மாணவர்களே! உங்கள் ID கார்டு ஒரு 'ஜாக்பாட்'! எப்படி?

Student id card and discounts and perks for students
Student id card
Published on

உங்கள் மாணவர் அடையாள அட்டை (Student ID Card) என்பது, ஒரு வகுப்பறைக்குள் நுழைய மட்டும் அல்ல! அது, அதிக மதிப்புள்ள தொழில்நுட்பம், கல்வி மற்றும் பொழுதுபோக்குச் சலுகைகளைத் திறந்துவிடும் ஒரு ரகசியப் பொக்கிஷம்! இதைப் பயன்படுத்தி, பல முன்னணி நிறுவனங்கள் வழங்கும் அதிரடித் தள்ளுபடிகளை இலவசமாவோ அல்லது குறைந்த விலையிலோ பெற முடியும்.

1. கேட்ஜெட் சலுகைகள் (Gadget Offers):

கணினி, டேப்லெட் இல்லாமல் இனி படிப்பே இல்லை.

  • Apple Gadgets:

    நீங்கள் ஒரு கல்லூரி மாணவரா? அப்படியானால், MacBook, iPad, AirPods போன்ற ஆப்பிள் தயாரிப்புகளைச் சந்தை விலையைவிடக் குறைவான விலையில் வாங்கலாம். இது பிரத்யேகமாக மாணவர்களுக்கென்று வழங்கப்படும் சலுகை.

  • HP/Dell/Lenovo:

    இந்த நிறுவனங்களின் மாணவர் அங்காடிகளில் (Student Stores) 10% முதல் 25% வரை தள்ளுபடி நிச்சயம். அதோடு இலவச MS Office மற்றும் துணைக்கருவிகள் (Accessories) கிடைக்கும்.

  • Samsung கல்வித் திட்டம் (Samsung Education Program):

    லேப்டாப் மற்றும் டேப்லெட்டுகளுக்குச் சாம்சங் வழங்கும் சிறப்புத் தள்ளுபடிகள் உங்கள் பணத்தை மிச்சப்படுத்த உதவும்.

இதையும் படியுங்கள்:
அசத்தலான அம்சங்களுடன் கருப்பு நிறத்தில் ஜொலிக்கும் 'Tata Nexon Dark Edition'
Student id card and discounts and perks for students

2. உணவு மற்றும் ரெஸ்டாரண்டுகள் (Food & Restaurants):

நண்பர்களுடன் வெளியே செல்லும்போது இனி செலவைப் பற்றிக் கவலை வேண்டாம்.

  • Zomato Pro/Swiggy One போன்றவற்றின் ஆன்லைன் உணவுச் சந்தாக்களில் 15% முதல் 30% வரை பிரம்மாண்டத் தள்ளுபடியைப் பெற முடியும்.

  • Domino's/McDonald's/Subway போன்றவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில், 10% முதல் 20% வரையிலான மாணவர் தள்ளுபடியைப் பயன்படுத்திச் சுவையான உணவை உண்ணலாம்.

  • Café Coffee Day (CCD) நிறுவனத்தில் மெட்ரோ நகரங்களில் ₹199-க்குள் கிடைக்கும் சிறப்பு மாணவர் காம்போக்கள், காபி பிரியர்களுக்கு ஒரு வரம்.

இதையும் படியுங்கள்:
பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தால் போதுமா?
Student id card and discounts and perks for students

3. சந்தாக்கள் மற்றும் மென்பொருள் (Subscriptions & Software Perks):

உங்களின் திறமையை உலகத்தரத்திற்குக் கொண்டுசெல்லும் கருவிகளை இனி இலவசமாகப் பெறலாம்.

  • GitHub Student Bundle: கோடிங் மற்றும் ஸ்டார்ட்அப்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு, ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள 100+ இலவசக் கருவிகள் இங்கே காத்திருக்கின்றன.

  • Amazon Prime Student: 6 மாதங்கள் வரை இலவசப் பிரைம் சந்தா மற்றும் அதன் பிறகு ஒவ்வொரு புதுப்பித்தலுக்கு 50% தள்ளுபடி உண்டு. பொழுதுபோக்குடன் சேர்த்து ஃபாஸ்ட் டெலிவரி பலன்களும் உண்டு.

  • Coursera & edX: உயர்தரப் பல்கலைக்கழகங்களின் பிரீமியம் படிப்புகளை (Premium Courses) மாணவர் அடையாள அட்டையைக் காட்டி இலவசமாகவே அணுகலாம்.

  • Spotify & YouTube Premium: வழக்கமான கட்டணத்தைவிடக் குறைவான விலையில் (மாதம் ₹59) விளம்பரம் இல்லாத பிரீமியம் சந்தாக்களைப் பெறுங்கள்.

இதையும் படியுங்கள்:
அட்டகாசம்! நீண்ட தூர பயணத்திற்குமான டாப் 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்...
Student id card and discounts and perks for students

4. AI கருவிகள் மற்றும் கிரியேட்டிவ் மென்பொருட்கள் (AI Tools & Creative Software):

நவீன கல்விக்கு இன்றியமையாத டிஜிட்டல் கருவிகள் இலவசமாக அல்லது தள்ளுபடியில் கிடைக்கின்றன.

  • Microsoft Office 365: Word, Excel, PowerPoint, Teams உட்பட அனைத்து மாணவர்களுக்கும் 100% இலவசம்.

  • Canva for Education: டிசைனிங்கில் அசத்த வேண்டுமா? Canva-வின் அனைத்து ப்ரோ அம்சங்களும் மாணவர்களுக்கு இலவசம்.

  • Adobe Creative Cloud: Photoshop, Premiere Pro போன்ற கிரியேட்டிவ் மென்பொருட்களுக்கான திட்டத்தில் 60% முதல் 70% வரை பிரம்மாண்டத் தள்ளுபடி.

  • Grammarly Premium: உங்கள் எழுத்துத் திறனை மேம்படுத்தும் இந்தச் சேவைக்கு 50% வரை தள்ளுபடி உண்டு.

இதையும் படியுங்கள்:
Kakeibo: செலவுகளைக் குறைக்கும் ஜப்பானியர்களின் தந்திரம்! மனஅமைதியும் நிச்சயம்!
Student id card and discounts and perks for students

உங்களின் கல்லூரி அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட மாணவர் மின்னஞ்சல் முகவரி (Student Email ID) தான் இந்தச் சலுகைகளை அன்லாக் செய்யும் பாஸ்வேர்டு. இன்றே இந்தச் சலுகைகளைப் பயன்படுத்தி, உங்கள் கல்விச் செலவுகளைக் குறைத்து, எதிர்கால முன்னேற்றத்திற்குத் தேவையான கருவிகளை இலவசமாகப் பெறுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com