ஆரோக்கியம்

வெட்டுக்காயங்களை குணப்படுத்தும் தாத்தாப்பூச்செடி!

செளமியா சுப்ரமணியன்

கிராமப்புறங்களில் சிறுவர்கள் ஒரு நீண்ட காம்புடன் கூடிய பூவைக் கிள்ளி, அந்தப் பூவை மட்டும் தங்களது சுட்டுவிரலைக் கொண்டு கொய்து, ‘தாத்தா தாத்தா தல குடு’ என்று சொல்லியபடி விளையாடுவார்கள். சிறுவர்கள் விளையாட்டுக்காகப் பயன்படுத்தும் அந்தப் பூவை கிராமங்களில் மூக்குத்தி பூண்டு என்று அழைப்பர். இந்தப் படர் தாவரத்தை வெட்டுக்காயப் பூண்டு, கிணற்றுப்பாசான், வெட்டுக்காய பச்சிலை, செருப்படித்தழை, காயப்பச்சிலை மற்றும் தாத்தாப்பூச்செடி என்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் அழைப்பர்.

உலகளாவிய வெப்பமண்டல, மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் பரவியுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த இந்தத் தாவரம் சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்தது. பல்வேறு மூலிகை குணங்களைக் கொண்ட இந்த பூக்கும் தாவரம், ஒரு களைச் செடியாகவே பலராலும் அறியப்படுகிறது.

இந்த மூலிகைச் செடியின் மருத்துவப் பயன்கள் சிலவற்றைக் காண்போம்.

கிராமப்புறங்களில் வெட்டுக்காயங்களுக்கு கைக்கண்ட மருந்தாக இந்த மூக்குத்தி பூண்டு செடியின் இலைகளை அரைத்துப் பூசுவார்கள். தண்ணீர் சேர்க்காமல் இந்த இலையை அரைத்து வெட்டுக்காயம், சிராய்ப்பு போன்றவற்றின் மீது பற்றுப் போட்டால், சீழ் பிடிக்காமல் விரைந்து காயங்கள் ஆறும். அதுமட்டுமின்றி, தழும்புகளை இது ஏற்படுத்தாது. அதுமட்டுமின்றி, புண்களை ஆற்றவும், குறுதியடக்கியாகவும், கப நிவாரணியாகவும் கூட இது பயன்படுகிறது. இந்த இலைகளை அரைத்து காயத்தின் மீது பற்று போடும்போது வெள்ளை நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக மாறி, பல ஆண்டுகளாக ஆறாமல் இருக்கும் புண்களைக் கூட இது விரைவில் ஆற்றும் குணமுடையது.

மேலும், மூச்சுக்குழாய்சிரை, மூக்கடைப்பு, நீர்கோப்பு, வயிற்றுப்போக்கு, பேதி போன்றவற்றையும் இது குணமாகும். மூலிகை மருத்துவரின் ஆலோசனைப்படி கிணற்றுப்பூண்டின் இலைச்சாறும், குப்பைமேனி இலைச்சாறும் கலந்து குடித்தால் நஞ்சு முறிவு ஏற்படும். அதோடு, வயிற்றுக் கோளாறுகளும் தீரும்.

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT