தடுப்பூசி மருந்துகள் இதற்காக, யாருக்கெல்லாம் அளிக்கப்படுகிறது என்பது குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அளித்துள்ள விளக்கம்.
தடுப்பூசி என்பது நோயை தடுப்பதற்காகவும், நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும், நோயை உடலில் பரவிடாமல் செய்வதற்காகவும் பயன்படுத்தப்படும் முன் எச்சரிக்கை அல்லது நோயின் லேசான அறிகுறி தென்பட்டவுடன் அளிக்கும் நோய் எதிர்ப்பு மருந்து ஆகும்.
வளரும் நாடுகளில் சுகாதார சீர்கேட்டினாலும், பல்வேறு புறக்காரணிகளினாலும் பல்வேறு வகையான நோய் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு இயல்பாகவே ஏற்படுகிறது. இவற்றை தடுக்க பல்வேறு விதமான தடுப்பூசிகள் இந்திய அரசால் கட்டாயப்படுத்தப்பட்டு மக்களுக்கு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே இந்தியாவில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி பல்வேறு வகையான நோய்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கு ஐந்து வயது வரை பல்வேறு வகைகளில் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றை தேசிய நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் அரசே இலவசமாக வழங்கி வருகிறது குறிப்பிடப்பட்டது. இதன் மூலம் பல்வேறு வகையான நோய் பாதிப்புகளின் தீவிரம் குறைந்து இருப்பதாகவும், நோய் பாதிப்புகள் குறைந்து இருப்பதாகவும், இறப்பு வீதம் குறைந்து இருப்பதாகவும், சில நோய்கள் முற்றிலுமாக அளிக்கப்பட்டிருப்பதாகவும் ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.
உணவு, உடை, இருப்பிடத்தைப் போல தடுப்பூசியும் அத்தியாவசியமான ஒன்று. அதே சமயம் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியை பயன்படுத்தும் பொழுது மிகுந்த கவனத்தோடு கையாள வேண்டிய தேவையும் இருக்கிறது. இந்த வயதுடையவர்கள் தடுப்பூசி பயன்படுத்தும் போது நோய் தீவிரம் அடையாத நிலையில் இருக்க வேண்டும். மேலும் நீரழிவு நோய், ரத்து அழுத்தம், நெஞ்சு வலி ஆகிய நோய்களுக்கு தடுப்பூசி கிடையாது. ஆகிய பாதிப்புகள் உள்ளவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்து தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
60 வயது உடையவர்களுக்கு இன்ப்ளூயன்சா, நிமோகோக்கல் ஆகிய தடுப்பூசிகள் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். அது உரிய மருத்துவ ஆலோசனையை பெற்று அளிக்கப்பட்டு வருகிறது. இளம் வயதினர் தடுப்பூசி போடுவது இயல்பான ஒன்று.