ராயல் லுக், செம பவர்! 'Jawa 42' புதிய எடிஷன் அறிமுகம் - முழு விபரம் உள்ளே!

ஜாவா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய ‘ஜாவா 42’ (Jawa 42) பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
ஜாவா 42
ஜாவா 42image credit-fortuneindia.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

ஜாவா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய ‘ஜாவா 42’ (Jawa 42) பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஜாவா 42 என்பது கிளாசிக் லெஜெண்ட்ஸ் (Classic Legends) நிறுவனத்தால் விற்கப்படும் ஒரு பிரபலமான நியோ-ரெட்ரோ மோட்டார் சைக்கிள் ஆகும். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இது இந்தியாவின் புகழ்பெற்ற பழமையான மோட்டார் சைக்கிள் பிராண்டுகளை நவீன தொழில்நுட்பத்துடன் மீளுருவாக்கம் செய்து தயாரித்து வருகிறது.

இந்நிறுவனம் ஜாவா (Jawa), யெஸ்டி (Yezdi) மற்றும் பிஎஸ்ஏ (BSA) ஆகிய மூன்று முக்கிய பிராண்டுகளின் கீழ் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது.

இதன் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.73 லட்சம். தோற்றத்தில் சிறிய மாற்றங்களுடன், என்ஜின் மற்றும் சஸ்பென்ஷன் உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் புதிய 294.7 சிசி ஜே-பாந்தர், லிக்விட் கூல்டு (Liquid-cooled) என்ஜின், சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஸ்லிப்பர் கிளட்ச் கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்சுடன் (6-speed) இணைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின், முந்தைய மாடலை விட சிறந்த செயல்திறன் மற்றும் மென்மையான இயக்கத்தை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ‘ஜாவா 42’ லிட்டருக்கு சுமார் 33 கி.மீ வரை மைலேஜ் தரும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த பைக்கின் கட்டமைப்புத் தரம், இன்ஜின் RPM மற்றும் டார்க் (torque) ஆகியவை மிகச் சிறப்பாக உள்ளன.

சவுகரியமான பயணத்திற்காக சஸ்பென்ஷன் அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய இருக்கை, மேம்படுத்தப்பட்ட கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் அதிர்வுகளை குறைப்பதற்கான மாற்றங்களும் இடம்பெற்றுள்ளன. முன்புற மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகளுடன், டூயல் சேனல் ஏபிஎஸ் (Dual-channel ABS), அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், இரட்டை எக்ஸாஸ்ட்கள், அலாய் வீல்கள் உள்ளிட்ட வசதிகள் தரமாக வழங்கப்பட்டுள்ளது.

நவீன கிளாசிக் (Neo-classic) தோற்றமும், மேம்பட்ட ஹேண்ட்லிங் வசதியும் இதன் சிறப்பாகும். கையாள்வதற்கும் ஓட்டுவதற்கும் எளிதானது. பழைய மாடலை விட புதிய மாடலில் இருக்கையின் உயரம் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

Jawa 42
Jawa 42image credit-zigwheels.com

எளிமையான, பன்முகப் பயன்பாடுள்ள தேர்வாக நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜாவா 42-க்கு மேலும் வலிமையான மற்றும் அடக்கமான தோற்றத்தை அளிக்கிறது. நல்ல கட்டமைப்புத் தரம், மைலேஜை பொருத்தவரை, நெடுஞ்சாலையில் 35-37 கி.மீ/லி, நகரத்தில் 30-32 கி.மீ/லி, நல்ல பிக்கப் கொண்ட சக்திவாய்ந்த பைக், எளிதாக முந்திச் செல்லலாம்.

புதிய ஆல் ஸ்டார்ஸ் எடிஷன் மொத்தம் ஐந்து விதமான கவர்ச்சிகரமான நிறங்களில் கிடைக்கிறது. நவீன ரெட்ரோ தோற்றத்தை (Modern-retro) தக்கவைத்து கொண்டு தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் வாகன செயல்பாட்டில் மேம்பாடுகளை ஜாவா வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:
புது பைக் வாங்க போறீங்களா.. ஷோரூம்க்காரங்க சொல்லாத இந்த ரகசியத்தை படிங்க!
ஜாவா 42

இந்த பைக் நீண்ட தூரப் பயணங்களுக்கும், சீரான வேகத்தில் பயணிப்பதற்கும் (cruising) மிகவும் ஏற்றது.

மிக விரைவான வேகம் (pickup), கம்பீரமான தோற்றம், வசதியான இருக்கை அமைப்பு, தானியங்கி குளிர்விப்பு வசதி கொண்ட என்ஜின் மற்றும் இரட்டை சைலன்சர் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். ஆரம்பத்தில் இது குறைவான மைலேஜையே அளித்தாலும், காலப்போக்கில் லிட்டருக்கு சுமார் 25 முதல் 40 கி.மீ வரையிலான மைலேஜை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மோட்டார் சைக்கிள் - விபத்தைத் தவிர்க்க 10 பாதுகாப்பு விதிகள்!
ஜாவா 42

புதிய வண்ண தேர்வுகளுடன் கிடைக்கும் ஜாவா 42-ன் விலை வேரியண்டுகளுக்கு ஏற்ப ரூ.1.73 லட்சம் முதல் ரூ.1.98 லட்சம் வரை செல்கிறது.

இதையும் படியுங்கள்:

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750: அட்வென்ச்சர் பிரியர்களுக்கு செம ட்ரீட்!

பெட்ரோல் vs எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: எதை வாங்குனா நிஜமா லாபம்? முழு அலசல்..

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com