பிஎஃப் பணம் எடுப்பதில் புதிய மாற்றம்! உங்கள் கணக்கில் இருந்து 75% வரை பெறுவது எப்படி?

பிஎஃப் பணம் - EPF Withdrawal Online
பிஎஃப் பணம் - EPF Withdrawal OnlineAI Image
Updated on

நாம் தொழிலாளர் சேமநல நிதியிலிருந்து எவ்வாறு (பிஎஃப் பணம்) பணத்தைப் பெறுவது என்பது பற்றி இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.

தொழிலாளர் சேமநல நிதி எப்படி உருவானது ?

தொழிலாளர்களின் ஓய்வு கால நலனுக்காக, தொழிலாளர் சேம நல நிதி சட்டம் நவம்பர் 15, 1951 அன்று உருவாக்கப் பட்டது. பின்னர், அதற்கு பதிலாக 1952 ஆம் ஆண்டு தொழிலாளர் சேம நல நிதி சட்டம் பாராளுமன்றத்தில் மசோதாவாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில் தொழிலாளர் நலனுக்காக தொழிலாளர் சேம நல நிதி (Employee Provident Fund), தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் (Employee Pension Scheme), தொழிலாளர் வைப்பு சார்ந்த காப்பீடு திட்டம் (Employee Deposit Linked Insurance Scheme) என பல்வேறு திட்டங்கள் உள்ளன.

நிற்க. கடந்த மாதம், தொழிலாளர்கள் சேமநல நிதி 2026 அறிமுகப்படுத்தப்பட்டது. தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தால் ஜூன் 29, 2026 அறிவிக்கப் பட்டது.‌ இது 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொழிலாளர் சேம நல நிதி திட்டத்திற்கு மாற்றாக வந்துள்ளது. இது சமூக பாதுகாப்பு செயல்விதி 2020(Social Security Code 2020) இன் படி உருவாக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் சேம நல நிதியில் எவ்வாறு பணத்தை எடுப்பது ?

நாம் இப்போது தொழிலாளர் சேம நல நிதியில் பணத்தை எடுப்பதற்கு பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன.

தொழிலாளர் சேம நல நிதியிலிருந்து பணத்தை எடுப்பதற்கு பொதுவாக இரண்டு முகாந்திரங்கள் உள்ளன. மேலும், இரண்டிற்குமே பணத்தை எடுக்க சில கட்டுப்பாடுகள் உள்ளன. தொழிலாளர்களின் ஓய்வுகாலம் பாதிக்கப்படக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை ந‍டவடிக்கையாக இந்தக் கட்டுப்பாடுகள் உள்ளன.

1) முன்கூட்டியே பகுதியாக பணத்தை எடுப்பது - குறிப்பிட்ட காரணங்களுக்காக வேலையில் இருக்கும்போதே, முன்கூட்டியே தொழிலாளர் சேம நல நிதியில் இருந்து பணத்தை எடுப்பது.

இதையும் படியுங்கள்:
EPFO புதிய அப்டேட்: இனி வேலை மாறினால் PF கணக்கு தானாகவே மாறும்..!
பிஎஃப் பணம் - EPF Withdrawal Online

2) மொத்தமாக பணத்தை எடுப்பது - வேலையில் இல்லாத பொழுது மொத்தமாக பணத்தை எடுப்பது.

இவற்றில் எவ்வாறு பணத்தை எடுப்பது என்பதைப் பார்ப்போம்.

1) முன்கூட்டியே பணத்தை எடுப்பது- இதில் முன்பு 13 முகாந்திரங்கள் இருந்தன. அவை பணத்தை எடுப்பதற்கான கோரிக்கைகளுக்கு பல்வேறு நிராகரிப்புகளை உருவாக்கின. எனவே, இப்பொழுது இது எளிமைப்படுத்தப்பட்டு இதில் மூன்று முகாந்திரங்கள் மட்டுமே உள்ளன. அவை பின் வருமாறு;

1. அத்தியாவசிய தேவைகள் - இதில் மூன்று பிரிவுகள் உள்ளன - உடல் நலக் குறைவு, படிப்பு, திருமணம்

2. வீட்டுத் தேவைகள்

3. சிறப்பு சந்தர்ப்பங்கள்

1அ. அத்தியாவசிய தேவைகள் - உடல் நலக்குறைவு ;- தனக்கோ குடும்பத்திற்கோ மருத்துவச் சிகிச்சைக்காக பணம் எடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக, மொத்த பணத்தில் 75% வரை பணத்தை எடுத்துக்கொள்ளலாம். தொழிலாளர் சேம நல நிதி உறுப்பினர் காலத்தில் எவ்வளவு முறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

1ஆ. அத்தியாவசிய தேவைகள் - படிப்பு ;- தனக்கோ அல்லது குழந்தைகளுக்கோ படிப்பிற்காக பணம் எடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக, மொத்த பணத்தில் 75% வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம். தொழிலாளர் சேம நல நிதி உறுப்பினர் காலத்தில் அதிகபட்சமாக 10 முறைகள் வரை இதை பயன்படுத்தலாம்.

பிஎஃப் பணம் - EPF Withdrawal Online
பிஎஃப் பணம் - EPF Withdrawal OnlineAI Image

1 இ. அத்தியாவசிய தேவைகள் - திருமணம் ;- தனக்கோ அல்லது குடும்பத்தின் உறுப்பினர்களின் திருமணத்திற்கோ பணம் எடுத்துக்கொள்ளலாம். அதிகபட்சமாக, மொத்த பணத்தில் 75% வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம். தொழிலாளர் சேம நல நிதி உறுப்பினர் காலத்தில் அதிகபட்சமாக 5 முறைகள் வரை இதை பயன்படுத்தலாம்.

2. வீட்டுத் தேவைகள் - வீடு வாங்குதல், வீடு கட்டுதல், வீட்டுக் கடனை திருப்பி அடைத்தல், வீட்டின் மராமத்து வேலைகள் போன்றவற்றிற்காக பணம் எடுத்துக் கொள்ளலாம்.அதிகபட்சமாக, மொத்த பணத்தில் 75% வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம். தொழிலாளர் சேம நல நிதி உறுப்பினர் காலத்தில் அதிகபட்சமாக 5 முறைகள் வரை இதை பயன்படுத்தலாம்.

3. சிறப்பு சந்தர்ப்பங்கள் - புயல், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்கள், வேலை இழப்பு போன்ற நிதி நெருக்கடி காலங்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு பணத்தை முன்கூட்டியே பெறுவதற்கு தொழிலாளர் சேம நல நிதியின் உறுப்பினராக குறைந்த பட்சம் 12 மாதங்களாக இருக்க வேண்டும் அதற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் இவ்வாறு முன்கூட்டியே பணத்தை எடுக்க முடியாது.

எந்த ஒரு காரணத்திலும் 75% மேல் பணத்தை எடுக்க முடியாது. 25% பணமானது முடக்கப்பட்டு ஓய்வு காலம் வரை வைத்திருக்கப்படும். இவ்வாறு முன்கூட்டியே பணத்தை எடுப்பதற்கு படிவம் 31 பயன்படுத்த வேண்டும். இவை வேலையில் இருக்கும் பொழுது மட்டுமே பயன்படுத்த முடியும்.

2) மொத்தமாக பணத்தை எடுப்பது - வேலையை ராஜினாமா செய்த பிறகு, ஓய்வு பெற்ற பிறகு, விருப்ப ஓய்வு பெற்ற பிறகு, ஆட்குறைப்பினால் பாதிக்கப்படும் பொழுது, உடல் ஊனமுறுவது, வெளிநாட்டிற்கு குடியேறுவது போன்ற சந்தர்ப்பங்களில் தொழிலாளர் சேம நல நிதி பணத்தை மொத்தமாக எடுக்க முடியும்.

வேலையில்லாமல் இருந்தால், அதிகபட்சமாக 75% பணத்தை எடுக்க முடியும். 12 மாதங்கள் வேலையற்று இருந்தால் மட்டுமே, மீதி 25% பணத்தை எடுக்க முடியும். இதற்கு படிவம் 19 பயன்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வேலை விலகிய பின் பிஎஃப் பணத்தை முழுமையாக எடுப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
பிஎஃப் பணம் - EPF Withdrawal Online

தொழிலாளர் சேம நிதி ஓய்வூதியத்தை மொத்தமாக பெறுவதற்கு, 36 மாதங்கள் வேலையற்று இருந்தால் மட்டுமே முடியும். இதற்கு படிவும் 10C பயன்படுத்த வேண்டும்.

எவ்வாறு பணத்தைக் கோர முடியும்?

தொழிலாளர் சேம நல நிதி இணையதளத்தில் (https://www.epfindia.gov.in/site_en/) , நமது பொது கணக்கு எண் (Universal Account Number - யுஏஎன்) மற்றும் கடவுச்சொல்லை கொண்டு பதிவு செய்து, இணைய வழியாக இத்தகைய பணப்பெறுதலை செய்ய முடியும்.

பணம் கோரும் முகாந்திரம் மற்றும் அதற்கான படிவத்தைத் தேர்ந்தெடுத்து, நமது வங்கிக் கணக்கு விபரங்களைத் தெரிவித்து, கோரலைச் சமர்ப்பிப்பதன் மூலம் நமது பணத்தை 7 முதல் 20 வேலை நாட்களுக்குள் பெற முடியும். பொதுவாக, பணம் வெகு சீக்கிரமாகவே வந்துவிடும்.

கூட்டு வட்டித் திட்டங்களில் நடுவில் பணத்தை எடுப்பது, தங்க முட்டையிடும் வாத்தை வெட்டுவதற்கு சமமானது. நமக்கு வேறு எந்த ஒரு முகாந்திரங்களிலும் (மனைவி வேலைக்கு செல்வது, வீட்டின் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பது, பகுதி நேரத்தில் வேறு வேலைக்கு செல்வது போன்றவை) பணம் திரட்ட முடியாத பட்சத்தில் மட்டுமே, இதனைப் பயன்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இனி 3 நாட்களில் PF பணம் கிடைக்கும் : EPFO-வின் அதிரடி டிஜிட்டல் மாற்றம்..!
பிஎஃப் பணம் - EPF Withdrawal Online

புதிய சமூக பாதுகாப்பு விதி 2020 மற்றும் 2026 திருத்தங்களின் அடிப்படையில் உங்கள் PF தொகையை நிராகரிப்பின்றி பெற தேவையான படிவம் 31, படிவம் 19 மற்றும் படிவம் 10C ஆகியவற்றை சரியாக பயன்படுத்தி துரிதமாக பணத்தை மீட்கும் முழுமையான அறிவைப் பெறுவீர்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com