குச்சி ஐஸ் முதல் காதல் வரை! ... தமிழர் ரத்தத்தில் ஊறிய 'பண்டமாற்று' வர்த்தகம்...

பண்ட மாற்று வர்த்தகம் பணப் பரிமாற்றமாக மாறியது எப்படி?
Barter system
Barter system
Published on

பழங்காலத்திலிருந்து அண்டை நாடுகளுடன் கடல் வழி, தரைவழி மூலம் நாம் வாணிபம் நடத்தி வந்திருக்கிறோம். ஒரு நாடு பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்றால் அதில் பெரும்பகுதி வாணிபத்தை சார்ந்தது என்றால் மிகை ஆகாது. வாணிபம் எப்படி பண்டமாற்று முறையிலிருந்து பணத்துக்கு முன்னேறியது என்பதை இப்பதிவில் காண்போம்.

பண்டமாற்று என்பது நம் ரத்தத்தில் ஊறியது என்று சொல்லலாம். இப்பண்டமாற்று வாணிபத்தை சாதாரண பொருள்கள் அல்லாது காதல் நெறியிலும் கடவுள் நெறியிலும் கூட போற்றி வந்தார்கள் என காண்கின்றோம். எடுத்துக்காட்டாக, ஔவை பாட்டியிலிருந்து மேற்கோள் காட்ட முடியும். ஔவையார் ஒரு பாடலில்

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்

கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே!

நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா"

என்று பாடியுள்ளார். இது ஒரு அருமையான பண்டமாற்று தானே?!

அவர் விநாயகப் பெருமானிடமே நான் உனக்கு நான்கு பொருள் தருகிறேன். அதற்குப் பதிலாக நீ எனக்கு மூன்று கொடு என்கிறார் அநாயாசமாக.

இதையும் படியுங்கள்:
ரூ.0.00 முதலீட்டில் அதிக வருமானம்! வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க 10 super ideas!
Barter system

கடவுளைப் பாட வந்த மாணிக்கவாசகர் இதே நிலையில் பண்டமாற்று வாணிபத்தை குறித்து தாமும் இறைவனும் ஒருவரை ஒருவர் மாற்றிக் கொண்டதை காட்டி அப்பண்டமாற்று வியாபாரத்தில் தாமே லாபம் பெற்றவர் என்பதையும் குறிக்கின்றார். அந்தப் பாடல் இதோ

"தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்

சங்கரா ஆர்கொலோ சதுரர்

அந்த மொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாது நீ பெற்ற தொன் றென்பால்?" என்பது திருவாசகம்

அக்காலத்திய மக்கள் பல பொருட்களையும் செல்வமாகவே கொண்டார்கள். மாடு என்பதை செல்வமாகக் கொண்டதை படித்திருக்கிறோம். நடைமுறையில் கண்டிருக்கிறோம். சங்கும் பிற பொருட்களும் செல்வமாக போற்றப்பட்டன. உண்மையிலேயே அக்காலத்தில் பொருள்களுக்கு சிறந்த மதிப்பு இருந்து வந்தது. கொள்வதும் கொடுப்பதுமாகிய பண்டமாற்று வாணிபத்தில் சிறந்த இடம் பெற்றிருந்தது.

இதையும் படியுங்கள்:
தந்தை இறந்து விட்டால் அவர் வாங்கிய கடனை வாரிசு (மகன்/மகள்) அடைக்க வேண்டுமா..? இது என்னங்க புதுசா இருக்கு..!
Barter system

இன்னும் சொல்லப்போனால் சிலர் திருமண பத்திரிக்கையில் கூட 'வாழ்க்கை ஒப்பந்த விழா' என்று பத்திரிக்கை கொடுத்து அழைப்பதைக் கவனிக்கலாம். ஆமாம் வாழ்க்கையே ஒரு ஒப்பந்தம் என்று தான் கூற வேண்டும்.

தலைவன் தலைவி இருவரும் ஒருவர் மற்றவருக்கு தன்னை கொடுக்க கடமைப்பட்டவராவர். இருவரும் மாறிப்புக்கு இதய மெய்தினார் என்பார் கம்பர். அவ்வாறு ஒருவரை ஒருவர் முற்றும் தந்து மாறி கொள்வதிலேயே இன்பமான குடும்ப வாழ்வு சிறக்கும் இதையே வள்ளுவர்,

"சாயலும் நானும் அவர் கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையும் தந்து"

என்று தலைவனப் பிரிந்த தலைவியின் மேல் வைத்து காட்டுகின்றார்.

இதையும் படியுங்கள்:
வருமானம் அள்ளித்தரும் முதலீடுகள்: வட்டி + வரி விலக்கு தரும் 4 திட்டங்கள்!
Barter system

சிறுவயதாக இருந்த பொழுது நாமே அதிகமாக பண்டமாற்று முறையில் வாணிபம் நடந்ததை பார்த்திருக்கிறோம். ஒரு கிராமத்தில் மரவள்ளிக்கிழங்கு அதிகமாக விளையும். அவர்கள் வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்து அடுத்த கிராமத்தில் விற்றுவிட்டு அறுவடை சீசனில் வந்து அதற்கான நெல்லை பெற்றுக் கொள்வார்கள். இப்படித் தான் பண்ட மாற்று அப்பொழுது இருந்தது. இன்னும் சொல்லப்போனால் கிராமத்துக்கு விற்க வரும் குச்சி ஐஸூக்கு கூட அரிசி அல்லது நெல் மணியை பண்ட மாற்றாக கொடுத்து வாங்கியது உண்டு.

இதைத்தான், 'கங்கை நதிபுரத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம்' என்று விடுதலை கவிஞர் பாரதியார் கூட பண்ட மாற்று வாணிபம் என்று குறிக்கிறார். தம்மிடம் மிகுதியாக உள்ள பொருளை கொடுத்து தமக்கு தேவையான பொருளை பெற்றுக்கொள்ளும் வழக்கமே பண்டைக்கால வழக்கமாகும்.

இதையும் படியுங்கள்:
அச்சச்சோ... பணம் போச்சே! உங்கள் சேமிப்பை கரைக்கும் UPI 'டிஜிட்டல் நிதி கசிவு'!
Barter system

ஆனால், இன்றைய காலகட்டத்தில் இது அவ்வளவு எளிமையாக இல்லாத நிலையும், காசு பணமும் உண்டான நிலையும் இப்பண்ட மாற்று நிலையை மாற்றி விட்டன. காரணம் ஒவ்வொரு பொருளையும் நெடுந்தலைவு கொண்டு செல்வது இயலாது; அரிசி அல்லது நெல் கொடுத்து ஆடை வாங்க ஒருவன் நினைத்தால் ஆடை தருபவனுக்கு நெல் தேவை இல்லாது இருக்கலாம். எனவேதான் இடையில் காசும் பணமும் பொருளின் அளவையும் மதிப்பையும் வரையறுக்கும் பொருள்களாக அமைந்தன.

இந்த காசும் பணமுமே இப்பொழுது வாணிபத்தை வளர்த்து வருகின்றன. உற்பத்தியாளரோ, விவசாயியோ தன் பொருளை இடையில் உள்ள வணிகருக்கு விற்று தம் பொருளுக்கு உரிய பொருளை பணமாக பெற்று தமக்கு வேண்டிய பிற பொருள்களை வேற்று வியாபாரிகளிடம் இருந்து அப்பணத்தை கொடுத்து பெற்றுக் கொள்கின்றார்கள்.

இவ்வாணிப முறை எளிமையாக உள்ளதோடு தொழில் வளத்தை பெருக்கவும் வழி செய்கின்றது என்று கூறலாம்.

இதையும் படியுங்கள்:
கல்விக் கடன் விண்ணப்பிக்கும் முன் இந்த விஷயங்களை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!
Barter system

இதில் வங்கிகளின் பணி மகத்தானது. வங்கிகளின் செக் மூலம் கோடிக்கணக்கான பணமாற்றம் நடைபெறுகின்றது. வணிகருக்கும் தொழில் வளத்துக்கும் வேண்டிய பணம் முதல் ஈந்தும் சில வங்கிகள் பணியாற்றுவதை காண முடிகிறது. இன்று உலகெங்கிலும் பல்வேறு வணிக குழுக்கள் திறம்பட செயலாற்றி பல்வேறு பொருட்களை பிற நாடுகளுக்கு அனுப்பியும் பெற்றும் நாட்டின் செழிப்பையும் சிறப்பையும் பெருக்குகின்றன.

அரசாங்கங்களே இந்த வாணிபத்துறையில் பங்கு கொண்டு தொழிற்படுவதையும், பல்வேறு தொழிலாளிகளை அமைத்து அரசாங்கம் தொழிலை பெருக்குவதோடு பல்வேறு பொருட்களை நாடு விட்டு நாடு அனுப்புவதற்கும், ஒரே நாட்டுக்குள் பல பகுதிகளில் விற்பனை செல்வதற்கும் திட்டங்கள் வகுத்து செயல்படுத்தி வருவது போற்றத்தக்கதாகும். இன்று நம் நாட்டில் விளையும் பயிர் அடுத்த நாள் அடுத்த நாட்டில் விற்பனையாவதை காணமுடிகிறது. இதற்கெல்லாம் போக்குவரத்து வழி கொடுக்கிறது. இப்படி மக்கள் தம் தேவையை எங்கிருந்து வேண்டுமானாலும் நிறைவேற்றிக் கொள்ள பணம் ஒன்றே முக்கியமாக இன்றைய நிலைக்கு மாறிவிட்டது. அதுதான் வாணிபத்தை வளர்க்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
60% பட்ஜெட் ஃபார்முலா: இது ஈஸி... ஆனால்... ?
Barter system

இப்படி வளர்ந்த வாணிபம் இப்பொழுது வீட்டிலிருந்து கொண்டே வேண்டியதை அமேசானுக்கு ஆர்டர் செய்தால் அடுத்த சில மணி நேரத்திற்குள்ளாகவே வீடு வந்து சேரும் படி அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் செயற்கை கோள்களும் வழியமைத்து கொடுத்திருக்கின்றன.

ஆமாம் இன்று தங்கம் விற்கும் விலைக்கு அதற்கு பண்ட மாற்றாக எதை கொடுக்க முடியும்... பணத்தைத் தவிர? இப்படி நாடு முன்னேற்றம் அடைய மிகவும் முக்கிய பொருளாக பண்ட மாற்றாக இருந்த நிலை மாறி , பணம் மாற்றாக வளர்ந்து விட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அந்தப் பணம்தான் பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com