ஆட்டோமொபைல் அப்டேட்ஸ்: செப்டெம்பர் மாதம் களமிறங்கியுள்ள புதிய வாகனங்களின் முழு பட்டியல்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கார் மற்றும் இருசக்கர வாகனப் பிரிவுகளில் வெளியாகியுள்ள முக்கிய வாகனங்களின் விலை மற்றும் விபரங்கள் கீழே ஒப்பிடப்பட்டுள்ளன.
Royal Enfield Himalayan 440, Maruti Suzuki Baleno Facelift
Royal Enfield Himalayan 440, Maruti Suzuki Baleno Faceliftimage credit-autocarindia.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

ந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செப்டம்பர் மாதத்தில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட (Facelift) வாகன மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளன. சில புதிய வாகனங்கள் இம்மாத இறுதியில் அறிமுகமாகத் தயாராக உள்ளன.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய மாடல்களைக் களம் இறக்கி வருகின்றன. அந்த வகையில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கார் மற்றும் இருசக்கர வாகனப் பிரிவுகளில் வெளியாகியுள்ள முக்கிய வாகனங்களின் விலை மற்றும் விபரங்கள் கீழே ஒப்பிடப்பட்டுள்ளன.

செப்டம்பர் 2026-ல் வெளியான முக்கிய வாகனங்களின் பட்டியல் இதோ:

Maruti Suzuki Baleno Facelift: இந்தியாவின் முன்னணி பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) காரான மாருதி சுஸுகி பலேனோ, புதிய பொலிவுடன் செப்டம்பர் 5-ம்தேதி வெளியானது. ஐந்து முக்கிய வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் (Ex-showroom) ஆரம்ப விலை தோராயமாக ரூ.5.99 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம் வரை வேரியண்ட்களைப் பொறுத்து மாறுபடுகிறது.

Kia Sorento: கியாவின் இந்த புதிய பிரீமியம் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் SUV கார் (கியா சொரெண்டோ) செப்டம்பர் 4-ம்தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை ரூ. 27.99 லட்சம் மற்றும் டாப் மாடல் விலை ரூ. 40.39 லட்சம் வரை செல்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனருக்குப் போட்டியாக 1.6L டர்போ பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின் இதில் உள்ளது.

BMW 7 Series & i7 Facelift: சொகுசு கார் பிரியர்களுக்காக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த இரண்டு பிளாக்ஷிப் மாடல்களும் செப்டம்பர் 11-ம்தேதி இந்தியா சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய 7 சீரிஸ் மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 1.95 கோடியாகவும், i7-ன் கூடுதல் திறன் கொண்ட புதிய வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 2.65 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Skoda Superb (2026) & Slavia Facelift: ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் (Skoda Slavia Facelift) மற்றும் புதிய ஸ்கோடா சூப்பர்ப் (Skoda Superb 2026) ஆகிய செடான் கார்கள் செப்டம்பர் 18-ல் இந்திய சந்தையில் அறிமுகமாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த கார்களுக்கான புக்கிங் ஏற்கனவே தொடங்கப்பட்டு, ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் (Skoda Slavia Facelift) காரின் விலை தோராயமாக ரூ. 10.50 லட்சம் முதல் ரூ. 18.50 லட்சம் வரையும், மற்றும் புதிய ஸ்கோடா சூப்பர்ப் (Skoda Superb 2026) காரின் விலை தோராயமாக ரூ. 50 லட்சம் முதல் தொடங்குகிறது.

Volkswagen Virtus Facelif: வோக்ஸ்வாகன் விர்டஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்குள் (தீபாவளி பண்டிகை காலத்திற்கு முன்னதாக) அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உத்தேச ஆரம்ப விலை சுமார் ரூ.11 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இருக்கலாம் (எக்ஸ்ஷோரூம்) என எதிர்பார்க்கப்படுகிறது.

Porsche Cayenne Electric: போர்ஷே கேயென் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் செப்டம்பர் 30-ம்தேதி அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷே அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஒரே சார்ஜில் 647 கி.மீ பயணம்! ஸ்கோடாவின் அதிரடி எலக்ட்ரிக் கார் அறிமுகம்!
Royal Enfield Himalayan 440, Maruti Suzuki Baleno Facelift

இதன் ஆரம்ப விலை (Ex-showroom) ரூ.1.77 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் Standard மற்றும் Turbo Electric ஆகிய இரண்டு மாடல்களில் வெளியாகிறது. (டர்போ மாடலின் விலை சுமார் ரூ.2.27 கோடி வரை இருக்கும்).

புதிய பைக்குகள் (Bikes) மற்றும் புதிய ஸ்கூட்டர்கள் (Scooters) :

பைக் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவிலும் இந்த மாதம் சில முக்கியமான அறிமுகங்கள் நடந்துள்ளன.

Royal Enfield Himalayan 440: ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய 443cc இன்ஜின் கொண்ட அட்வென்ச்சர் பைக் செப்டம்பர் 4-ல் இந்தியாவின் ஆரம்ப விலையாக ரூ.2.29 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Jawa All Star 42: ஜாவா (Jawa) நிறுவனம் தனது புகழ்பெற்ற 42 மாடலில் புதிய Jawa All Star 42 பதிப்பை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,86,913 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக இந்த புதிய மாடல் களம் இறங்கியுள்ளது.

BMW 7 Series & i7 Facelift, Simple Energy Wave|புதிய வாகனங்கள்
BMW 7 Series & i7 Facelift, Simple Energy Wave|புதிய வாகனங்கள்image credit-autocarindia.com

Simple Energy Wave: சிம்பிள் எனர்ஜி (Simple Energy) நிறுவனம் தனது புதிய குடும்ப பயன்பாட்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டரான Simple Wave மாடலை ரூ.1,09,999 (அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை) ஆரம்ப விலையில் அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் செப்டம்பர் 2-ம்தேதி அறிமுகப்படுத்தியது.

இது 2.2 kWh முதல் 5 kWh வரை மொத்தம் 4 பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர் விநியோகம் செய்யும் பணி (Deliveries) செப்டம்பர் 25 முதல் தொடங்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

BGauss C12 MaxR: பிஃகாஸ் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் செப்டம்பர் 9-ம்தேதி சந்தைக்கு வந்துள்ளது. இதற்கான டெஸ்ட் ரைடுகளும் (Test rides) தற்போது கிடைக்கின்றன. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 178 கி.மீ தூரம் (IDC Range) வரை பயணிக்கலாம் என BGauss நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவில் இதன் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை (Introductory Ex-showroom Price) சுமார் ரூ.1,45,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Kawasaki Versys 1100: புதிய கவாஸாகி வெர்சிஸ் 1100 (Kawasaki Versys 1100) பைக் இந்தியாவில் செப்டம்பர் 11-ம்தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த அட்வென்ச்சர் டூரர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் (Ex-showroom) விலை ரூ. 13.89 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், செப்டம்பர் 2026 பாதியிலிருந்தே வாடிக்கையாளர்களுக்கு பைக்குகள் டெலிவரி செய்யப்பட உள்ளன.

Kawasaki Vulcan S: புதிய 2027 கவாசகி வல்கன் எஸ் (Kawasaki Vulcan S) மாடல் இந்தியாவில் செப்டம்பர் 14-ம்தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் (Ex-showroom) விலை ரூ. 8.23 லட்சம் ஆகும். இது முந்தைய மாடலை விட ரூ.10,000 வரை அதிகமாகும். இந்த புதிய பைக்கிற்கான முன்பதிவுகள் தொடங்கிவிட்டன, மேலும் இதன் டெலிவரிகள் செப்டம்பர் பாதியிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

Hero Glamour X 125: ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 (Hero Glamour X 125) பைக்கின் மிக முக்கியமான பாதுகாப்பு மேம்பாடான சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் (ABS with IBS) வசதி கொண்ட புதிய வேரியண்ட் செப்டம்பர் 11-ம்தேதி இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
BGauss C12 MaxR: ஒரே சார்ஜ்ல 178 கி.மீ பறக்கலாம். புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!
Royal Enfield Himalayan 440, Maruti Suzuki Baleno Facelift

இதற்கு முன்பு 2021-இல் அறிமுகம் செய்யப்பட்ட 'Glamour Xtec' மாடல் 2026-இல் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாகவே இந்த அதிநவீன அம்சங்கள் கொண்ட 'Glamour X 125' தற்போது விற்பனையில் உள்ளது.

இந்த பைக்கின் டிரம் பிரேக் வேரியன்ட் ரூ. 88,517 விலையிலும், டிஸ்க் பிரேக் வேரியன்ட் ரூ. 96,836 விலையிலும், புதிய ABS வேரியன்ட் ரூ. 1,01,000 விலையிலும் கிடைக்கிறது.

Aprilia SXR 175: மெக்ஸி-ஸ்கூட்டர் (Maxi-scooter) பிரியர்களுக்காக ஏப்ரிலியா நிறுவனத்தின் இந்த பவர்ஃபுல் ஸ்கூட்டர் இந்த செப்டம்பர் மாத இறுதிக்குள் (குறிப்பாக செப்டம்பர் 23 அன்று) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிர்பார்க்கப்படும் விலை ரூ.1,45,000 (எக்ஸ்-ஷோரூம் விலை).

இதையும் படியுங்கள்:
அட்வென்ச்சர் பைக் லுக்... மேக்ஸி ஸ்கூட்டர் வசதி! இந்தியாவில் களம் கண்டது ‘Honda ADV 160’!
Royal Enfield Himalayan 440, Maruti Suzuki Baleno Facelift

மேலே குறிப்பிட்டுள்ள விலைகள் அனைத்தும் ஆரம்பக்கட்ட எக்ஸ்-ஷோரூம் (Ex-showroom) விலைகள் மட்டுமே. நீங்கள் வசிக்கும் மாநிலம் மற்றும் நகரத்தின் அடிப்படையில் ஆன்-ரோடு (On-road) விலை மாறுபடும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com