சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கண் பார்வை பாதிப்புக்கு உள்ளாவது சர்வ சாதாரணமாகி விட்டது. கண் பார்வையை மேம்படுத்தும் பயிற்சிகள் குறித்து சில விஷயங்களை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
1. கண் பயிற்சிகள்: கண்களை கடிகார திசையில் நகர்த்துவது, தொலைதூரப் பொருட்களைப் பார்ப்பது போன்ற கண் பயிற்சிகள் செய்வதால் கண் தசைகள் வலுவடைந்து கண் அழுத்தத்தைக் குறைக்க உதவும். கணினியில் பல மணி நேரம் வேலை செய்தால் இந்தப் பயிற்சிகளைச் செய்வது மிகவும் முக்கியம்.
2. தினசரி உடற்பயிற்சிகள்: வழக்கமான உடற்பயிற்சிகள் மற்ற உடல் பாகங்களைத் தவிர கண்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன. நல்ல கண் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உடற்பயிற்சி உதவும்.
3. உணவு முறை மாற்றங்கள்: கண் பார்வையை மேம்படுத்த சத்தான உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, பச்சைக் காய்கறிகள், கேரட், சிட்ரஸ் பழங்கள், மீன் போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் கண் பார்வையை நன்கு பராமரிக்கலாம்.
4. கேட்ஜெட்டு கட்டுப்பாடு: கண் பார்வை பலவீனமடைவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று கேஜெட்டுகள் முன்பு அதிக நேரத்தை செலவிடுவது. தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவது கண் பார்வையை பலவீனப்படுத்தும். இதனைப் பார்ப்பதைக் கட்டுப்படுத்துங்கள்.
5. வீட்டில் உள்ள விளக்குகள்: வீட்டில் கண்களை பாதிக்கும் வெளிச்சம் கொண்டிருக்கும் விளக்குகளை நீக்கவும். வீட்டில் இயற்கையாகவே உங்கள் கண்பார்வையை மேம்படுத்த சீக்கிரம் படுக்கைக்குச் செல்வதும், சீக்கிரமாக எழுந்திருப்பது, சத்தான உணவுகளை உண்பது போன்ற ஆரோக்கியமான விஷயங்களைப் பின்பற்றினால் உங்கள் உடல் நிச்சயமாக ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த உலகை நமக்கு அறிமுகப்படுத்துவதே கண்கள்தான். ஆகையால். கண்களை பராமரிப்பதில் எந்தவித சமரசமும் இன்றி மேற்கூறிய முறைகளை கடைப்பிடித்து பொன்னான வாழ்வைப் பெறுவோம்.