Hugging
The Surprising Benefits of Hugging 
ஆரோக்கியம்

கட்டிப்பிடி வைத்தியத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா?

கிரி கணபதி

கட்டிப்பிடிப்பது என்பது அன்பையும், ஆறுதலையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் ஒரு ஆற்றல் மிக்க சைகையாகும். அதன் உணர்ச்சிப்பூர்வமான நன்மைகளுக்கு அப்பால், கட்டிப்பிடிப்பது நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் பங்களிக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? இந்த பதிவில் கட்டிப்பிடி வைத்தியத்தின் சில ஆச்சரியமான நன்மைகள் என்னவென்று பார்க்கலாம். 

கட்டிப்பிடிப்பதால் உடலில் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் வெளியேறுகிறது. இதை ‘காதல் ஹார்மோன்’ என்றும் குறிப்பிடுவார்கள். இந்த ஹார்மோன் மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. நீங்கள் விரும்பும் ஒருவரை கட்டிப்பிடிப்பதால் உங்கள் மனநிலை உடனடியாக மகிழ்ச்சியடைந்து பதட்டத்தை தணிக்க உதவும். 

உறவுகளுக்கு மத்தியில் பிணைப்பை வலுப்படுத்த கட்டிப்பிடிப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டிப்பிடிப்பதால் இருவருக்கு மத்தியில் நம்பிக்கை, நெருக்கம் மற்றும் உணர்ச்சி ரீதியான தொடர்பு அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் அல்லது காதலர்கள் போன்ற அன்பானவர்களை கட்டிப்பிடிப்பதால் உங்களது உறவு மேலும் ஆழமாகும். 

கட்டிப்பிடிக்கும் செயல்முறையானது உடலில் சில நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக கட்டிப்பிடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தி அதிகமாகி நோய் தொற்றுக்களை எதிர்த்து போராடும் உடலின் திறன் மேம்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

கட்டிப்பிடிப்பது உடலால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை வலி நிவாரணியான என்டோர்பீன்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இது உடல் அசௌகரித்தைத் தனித்து ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் பெரிய அளவில் உதவும். மேலும் இதுபோன்ற தொடுதல் உணர்வு ஒருவரது சோகம், துக்கம் அல்லது துயரத்தின்போது பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துமாம். 

தூங்கச் செல்வதற்கு முன் கட்டிப்பிடிப்பதால் தூக்கத்தின் தரம் மேம்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். கட்டிப்பிடிக்கும்போது ஆக்ஸிடோஸின் மற்றும் என்ட்ரோஃபீன்கள் வெளியேறுவதால் அது மனதையும், உடலையும் தளர்த்தி பதட்டத்தைக் குறைத்து, நிம்மதியான தூக்கத்தை ஊக்குவிக்க உதவுகிறது. 

கட்டிப்பிடிக்கும் செயல்முறையானது மொழி மற்றும் கலாச்சார தடைகளைத் தாண்டிய ஒரு உலகளாவிய சைகையாகும். இது ஒரு வகையான அன்பை பரிமாறும் தகவல் தொடர்புமுறை. இது இருவருக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியைக் குறைத்து சமூகத் தொடர்புகளை வளர்க்கும். எனவே கட்டிப்பிடி வைத்தியம் என்பது நமது வாழ்வில் என்றும் நேர்மறையான சூழலையே உருவாக்கும். 

இனி உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக கட்டிப்பிடி வைத்தியம் செய்து அதை சரி செய்து கொள்ளுங்கள். 

உங்கள் நகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

ஆக்கப்பூர்வமான தள்ளிப்போடுதலின் பயன்கள் பற்றி தெரியுமா?

மூன்றாம் உலகப்போர் நாளை நடந்தால் என்ன ஆகும்? அடக்கடவுளே!

சிறுகதை – கமலாம்பா!

குழந்தைகளை இளம் தொழிலதிபர்களாக உருவாக்க ஆசையா? இதோ 12 யோசனைகள்!

SCROLL FOR NEXT