சூர்ய ரத்னா
சிங்கப்பூரின் முதல் பெண் தமிழ் நாவலாசிரியர் (மேற்கே உதிக்கும் சூரியன்), முன்னாள் ஆசிரியர், பயிலரங்கு பயிற்றுவிப்பாளர். அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். வானொலி, தொலைக்காட்சி நடிப்பு, குரல் நடிப்பு (2020, 2023 சிங்கப்பூர்த் தேர்தல்கள் உள்பட), மொழிபெயர்ப்பு, சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி/ வானொலி கதை வசனம், கல்வி அமைச்சின் கதைநூல்கள் மற்றும் பெரிய புத்தகங்கள் உள்பட சுமார் 60க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள் படைத்துள்ளார். 2023-ல் நந்தவனம் பெளண்டேஷனின் ‘சாதனைப் பெண்கள் விருது (சிங்கப்பூர்)’ பெற்றார். சொந்த யூடியூப் சேனல் நடத்துகிறார். (Cozy Library, Ratham Singapore True Crime Stories). தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.