

எல் ஐ சி முதலீட்டு திட்டங்கள் பாலிசிதாரர்களின் பல்வேறு இலக்குகள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பலவிதமான எல்ஐசி திட்டங்களை வழங்கும் ஒரு அரசு ஆதரவு நிறுவனமாகும். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தனது 70வது ஆண்டு விழாவை முன்னிட்டு மற்றும் வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப சமீபத்தில் சில புதிய காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 2026 இல் பீமா பிளாட்டினம் மற்றும் ஜீவன் ரக்ஷா ஆகிய இரண்டு புதிய எல்ஐசி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களிலும் பங்குச்சந்தை அபாயம் இல்லை. மேலும் இவற்றின் வருமானம் முற்றிலும் நிலையானது.
எல் ஐ சி பீமா பிளாட்டினம் (LIC's Bima Platinum):
இது எல்ஐசி யின் 70வது ஆண்டு விழாவை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சிறப்பு திட்டமாகும். இது முதலீட்டுச் சந்தையுடன் இணைக்கப்படாத (Non-linked), லாப பங்களிப்பற்ற (Non-participating) ஆயுள் காப்பீடு மற்றும் சேமிப்பு திட்டமாகும்.
இந்த தனிநபர் காப்பீட்டுத் திட்டம் சேமிப்புடன் சேர்த்து ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலிசியில் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதும். நீண்ட கால நிதி இலக்குகளைக் கொண்டவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.
இத்திட்டத்தின் கீழ் பிரீமியம் செலுத்தும் காலத்தின் போது ஒவ்வொரு ரூ.1,000 ஆண்டு பிரீமியத்திற்கும், ஆண்டுதோறும் கூடுதலாக 70 ரூபாய் உத்திரவாதமாக பாலிசியில் சேர்க்கப்படும். காப்பீட்டுத் தொகை செலுத்தும் காலம் முடிவடைந்து 5வது ஆண்டின் இறுதியில், அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 70% மொத்த கூடுதல் வருமானமாக வழங்கப்படும். பாலிசி தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் போது இந்த உறுதி செய்யப்பட்ட பலன்கள் சேர்ந்து கொண்டே வரும்.
இதில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூபாய் 3 லட்சம் ஆகும். இதில் சேர்வதற்கான வயது வரம்பு, 30 நாட்கள் ஆன குழந்தை முதல் அதிகபட்சம் 55 வயது வரை ஆகும்.
பூஸ்டர் வருமானம்: அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 70%
வழக்கமான வருமானம்: வருடாந்திர payouts காலத்தில் அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 10%
பிரீமியம் செலுத்தும் முறைகள்: நம் வசதிக்கேற்ப 7, 10, 12, 15 மற்றும் 18 ஆண்டுகளுக்கு பிரீமியத்தை செலுத்த தேர்வு செய்யலாம்.
எல்.ஐ.சி ஜீவன் ரக்ஷா (LIC's Jeevan Raksha):
பீமா பிளாட்டினம் திட்டத்துடன் இணைந்தே இந்த புதிய பாலிசியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் குடும்பத்தின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சேமிப்புடன் கூடிய ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் நீண்ட கால சேமிப்பு மற்றும் குடும்பப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜீவன் ரக்ஷா என்பது முற்றிலும் இடர் காப்பீட்டில் கவனம் செலுத்தும் ஒரு நான்-பார், நான்-லிங்க்டு ப்யூர் ரிஸ்க் திட்டம் ஆகும். பாலிசி காலத்தில் காப்பீடு செய்யப்பட்ட நபரின் துரதிஷ்டவசமான மரணம் ஏற்பட்டால், குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பை வழங்குவதே இந்தத் திட்டத்தில் மிக்க நோக்கமாகும்.
இந்த வகையான எதிர்காலத்தில் குடும்பத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இந்த வகையான டேர்ம் ரிஸ்க் காப்பீடு, எதிர்காலத்தில் குடும்பத்தின் மீதான நிதிச் சுமையைக் குறைக்கப் பயனுள்ளதாக இருக்கும்.
பாலிசிதாரர்களுக்கு பிரீமியம் செலுத்துவதிலும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஜீவன் ரக்ஷா திட்டத்தின் கீழ் நம் வசதிக்கேற்ப ஒற்றை பிரீமியம், வழக்கமான பிரீமியம், வரையறுக்கப்பட்ட பிரீமியம் போன்ற பல்வேறு கட்டண விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
நம் வருமானம் மற்றும் நிதி இலக்குகளுக்கு ஏற்ப கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் உள்ளது. இத்திட்டத்தில் குறைந்தபட்ச அடிப்படைக் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம் மற்றும் அதிகபட்சம் ரூ. 24 லட்சம் ஆகும். 18 முதல் 45 வயதுக்குட்பட்ட நபர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். இந்த பாலிசியின் அதிகபட்ச முதிர்வு வயது 60 ஆண்டுகள் ஆகும்.
பெண்களுக்கான சிறப்புத் தள்ளுபடி:
எல்ஐசி இந்தத் திட்டத்தில் பெண்களுக்கு சிறப்பு தள்ளுபடி ப்ரீமியம் விகிதங்களையும், அதிக காப்பீட்டுத் தொகை எடுப்பவர்களுக்கு தள்ளுபடியையும் வழங்கி உள்ளது.
மொத்தத்தில் ஒருபுறம் சேமிப்புடன் பாதுகாப்பை விரும்புபவர்களுக்காக பீமா பிளாட்டினம் திட்டமும், மறுபுறம் குடும்பத்தின் நிதி பாதுகாப்பிற்காக முழுமையான ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பை விரும்புபவர்களுக்காக எல்ஐசி புதிதாக ஜீவன் ரக்ஷா திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் இரண்டு முற்றிலும் மாறுபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
இதற்கு முன்பு அறிமுகமான நியூ ஜீவன் சாதி ஒற்றை மற்றும் வரையறுக்கப்பட்ட பிரீமியம் திட்டங்களும் நடைமுறையில் உள்ளன.
பாலிசிகளை எப்படி எடுப்பது:
எல்.ஐ.சியின் இந்த பாலிசிகளை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வழியாகவோ எளிதாக பெறலாம். எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான LIC India மூலம் ஆன்லைன் பாலிசிகளை வாங்கும் போது, கூடுதல் உத்தரவாத பலன்கள் மற்றும் ரைடர் பிரீமியங்களில் தள்ளுபடிகள் (Rebates) போன்ற சலுகைகள் கிடைக்கின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: