாக்கிறது. சாப்பிட்ட பிறகு 15 நிமிட நடைப்பயணம் மேற்கொள்வது சிறந்தது.

3. Probiotic உணவுகளில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமான பிரச்னைகளான உப்புசம், வாயு தொல்லையை சரிசெய்ய உதவுகிறது.

4. Peppermint எண்ணெய்யை தடவுவதால் வயிறு உப்புசம் போக்க மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது. இதை மாத்திரையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

5. அதிகமான நார்ச்சத்து உணவை எடுத்துக்கொள்வது வயிற்றுப் போக்கை சரிசெய்யும். இதனால் உப்புச பிரச்னையும் தீரும்.

6. வயிற்றில் மசாஜ் செய்வது குடல் இயக்கத்தை தூண்டிவிட்டு உப்புசத்தை போக்குகிறது.

7. யோகா செய்வது வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளை  ரிலாக்ஸாக ஆக்கி அதிகமான வாயுவை வெளியேற்ற உதவுகிறது.

8. Heating padஐ வயிற்றில் வைப்பதனால், அசௌகரியம் மற்றும்  வீக்கத்தை குறைக்கிறது. Heating pad இல்லையென்றால், வாட்டர் பாட்டிலில் சுடு தண்ணீர் நிரப்பியும் பயன்படுத்தலாம்.

9. மெக்னீசியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால், வயிற்றில் உள்ள அமிலத்தை பேலன்ஸ்  செய்யவும் குடலில் உள்ள தசைகளை ரிலாக்ஸ் செய்யவும் உதவுகிறது.

10. வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உங்களை ரிலாக்ஸாகவும், ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கவும் உதவுகிறது. இதனால் குடல் இயக்கம் நன்றாக செயல்பட வழி வகுக்கிறது.

11. இஞ்சியில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இது வயிற்றில் ஏற்படும் வாயுவை நீக்கி நன்றாக செரிமானமாக உதவுகிறது.

12. பல நூற்றாண்டுகளாக வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு சோம்பு அருமருந்தாக உள்ளது. இதில் இருக்கும் காம்பவுண்ட் வயிற்றை ரிலாக்ஸாக்கி செரிமானத்திற்கும், வாயு பிரச்னையையும் தீர்க்கிறது. உணவு உண்ட பிறகு சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுவது அனைத்து உப்புசத்தையும் போக்குகிறது. இந்த எளிமையான முறைகளை உப்புசம் ஏற்படும்போது முயற்சித்துப் பாருங்களேன்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT