முதன்முறையாக வருமான வரி தாக்கல் செய்யப் போகிறீர்களா? இதைப் படியுங்கள்!

A man apply the tax
Taxfreepik
Published on

முதன்முறையாக வருமான வரி தாக்கல் செய்யப் போகிறீர்களா? மலைக்க வேண்டாம். வருமான வரி தாக்கல் எளிமையான விஷயம்தான். அதனை எவ்வாறு படிப்படியாக செய்வது என்பதனை இந்தப் பதிவில் பார்ப்போம்.

படி 1: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கோப்புகளைத் தயாராக வைத்திருங்கள்.

  • படிவம் 16 (Form 16)

  • படிவம் 26AS (Form 26AS)

  • வங்கிக் கணக்கு விவர அறிக்கைகள் (Bank Statements)

  • சம்பளச் சீட்டுகள் (Salary slips)

  • முதலீட்டு ஆதாரங்கள் (Investment proofs)

  • வீட்டு வாடகைச் சீட்டு (House rent receipt) அல்லது வீட்டு உடன்படிக்கை (Rental agreement)

  • வீட்டுக் கடன் வட்டிச் சான்றிதழ் (Home loan interest certificate)

  • பான் அட்டை

  • ஆதார் அட்டை

  • பங்குச் சந்தை, பரஸ்பர நிதிகள் போன்ற இதர வருமானம் சார்ந்த ஆவணங்கள்

படி 2: உங்களது வருமானம் வருமான வரி வரம்பினைத் தாண்டியுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.

பழைய வருமான வரி முறை:

  • 60 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு - ரூ. 2,50,000 வரை - வரி கிடையாது.

  • 60 வயது முதல் 80 வயதுக்குட்ட நபர்களுக்கு - ரூ. 3,00,000 வரை - வரி கிடையாது.

  • 80 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு - ரூ. 5,00,000 வரை - வரி கிடையாது.

புதிய வருமான வரி முறை:

  • ரூ. 3,00,000 வரை - வரி கிடையாது.

  • உங்களுக்கு வருமான வரி இல்லாவிட்டால் கூட, வரி இல்லை என்று தாக்கல் செய்வது (Nil Return) நலம்.

படி 3: வருமான வரி:

இணையதளத்தில் (https://incometaxindia.gov.in/) பதிவு செய்தல் (Register):

வருமான வரி இணையதளத்தில் ரிஜிஸ்டர் (Register) என்பதைச் சொடுக்கி, பான் எண்ணை உள்ளீடு செய்து, வருமான வரி செலுத்துபவராக (Tax payer) உங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

உங்களது தனிப்பட்ட விபரங்கள் (பெயர், விலாசம் போன்றவை) தெரிவித்து அதனைச் சமர்ப்பிக்க வேண்டும். உங்களுக்கு ஒரு முறை கடவுச்சொல் (One Time Password) மின்னஞ்சல் முகவரிக்கும், கைப்பேசி எண்ணிற்கும் வரும். அதனைக் கொண்டு உங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
சிபில் ஸ்கோர் குறைவது எப்படி? குறைந்த ஸ்கோரை உயர்த்துவது எப்படி?
A man apply the tax

படி 4: வருமான வரி இணையதளத்தில் உங்களது விபரங்களைக் கொண்டு, உள்நுழைந்து (login) ஐ.டி.ஆர் படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இணைய வழி வருமான வரி தாக்கல் (E-File) என்று தேர்ந்தெடுத்து வருமான வரி தாக்கல் (File Income Tax Return) என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் வரிக்கணிப்பு வருடம் (Assessment Year) AY2025-26 என்று தேர்ந்தெடுக்க வேண்டும். இணையவழி (online) என்பதை வரிதாக்கல் முறையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது உங்களுக்கு ஏற்ற ஐ.டி.ஆர் படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • ஐ. டி.ஆர் 1 - 50 இலட்சத்திற்கு குறைவாக வருமானத்தை உடைய சம்பளம் வாங்கும் நபர்கள்.

  • ஐ. டி.ஆர் 2 - மூலதன ஆதாயம் (Capital gains) அல்லது வெளிநாட்டு சொத்துக்களை (Foreign Asset) உடையவர்கள்.

  • ஐ. டி.ஆர் 3 - வியாபாரம் செய்யும் தனிநபர்கள் (Business) அல்லது தொழில் வல்லுனர்கள் (professional).

  • ஐ. டி.ஆர் 4 - உத்தேசமான வருமானத்தைக் (presumptive income) கொண்டு வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள்.

வருமான வரி படிவங்களைப் பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளோம். அதனைப் படித்துப் பாருங்கள்.

இதையும் படியுங்கள்:
Alert: வருமான வரி தாக்கல் படிவங்கள்... யாருக்கு எந்த படிவம்? தேர்வு முக்கியம்!
A man apply the tax
tax and calculator
taxfreepik

படி 5: எந்த வருமான வரி முறை உங்களுக்கு சிறப்பானது என்று பார்க்க வேண்டும். உங்களது எல்லா வருமானங்களையும் பட்டியலிட்டு, பழைய வருமான வரிமுறையில் உள்ள எல்லா வரிவிலக்கல்களையும் குறிப்பிட்டு உங்களது நிகர வருமானத்தைக் (Net income) கணக்கிட வேண்டும். அதனைப் போலவே, புதிய வருமான வரியில் வரும் எல்லா வரிவிலக்கல்களையும் குறிப்பிட்டு, உங்களது நிகர வருமானத்தைக் கணக்கிட வேண்டும். இரண்டில் எதில் உங்களுக்கு குறைவான வரி வருகிறது என்று பார்த்து உங்களுக்கு ஏற்ற வருமான வரி முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வருமான வரி முறைகளைப் பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளோம். அதனைப் படித்துப் பாருங்கள்.

இதையும் படியுங்கள்:
பழைய வருமான வரி முறை Vs புதிய வருமான வரி முறை: எதைத் தேர்ந்தெடுப்பது?
A man apply the tax

படி 6: ஐ.டி.ஆர் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்

ஐ.டி.ஆர் படிவத்தைத் தேர்ந்தெடுத்த பின், பின்வரும் விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும்.

ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்ட (pre-filled) உங்களது பான் எண், ஆதார் எண், வங்கி கணக்குகள், தோற்றுவாயில் கழிக்கப்பட்ட வரிகள் (Tax Deducted at Source (TDS)) போன்றவை சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

உங்களுடைய எல்லா வருமானங்கள், தோற்றுவாயில் கழிக்கப்பட்ட வரிகள் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.

உங்களுக்கு வரக்கூடிய வரி விலக்குகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான விபரங்களைக் குறிப்பிட வேண்டும்.

உங்களுடைய வருமானங்கள், தோற்றுவாயில் கழிக்கப்பட்ட வரிகள், வரி விலக்குகள் போன்றவை எல்லாம் சரியாக உள்ளனவா என்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
டிஜிட்டல் தங்கத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் தெரியுமா?
A man apply the tax

படி 7: வருமான வரி தாக்கல் செய்வது:

இணைய வழியாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். வருமானவரி தாக்கலை இணைய வழியாக சரி பார்க்க (E-Verify) வேண்டும். அதற்கு பல்வேறு வழி முறைகள் உள்ளன. ஆதார் எண், இணைய வங்கி (Net banking), மின்னணுவியில் சரிபார்ப்பு குறியீடு (Electronic Verification Code - EVC) (மின்னஞ்சல் (Email), குறுஞ்செய்தி (SMS) பயன்படுத்தி) போன்ற வழிமுறைகளில் ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பூர்த்தி செய்த படிவத்தை, பதிவிறக்கம் செய்து, படியெடுத்து (print), வருமான வரி அலுவலகத்திற்கு தபால் வழியாகவும் அனுப்பலாம். இணைய வழியாக சரி பார்ப்பது நலம்.

நீங்கள் சீக்கரமாக வருமான வரி தாக்கல் செய்ய வாழ்த்துகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com