ஊறுகாய்கள் https://www.rumispice.com
ஆரோக்கியம்

ஊறுகாயின் வகைகளும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும்!

ஜெயகாந்தி மகாதேவன்

றுகாய் என்பது தொன்று தொட்டே நம் முன்னோர்கள் உணவுடன் சேர்த்து உண்ட ஒரு பொருளாகும். ஊறுகாயில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்கவும் செய்யும். ஊறுகாயிலுள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உடலின் மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. உப்பின் அளவு இதில் தூக்கலாக உள்ளதால், இதை குறைந்த அளவில் உபயோகிப்பதே உசிதமானது. இந்தப் பதிவில் சில வகை ஊறுகாய்களையும் அவற்றின் பயன்களையும் பார்ப்போம்.

மாங்காய் ஊறுகாய்: இதிலுள்ள வைட்டமின் C நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செரிமானம் சிறப்பாக நடைபெறவும் உதவும். ஆன்டி ஆக்சிடன்ட்கள் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி சரும நலத்தைப் பாதுகாக்கிறது. இதன் நார்சத்து கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது.

எலுமிச்சை ஊறுகாய்: இதிலுள்ள அதிகளவு வைட்டமின் C, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடவும் செய்கிறது. ஜீரணத்துக்கு உதவும் என்சைம்களின் உற்பத்தியைப் பெருக்கவும், நச்சுக்களை உடலிலிருந்து வெளியேற்றவும் இது உதவுகிறது.

பச்சை மிளகாய் ஊறுகாய்: இதிலுள்ள கேப்சைசின் என்ற பொருள் மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெறவும், அதன் மூலம் அதிக கொழுப்பு எரிக்கப்பட்டு எடைக் குறைப்பிற்கும் உதவுகிறது. இரைப்பையில் உற்பத்தியாகும் ஜீரண அமிலத்தின் அளவை அதிகரிக்கச் செய்து செரிமானம் சிறக்க உதவுகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலின் மொத்த ஆரோக்கியத்திற்கும் இதிலுள்ள வைட்டமின் C உதவுகிறது.

மிக்ஸட் (Mixed) வெஜிடபிள்ஸ் ஊறுகாய்: இந்த ஊறுகாயில் உள்ள பல வகையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி செல்களை சிதைவிலிருந்து காக்கின்றன; நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்கின்றன; வீக்கங்களைக் குறைக்கின்றன. இதிலுள்ள நார்சத்து சிறப்பான செரிமானத்துக்கு உதவுகிறது.

பூண்டு ஊறுகாய்: பூண்டில் ஆன்டிமைக்ரோபியல் குணம் நிறைந்த அல்லிசின் என்ற பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் எதிர்த்துப் போராடுகிறது; இரத்த அழுத்தத்தை சமநிலைப் படுத்தவும், கொலஸ்ட்ராலைக் குறையவும் செய்து இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வீக்கங்களைக் குறைக்கவும் உதவுகின்றன.

இஞ்சி ஊறுகாய்: இது வயிற்று உப்புசம், அஜீரணம், வாயு உற்பத்தி போன்ற செரிமானக் கோளாறுகளை நீக்க உதவுகிறது. இதிலுள்ள ஜிஞ்ஜரால் என்ற ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்ட ஒரு கூட்டுப் பொருளானது வீக்கத்தையும் வலியையும் குறைக்க உதவுகிறது. மேலும் இதிலுள்ள ஆன்டி மைக்ரோபியல் குணமானது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் உடலைப் பாதுகாக்கிறது.

நெல்லிக்காய் ஊறுகாய்: இதிலுள்ள அதிகளவு வைட்டமின் C நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்பட்டு செல்களை சிதைவிலிருந்து காக்கின்றது; நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்கின்றது; சிறப்பான செரிமானத்துக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

பாவக்காய் ஊறுகாய்: இது இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. மேலும் மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெறவும், அதன் மூலம் அதிக கொழுப்பு எரிக்கப்பட்டு எடைக் குறைப்பிற்கும் உதவுகிறது. இதிலுள்ள அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் வீக்கத்தைக் குறைக்கவும், ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடவும் செய்கின்றன.

'தொட்டுக்க ஒரு ஊறுகாய் கூட இல்லையா?' என வீட்டில் உள்ள மற்றவர்கள் கேட்கும்படி செய்யாமல், ஏதாவது ஒன்று எப்பவும் இருக்கும்படி பார்த்துக்கோங்க.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT