Uterine Infection Remedies 
ஆரோக்கியம்

கருப்பைத் தொற்று அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தீர்வுகள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ருப்பைத் தொற்று (Uterus infection) பிரச்னை பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. இதற்கு சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் கருப்பையில் பல பக்க விளைவுகளைக் உண்டாக்கும். கருத்தரிக்கும் திறனை குறைக்கும். எனவே, கருப்பையில் ஏற்படும் தொற்று நோயை புறக்கணிக்கக் கூடாது. கருப்பைத் தொற்று என்பது பாக்டீரியா அல்லது பிற நுண்ணுயிரிகள் கருப்பையில் ஊடுருவி வீக்கத்திற்கு வழிவகுக்கும்.

கருப்பைத் தொற்று நோயின் அறிகுறிகள்: அடி வயிற்றின் கீழ் வலி உண்டாகும். கருப்பை நோய் தொற்று காரணமாக காய்ச்சல், வெள்ளைப்படுதல், கருப்பையில் வலி, சிறுநீர் கழிக்கும் போது வலியுடன் கூடிய எரிச்சல் உணர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

கருப்பைத் தொற்று ஏற்படக் காரணங்கள்: கர்ப்பப்பை வாய் நோய்த்தொற்றுகள், குறிப்பாக மாதவிடாய் சுழற்சிக்கு பின் பல பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை. இந்த நேரத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதால் நோய்க்கிருமிகள் அதிகரிக்க வாய்ப்புகளை உண்டாக்குகின்றது.

கருச்சிதைவு அல்லது கருக்கலைப்புக்குப் பிறகு அவை முழுவதுமாக அகற்றப்படாவிட்டால் கருப்பையில் தொற்று ஏற்படலாம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் சிக்கல்கள் கருப்பையில் பாக்டீரியாக்கள் தொற்றை ஏற்படுத்தலாம். பிரசவத்திற்குப் பிறகு சில சமயம் கருப்பையில் பாக்டீரியாக்களை உண்டு பண்ணுவதன் மூலம் தொற்று ஏற்படும். கருப்பையில் நோய் தொற்று இருப்பதாக சந்தேகித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்வதன் மூலம் நீண்ட கால சிக்கல்களை தவிர்க்கலாம்.

கர்ப்பப்பை தொற்றை தடுக்கும் வழிமுறைகள்:

சுகாதாரமான பழக்கங்கள்: கருப்பை தொற்றை தவிர்க்க தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பது மிகவும் அவசியம். குறிப்பாக, மாதவிடாய்க் காலங்களில் தொற்று ஏற்படுவதைத் தடுக்க உதவும். மிதமான அல்லது வாசனையற்ற சோப்பைக் கொண்டு மென்மையாக தூய்மை செய்தல்.

மாதவிடாய் காலங்களில் சுத்தமான காற்று போகும் காட்டன் உள்ளாடைகளை பயன்படுத்துவதும், அதிக கெமிக்கல்கள் இல்லாத சானிட்டரி பேட்களை பயன்படுத்துவதும் அவற்றை அடிக்கடி மாற்றுவதும் அவசியம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கருப்பை நோய்த் தொற்றுகள் தீவிரமானவை. ஆரம்பத்திலேயே அவற்றைக் கண்டுபிடித்தால் உரிய சிகிச்சை அளித்து ஆரோக்கியத்தைப் பெறலாம்.  சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் எக்டோபிக் கர்ப்பம், கருப்பைக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தி கருவுறாமைக்கு வழி வகுக்கும். கருப்பைத் தொற்றை சுகாதாரத்தை நன்கு பேணுவதன் மூலம் தடுக்க முடியும்.

கர்ப்பப்பை ஆரோக்கியத்திற்கு ப்ரோபையாட்டிக் எனப்படும் நோய் எதிர்ப்பாற்றல் அதிகம் நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கர்ப்பப்பையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

உங்க ஸ்மார்ட்போனில் இருக்கும் PDF File-களை உடனே டெலிட் பண்ணுங்க! 

ஸ்டீவ் ஜாப்ஸ் கூறிய 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்! 

இயர் பட்ஸ் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

உற்பத்தி கருவிகளை போற்றும் ஆயுத பூஜை நன்னாள் - பாரம்பரியமும் வழிபாட்டு முறைகளும்!

3-2-1 Rule: இந்த விதியைப் பின்பற்றினால் விரைவாக தூக்கம் வரும்! 

SCROLL FOR NEXT