Summer Dehydration 
ஆரோக்கியம்

Summer Dehydration: கோடைகாலத்தில் நீரிழிப்பு ஏற்படுவதற்கான 5 காரணங்கள்! 

கிரி கணபதி

கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் நீரிழப்பினால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உங்கள் உடல் எடுத்துக் கொள்வதை விட அதிக திரவங்கள் இழக்கும்போது Dehydration ஏற்படுகிறது. இது உடலின் நீர் அளவுகளில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கி பல பாதிப்புகளைக் கொடுக்கிறது. இந்தப் பதிவில் கோடைகாலங்களில் நீரிழிப்பு ஏற்படுவதற்கான 5 காரணங்கள் பற்றி பார்க்கலாம். 

1. அதிக வியர்வை: கோடையில் நீர்ச்சத்து குறைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அதிகப்படியான வியர்வை. வெப்பநிலை அதிகரிக்கும்போது உங்கள் உடலின் இயற்கையாக குளிர்ச்சியாக்கும் நடைமுறையான வியர்வை வெளியேறுகிறது. இருப்பினும் அதிகமாக வியர்க்கும்போது முக்கிய திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் இழக்கப்படுகின்றன. இதனால் டிஹைட்ரேஷன் பாதிப்பு ஏற்படுகிறது. 

2.போதிய அளவு திரவம் உட்கொள்ளாமை: தினசரி உடலுக்குத் தேவையான அளவு திரவங்களை குடிக்காமல் போவதாலும் டிஹைட்ரேஷன் ஏற்படலாம். கோடை காலங்களில் சிலர் அதிகப்படியான கார்பனேட் பானங்களை குடிக்கும்போது, டையூரிக் விளைவு ஏற்பட்டு நீரிழிப்பை அதிகரிக்கிறது. எனவே வெப்ப காலங்களில் தினசரி போதுமான அளவு தண்ணீர் குடித்து நீரற்றமாக இருக்க வேண்டியது அவசியம். 

3. அதிக திரவ இழப்பு: கோடைகாலத்தில் அடிக்கடி விளையாட்டு, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உடலின் திரவ இழப்பு அதிகரிக்கிறது. சூரிய வெப்பத்தில் அதிக நேரம் உழைக்கும்போது  வியர்வை அதிகமாக வெளியேறி நீரிழப்பை ஏற்படுத்தும். எனவே கோடைகாலத்தில் அதிக நீரிழிப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தாகம் எடுக்கவில்லை என்றாலும் அவ்வப்போது தண்ணீர் குடிப்பது நல்லது.

4. அதிக சுற்றுப்புற வெப்பநிலை: அதிக சூடான சுற்றுச்சூழலால் திரவ இழப்பு அதிகரித்து, டிஹைட்ரேஷன் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். வெப்பநிலை உயரும்போது உங்கள் உடலின் உட்புற வெப்பநிலையை சீராக்குவதற்கு அதிக திரவங்கள் தேவைப்படுகிறது. எனவே போதிய அளவு திரவம் உடலில் இல்லை என்றால், அதனுடன் தொடர்புடைய உடல்நல சிக்கல்கள் ஏற்படலாம். 

5. மது குடித்தல்: கோடைகாலத்தில் அடிக்கடி மதுபானங்களை உட்கொள்ளும் போது நீரிழிப்பு அபாயம் அதிகரிக்கிறது. ஆல்கஹால் அதிகமாக குடிக்கும்போது அது சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து, உடலின் நீர் சமநிலையில் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே வெப்பமான காலங்களில் அதிகமாக மது அருந்தினால், அவ்வப்போது அதிகமாக தண்ணீர் குடிப்பது அவசியம்.

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT