ரூ.0.00 முதலீட்டில் அதிக வருமானம்! வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க 10 super ideas!

Zero investment business ideas
Zero investment business ideas
Published on

முதலீடு இல்லாத ஆனால் வருமானம் ஈட்டக்கூடிய பல தொழில்கள் உள்ளன. முதலீடு இல்லாத தொழில்களில் நம் அறிவு, திறமை மற்றும் நேரத்தை முதலீடாகப் பயன்படுத்தலாம் (Zero investment business ideas). இணையம் மற்றும் மொபைல் போன் மூலம் வீட்டிலிருந்தே ஆன்லைன் வணிகங்களைத் தொடங்கலாம். ஆலோசனை வழங்குவது, டிஜிட்டல் சேவைகள் போன்ற பல தொழில்களை செய்து வருமானம் ஈட்டலாம். இணையம் மற்றும் மொபைல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், ஆன்லைன் வணிக வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

முதலீடு இல்லாத சில தொழில் யோசனைகள்:

1) இணையதள ஆலோசனை (Online Consulting):

முதலீடு தேவையில்லாத இணையதள ஆலோசனைக்கு நம் திறன்களை பயன்படுத்தி ஃப்ரீலான்ஸ் எழுத்து, விர்ச்சுவல் அசிஸ்டிங், டிரான்ஸ்கிரிப்ஷன், டேட்டா என்ட்ரி அல்லது கிராபிக் டிசைன் போன்ற வேலைகளைச் செய்யலாம். நம்முடைய நிபுணத்துவத்தை பயன்படுத்தி மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவதன் மூலம் வருமானம் பெறலாம். சில இணையதளங்கள் ஆன்லைன் சர்வேக்கள், ஆப் டெஸ்டிங் மற்றும் சிறிய வீடியோ எடுப்பது போன்ற வேலைகளுக்கும் பணம் வழங்குகின்றன.

2) டிஜிட்டல் சேவைகள்:

இணையதள வடிவமைப்பு, சமூக ஊடக மேலாண்மை, உள்ளடக்க உருவாக்கம் (எழுதுதல், வீடியோ எடிட்டிங்) போன்ற சேவைகளை வழங்குவதன் மூலம் வருமானத்தை ஈட்டலாம். இந்த சேவைகளைத் தொடங்க பெரும்பாலும் ஒரு கணினி, இணைய இணைப்பு மற்றும் நம் நிபுணத்துவம் மட்டுமே போதுமானது. இதற்கு நாம் செய்த வேலைகளின் எடுத்துக்காட்டுகளுடன் ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது அவசியம். இது வாடிக்கையாளர்களுக்கு நம் திறமையை நிரூபிக்க உதவும். இதற்கு முதலில் சிறிய திட்டங்களுடன் தொடங்கி, பின்னர் அனுபவத்தை வளர்த்துக் கொண்டு பெரிய திட்டங்களை எடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ரோபோக்கள் நம் வேலைகளை அபகரிக்குமா? செயற்கை நுண்ணறிவின் இருண்ட பக்கம்!
Zero investment business ideas

3) வீட்டிலிருந்தே வியாபாரம்:

வீட்டிலிருந்தே பொருட்களை தயாரித்து விற்பனை செய்வது. கைவினைப் பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை வீட்டிலிருந்தே தயாரித்து விற்பனை செய்து லாபம் பார்க்கலாம்.

4) சமூக ஊடக மேலாண்மை:

சிறு வணிகங்கள் மற்றும் தனி நபர்களின் சமூக ஊடக கணக்குகளை நிர்வகிப்பது லாபகரமான தொழிலாக இருக்கும். வணிகங்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளை நிர்வகிக்கவும், உள்ளடக்கத்தை உருவாக்கவும் உதவுகிறது. பல வணிகங்கள் தங்கள் சமூக ஊடக இருப்பை நிர்வகிக்க நிபுணர்களை வேலைக்கு அமர்த்துகின்றன.

5) பயணத் திட்டமிடுதல்:

மற்றவர்களின் பயணங்களுக்கான திட்டங்களை தீட்டி வழங்குவது, குறைந்த செலவில் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, தனிப்பட்ட அல்லது குழு பயணங்களுக்கான பயணத் திட்டங்களை உருவாக்குவது. இதில் தங்குமிடம், போக்குவரத்து மற்றும் சுற்றுலா இடங்கள் ஆகியவற்றை உள்ளடக்குதல் அவசியம். சமூக ஊடகங்களில் நம் சேவைகளை விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம்.

6) அஃபிலியேட் மார்க்கெட்டிங் (Affiliate Marketing):

பிற நிறுவனங்களின் தயாரிப்புகளை நம் வலைப்பதிவு, சமூக ஊடகங்கள் அல்லது youtube சேனல் மூலம் விளம்பரப்படுத்தி, நம் இணைப்பு (link) மூலம் நடக்கும் ஒவ்வொரு விற்பனைக்கும் ஒரு கமிஷனைப் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
ஜெர்மனியில் வேலைவாய்ப்பை அள்ளித்தரும் டாப் 6 துறைகள்!
Zero investment business ideas

7) நிகழ்வு திட்டமிடல் (Event Planning):

நல்ல திட்டமிடும் திறன்கள் இருந்தால் சிறிய நிகழ்ச்சிகள் அல்லது விழாக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கலாம். இதற்கு சந்தையில் அதிகத் தேவை உள்ளது. இதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்.

8) தனிப்பட்ட சேவைகள் (Personal Services):

செல்லப் பிராணி பராமரிப்பு (pet sitting), வீட்டை சுத்தம் செய்தல், சலவை செய்தல் போன்ற சேவைகளை வழங்கலாம்.

9) ஆன்லைன் பயிற்சி மற்றும் வகுப்புகள்:

நமக்குத் தெரிந்த ஒரு கலையை ஆன்லைனில் கற்பிப்பது, பயிற்சி கொடுப்பது, வகுப்புகள் எடுப்பது போன்றவை முதலீடு இல்லாத தொழிலில் அதிக வருமானத்தை ஈட்ட முடியும். வெளிநாட்டு மொழியில் திறமை இருந்தால் மாணவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் எடுக்கலாம்.

10) வலைப்பதிவு எழுதுதல்:

WordPress அல்லது Blogger போன்ற தளங்களில் வலைப்பதிவை தொடங்கி விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர் செய்யப்பட்ட இடுகைகள் மூலம் வருமானம் ஈட்டலாம்.

தொழிலை தொடங்குவதற்கு முன்பு:

தொழிலை தொடங்குவதற்கு முன்பு முதலில் நம்மிடம் உள்ள திறமைகளையும், ஆர்வங்களையும் கண்டறிய வேண்டும். நாம் சேவையை வழங்க விரும்பும் துறையில் உள்ள தேவையை ஆராய வேண்டும். சமூக ஊடகங்கள், வலைப்பதிவுகள் அல்லது பிற ஆன்லைன் தளங்கள் மூலம் நம்முடைய சேவைகளை சந்தைப்படுத்துவது சிறப்பாக செயல்பட உதவும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் திறமையே முதலீடு: வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க உதவும் 5 வேலை வாய்ப்புகள்!
Zero investment business ideas

சேவைகளை தேவைப்படும் வாடிக்கையாளர்களைக் கண்டறிந்து அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். சிறிய அளவில் தொடங்கி படிப்படியாக நம் தொழிலை வளர்த்துக் கொள்ளலாம். இதில் நம் நேரமும் உழைப்பும் மிகவும் அவசியம். அதுதான் முக்கியமான மூலதனமும் கூட. இந்தத் தொழில்களைத் தொடங்க அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் விருப்பம் மட்டுமே தேவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com