Oil 
ஆரோக்கியம்

என்னதான் இல்லை இந்த எண்ணெயில்?

ராதா ரமேஷ்

நம்முடைய உடலில் மிகப்பெரிய உறுப்பு என்றால் அது நம் சருமம் தான். ஆனால் நாம் உடலில் உள்ள மற்ற உறுப்புகளுக்கு மெனக்கெடும் அளவுக்கு நம் சருமத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

அன்றாட வீடுகளில் பயன்படக்கூடிய தேங்காய் எண்ணெய் ஒன்றே போதும், நமது சருமத்தின் முழு பராமரிப்பையும் கவனித்துக் கொள்வதற்கு. அத்தகைய தேங்காய் எண்ணெயில் உள்ள மருத்துவ பயன்களை பற்றி இப்பதிவில் காணலாம். 

பெரும்பாலும், தேங்காய் எண்ணெயை இரவு தூங்கப் போவதற்கு முன் இரவு நேரங்களில் பயன்படுத்துவது நல்லது. நம் சருமத்தில் தேங்காய் எண்ணெயை தொடர்ந்து தேய்ப்பதால் ஈரப்பதம் வற்றிப் போகாமல் பாதுகாக்கப்படுகிறது. இதனால் சருமமானது வறண்டு போகாமல் எப்போதும் பளபளப்பாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய் தேய்க்கும் போது பூஞ்சை தொற்றுகள் வராமல் தடுக்கப்படுகிறது. இதனால் முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், அலர்ஜி போன்றவை தடுக்கப்படும்.

தேங்காய் எண்ணெய்வை இரவு தூங்குவதற்கு முன் தினமும் உதட்டில் தடவுவதன் மூலம் உதடுகளின் ஈரப்பதம் மற்றும் மென்மை பாதுகாக்கப்படும். 

40 வயதுக்கு மேல் பெரும்பாலும் ஏற்படக்கூடிய சரும சுருக்கத்தை தடுப்பதற்கு தேங்காய் எண்ணெய் உதவுகிறது. மேலும் தேங்காய் எண்ணெயை நன்கு தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் கை, கால், மூட்டு பகுதிகளில் ஏற்படும் வலி, வீக்கம் குறைகிறது.

சிலருக்கு அடிக்கடி கால் எரிச்சல் ஏற்படும். இது போன்ற சமயங்களில் தேங்காய் எண்ணெயை தேய்ப்பதன் மூலம் எரிச்சலானது குறைகிறது.

இளம் பருவத்தினருக்கு முகத்தில் முகப்பருக்கள் வராமல் தடுப்பதில் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் ஆசிட் பாக்டீரியா தொற்று கிருமிகள் வராமல் தடுக்கிறது.

பாதங்களில் ஏற்படும் வெடிப்புகளை சரி செய்வதற்கு தேங்காய் எண்ணெய்  பயன்படுகிறது. தினமும் பாதங்களில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் பாத வெடிப்புகள் சிறிது சிறிதாக குறையும் வாய்ப்புண்டு. 

தேங்காய் எண்ணெய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

தீக்காயங்களால் ஏற்படும் தழும்புகளை நீக்குவதில் தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. இயற்கையாகவே தேங்காய் எண்ணெயில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் தான் சில நேரங்களில் கீழே விழும்போது காயங்களுக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்துகிறோம். அவ்வாறு பயன்படுத்தும் போது அதில் உள்ள தொற்று கிருமிகளை அழிப்பதில் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது. 

தேங்காய் எண்ணெயில் கேப்ரிக் ஆசிட், கேப்ரிலிக் ஆசிட், லாரிக்  ஆசிட் போன்ற ஆசிட் வகைகள் உள்ளன. இது உடலுக்கு மிகுந்த  நன்மை தரக்கூடியது. லாரிக்  ஆசிட்டிலிருந்து பெறக்கூடிய மோனோலாரின் என்பது தாய்ப்பாலுக்கு இணையான ஊட்டச்சத்து ஆகும். எனவே தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் ஏராளம். 

எலும்புகளை வலுப்படுத்துவதிலும் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து, விட்டமின் ஈ மற்றும் கே, 40 வயதுக்கு மேல் பெண்களுக்கு இயல்பாகவே ஏற்படக்கூடிய எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து விடுபடுவதற்கு உதவுகிறது.

உடலில் உள்ள ஹார்மோன்களை சம நிலையில் வைப்பதில் தேங்காய் எண்ணெயின் பங்கு அதிகம். தேங்காய் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தும் போது தைராய்டு மற்றும் அட்ரீனல் சுரப்பிகளை நன்கு சுரக்க வைக்கிறது. உடல் பருமனை குறைப்பதில் தேங்காய் எண்ணெயின் பங்கு அதிகம். 

தேங்காய் எண்ணெயில் அதிகமான கொழுப்புகள் இருப்பதாகவும், அது இதயத்திற்கு கேடு என்றும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் நம்மிடையே சமீபத்திய தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் மருத்துவ ரீதியாக இத்தகவல்கள்  நிரூபிக்கப்படவில்லை.

தேங்காய் எண்ணெயில்  MCT என்ற நல்ல கொழுப்புகள் அதிகம் உள்ளன. இன்னும் கூட கேரளா, தாய்லாந்து, இலங்கை  போன்ற இடங்களில் எல்லாம் தேங்காய் எண்ணெயின் பயன்பாடு தான் அதிகமாக உள்ளது. 

நம் முன்னோர்கள் முதல் இன்று வரை தேங்காய் எண்ணெய்  நம்மிடையே புழக்கத்தில் உள்ளது. எனவே நம்மிடமே  உள்ள இந்த அற்புத எண்ணையை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நம் உடலினை வளமாக வைத்துக் கொள்ளலாம்!

உலகின் மிகப்பெரிய இந்துக் கோவில் எங்குள்ளது தெரியுமா?

The History of Super Mario: A 90s Kid's Dream Come True!

ஐஸ்வர்யங்களை அள்ளிக் கொடுக்கும் அட்சய நவமி வழிபாடு!

Batman-இன் தலைசிறந்த 9 வாழ்க்கைத் தத்துவங்கள்! 

உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்காற்றும் கல்சட்டி பாரம்பரிய சமையல்!

SCROLL FOR NEXT