Tomato Health Benefits. 
ஆரோக்கியம்

தக்காளி இவ்வளவு நன்மைகள் செய்யும்னு நினைக்கலையே! 

கிரி கணபதி

இந்திய உணவுகளில் தக்காளி காலாகாலமாக தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் உணவுப் பொருளாகும். இதை உணவில் சேர்த்தால் உணவின் சுவை கூடும் என்பதைத் தவிர தக்காளி நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாகும். இதன் புளிப்பு சுவை உணவுக்கு சரியான ருசியைக் கொடுக்கிறது.

தக்காளியில் பொட்டாசியம், விட்டமின் கே, விட்டமின் சி, ஆக்சிஜனேற்றங்கள் மற்றும் தேவையான தாதுக்கள் அனைத்துமே நிறைந்த ஒரு அதிசய பழமாகும். இது நம் உடலில் ஏற்படும் தீவிர நோய்களுக்கு எதிராக போராடும் தன்மையை கொண்டுள்ளது. குறிப்பாக ஹைபர் டென்ஷன் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தக்காளி உதவும் என சொல்லப்படுகிறது. 

தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

தக்காளியில் விட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளின் ஆதாரமாக தக்காளி உள்ளது. தக்காளியில் உள்ள லைகோபின் என்ற எல்டிஎல் ரத்த அழுத்த அளவைக் குறைத்து கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவும். 

தக்காளி நமது சருமத்திற்கு இயற்கையாகவே பளபளப்பை கொடுக்கும் தன்மை கொண்டதாகும். இது முகத்தில் ஏற்படும் அதிகப்படியான எண்ணெயை குறைத்து முகப்பருவை நீக்கி சருமத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருக்கும். 

உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும் போது ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. எனவே உடலில் சோடியம் சத்து குறைய பொட்டாசியம் சத்தின் தேவை அதிகம். அது உடலில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைத்து சமமாக்க உதவுகிறது. எனவே இதனால் உங்களுடைய ரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டுவரப்படும். 

தக்காளி விட்டமின் கே, விட்டமின் சி, பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்களின் புகலிடமாக உள்ளது. இவ்வளவு ஆற்றல் மிக்க தக்காளி நமது உடலில் ஏற்படும் நோய்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டதாகும். இது நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதய தசைகளுக்கு தேவையான முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. 

தக்காளியில் உள்ள லைக்கோபின் என்ற பொருள் புற்று நோய்க்கு எதிராக போராடும் பண்புகளை உள்ளடக்கியதாக சொல்கின்றனர். மேலும் நுரையீரல் மற்றும் வயிற்றுப் புற்றுநோயிலிருந்தும் தக்காளி பாதுகாப்பை அளிக்கும். 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT