ஆரோக்கியத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் தருபவர்கள் ஜப்பானியர்கள். உலகில் நீண்ட ஆயுள் கொண்டவர்களும் ஜப்பானியர்கள்தான். ஜப்பானின் பண்டையக்கால, ‘ஹரா ஹச்சி பு’ முறையில் எப்படி உடல் எடையை சுலபமாகக் குறைக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. ஹரா ஹச்சி பு என்பது எண்பது சதவீதம் சாப்பிடுவதை ஊக்குவிக்கிறது. பசியோடு இருக்கும் ஒருவர் வயிறு முட்ட உண்ணாமல் எண்பது சதவீதம் மட்டுமே உணவு உண்ண வேண்டும். அப்போதுதான் அதிகப்படியான உணவை தவிர்க்க முடியும். இது செரிமானத்திற்கும் நல்லது.
2 . பல்வேறு வகையான முழுமையான தாவர உணவுகளை உட்கொள்ளவும். ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், நார்ச்சத்து ஆகியவற்றை வழங்குகிறது.
3. ஜப்பானியர்கள் புரத உணவுகளை தேர்ந்தெடுக்கும்போது மெலிந்த புரதம் நிறைந்திருக்கும் அசைவ வகைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். அதிகக் கொழுப்பு நிறைந்த ஆட்டுக்கறி, மாட்டுக்கறி போன்றவற்றை தவிர்த்து விட்டு, மீன் மற்றும் கடல் உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள். இவற்றில் இதயத்திற்கு ஆரோக்கியமான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் நல்ல புரதங்களும் நிறைந்துள்ளன. இவற்றில் கலோரிகளும் அதிகம். நிறைவேறா கொழுப்பு குறைவாக இருக்கிறது. டோஃபு, டெம்போ போன்ற சைவப் புரத வகைகளும் உண்கிறார்கள்.
4. ஜப்பானியர்கள் ஒரு தட்டு நிறைய உணவுகளை பரிமாறிக் கொண்டு உண்ணுவதில்லை. சிறிய கிண்ணங்கள், தட்டுகளில் உண்கிறார்கள். ஒரே நேரத்தில் அதிகமாக உண்ணாமல் சிறிது சிறிதாக அடிக்கடி உணவு எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் நிலையான இரத்த சர்க்கரை அளவு பராமரிக்கப்படுகிறது. மேலும், அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது.
ஆரோக்கியமான உணவுக்கான நுட்பங்கள் மற்றும் கருவிகள் ஜப்பானியர்கள் சமைக்கப் பயன்படுத்தும் கருவிகளும் உணவு தயாரிக்கும் முறைகளும் மிகவும் நுட்பமானது. ஆரோக்கியமான திருப்திகரமான உணவை தயாரிப்பதற்காக அவர்கள் அதிகம் மெனக்கெடுகிறார்கள்.
1. வேக வைக்கும் முறை: உணவுகளின் ஊட்டச்சத்துக்களை பாதுகாப்பதற்கும் அதிகப்படியான கொழுப்புகளை குறைப்பதற்கும் பயன்படுத்தும் ஒரு நுட்பமான முறை உணவை வேகவைத்தல். அவர்கள் மூங்கில் ஸ்டீமர் அல்லது ஸ்டீமர் கூடைகளை பயன்படுத்தி சமைக்கிறார்கள். இதன் மூலம் சுவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவை உருவாக்க முடியும்.
2. கிரில்லிங்: அவர்கள் பயன்படுத்தும் மற்றொரு ஆரோக்கியமான முறை கிரில்லிங். மீன் மற்றும் காய்கறிகளை அதிக எண்ணெயில் போட்டுப் பொரித்து வறுத்து எடுக்காமல் குறைந்த கலோரிகளை தரும் கிரில்லிங் முறையை பயன்படுத்துகிறார்கள். இதுற்குத் தொட்டுக்கொள்ள அதிகமான சாஸ்களும் தேவை இல்லை.
3. வேகவைத்தல் (தாஷி - பாரம்பரிய ஜப்பானியர் குழம்பு): ஜப்பானியர்கள் பாரம்பரிய முறைப்படி சுவையான திரவம் போன்ற குழம்பு ஒன்றை தயாரிக்கிறார்கள். இது ஊட்டச்சத்துக்களை தக்கவைத்து அதிகப்படியான சுவையுடன் இருக்கிறது. இதில் அதிகப்படியான உப்பு, சர்க்கரை சேர்க்கப்படுவதில்லை. கொழுப்பும் குறைவாக இருக்கிறது. இந்தக் குழம்பு மென்மையான சுவையான உணவாக இருக்கிறது.
4 . சாண்டோகு அல்லது க்யூட்டோ கத்திகள்: ஜப்பானியர்கள் காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை துல்லியமாக வெட்டுவதற்கு உயர்தரமான கத்திகளை பயன்படுத்துகிறார்கள். இதன் பெயர் சாண்டோகு அல்லது கியூட்டோ. இதை பயன்படுத்தினால் தேவையில்லாத உணவுக் கழிவுகளை குறைக்கலாம். ஆரோக்கியமான சுவைக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.
ஜப்பானிய உணவு முறையை நாமும் பின்பற்றினால் எளிதில் உடல் எடையை சுலபமாகக் குறைக்கலாம்.