Wheat flour - Maida flour Which is good for the body? 
ஆரோக்கியம்

கோதுமை மாவு Vs மைதா மாவு: உடலுக்கு ஆரோக்கியமானது எது?

நான்சி மலர்

நாம் தினமும் உணவுக்காகப் பயன்படுத்தும் மாவுகளில் கோதுமை மற்றும் மைதா மாவுகளை அதிகமாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால், இவை இரண்டில் உடலுக்கு ஆரோக்கியமானது எது? என்பது என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வதில்லை. சிலர் மைதா மாவு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறுகிறார்களே அது உண்மைதானா? என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

மைதா மற்றும் கோதுமை இரண்டுமே ஒரே வகையான தானியத்தில் இருந்துதான் எடுக்கப்படுகின்றன. கோதுமையை அரைத்தால், கோதுமை மாவு கிடைக்கும். இதுவே, மைதா மாவை தயாரிக்க கோதுமையை பயன்படுத்தினாலும் அதிலிருக்கும் தவிடு, Bran, Germ போன்றவற்றை நீக்கிவிட்டு உள்ளேயிருக்கும் Endospermஐ மட்டும் அரைத்து மாவாக்கினால், அதுவே மைதாவாகும். இன்று சந்தையில் இருக்கும் உணவு பொருட்கள், ஸ்நாக்ஸ் போன்ற பெரும்பாலானவை செய்யப்படுவது மைதாவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மைதாவில் கார்போஹைடரேட் மற்றும் புரதம் அதிகமாக உள்ளது. இதுவே கோதுமையில் கார்போஹைடரேட், புரதம் மற்றும் மினரல்ஸ் இருப்பதால், இது நல்லதாகக் கருதப்படுகிறது. மைதா மாவில் Glycemic index அதிகமாக இருக்கும். Glycemic Index என்பது நாம் எடுத்துக்கொள்ளும் உணவுப் பொருட்கள் குளுக்கோஸ் அளவை இரத்தத்தில் எவ்வளவு வேகமாக உயர்த்துகிறது என்பதை அளப்பதாகும்.

அதுமட்டுமில்லாமல், மைதா மாவை வெள்ளை நிறமாக மாற்ற பிளீச்சிங் Process செய்கிறார்கள். மைதா மாவை பிளீச்சிங் செய்ய அதிகமாகப் பயன்படுத்தும் ரசாயனம் Benzoyl peroxide மற்றும் Chlorine dioxide ஆகும். மைதா மாவில் Gluten இருக்கிறது. அது உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்று கேட்டிருப்போம். ஆனால், மைதாவில் மட்டுமே Gluten என்பது இல்லை. அது கோதுமை மாவிலும் உள்ளது.

இன்றைக்கு சந்தையில் நிறைய உணவுப் பொருட்களை Gluten free என்று சொல்லி விற்பதை பார்த்திருப்போம். Gluten sensitivity, celiac disease உள்ளவர்களுக்கு அழற்சி ஏற்படுவதால், இதை தவிர்த்துக்கொள்வது நல்லது என்று சொல்கிறார்கள். அவர்கள் Gluten free உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மைதா மாவை பிளீச்சிங் செய்யும்போது அதில் Alloxan என்பது byproduct ஆக உருவாகிறது.

இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது என்று சொல்லியும் கேள்விப்பட்டிருப்போம். இது மிகவும் குறைவான அளவிலேயே மைதாவில் உருவாவதால், இதனால் பெரிய பாதிப்புகள் இல்லை. எனவே, கோதுமை மாவை உணவில் சேர்த்துக் கொள்வதில் எந்த பாதிப்பும் இல்லை. இதுவே மைதாவை உணவில் எப்போதாவது சேர்த்துக் கொள்வது நல்லது. அடிக்கடி உணவில் மைதாவை சேர்த்துக் கொள்வது உடல் நலத்துக்கு தீங்கானதேயாகும்.

மன அமைதி தரும் பாத்ரூம் - ஆய்வு கூறும் செய்தி! தவறுதலாக நினைக்க வேண்டாம்...

WhatsApp-ல் திருமண அழைப்பிதழ் வந்தால் தெரியாமல் கூட திறந்துடாதீங்க! 

ஆண்களின் Sperm Count அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

சோயா பனீர் பிரியாணி செய்யலாம் வாங்க! 

காஃபின் கலந்திருக்கும் காபி தெரியும்; ‘டீகாஃப்’ என்றால் என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT