DOSE (2026) - சினிமா விமர்சனம் | மலையாளம் / தமிழ் @ஆஹா தமிழ், அமேசான் பிரைம்..!!

அபிலாஷ் ஆர். நாயர் இயக்கத்தில் சிஜூ வில்சன், ஜெகதீஷ், அஸ்வின் குமார் நடித்துள்ள மலையாள/தமிழ் மூவியின் முழு விபரங்கள்.
DOSE திரைப்பட விமர்சனம்
DOSE திரைப்பட விமர்சனம்
Updated on

நாயகன் ஒரு பிரைவேட் ஹாஸ்பிடலில் டாக்டர்.அவரது மனைவி ஒரு நுரையீரல் பேஷண்ட்.அவர் பணி புரியும் ஹாஸ்பிடலிலேயே மனைவியை அட்மிட் செய்து பார்த்துக்கொள்கிறார்.நாயகனுக்கு ஒரு முன்னாள் காதலி உண்டு.அவளும் அதே ஹாஸ்பிடலில் நாயகனுக்கு கீழ் பணியாற்றும் டாக்டர்தான்.நாயகனின் காதலி கர்ப்பமாக இருந்தபோது குடும்ப சூழ்நிலைகள் காரணமாக வேறு பெண்ணைத்திருமணம் செய்து கொள்கிறார்.

இவை அனைத்தும் கடந்த காலக் கதையாக (Flashback) இருக்க, நிகழ்காலத்தில் அந்த மருத்துவமனையில் அடுத்தடுத்து மர்மமான முறையில் மூன்று நோயாளிகள் உயிரிழக்கின்றனர். தன் பெயரை கெடுப்பதற்காகவே, தனது முன்னாள் காதலிதான் இந்த தொடர் கொலைகளை செய்கிறாளோ என்று நாயகன் சந்தேகப்படுகிறான்.

ஹாஸ்பிடலின் எம்.டி-யின் (Hospital M.D) மகளை வில்லன் லவ் பண்ணுவதாக ஏமாற்றுகிறான்.வில்லன் ஒரு பெண் பித்தன்.அவன் எம்.டி-யையே மிரட்டும் அளவிற்குத் துணிகிறான்.

இந்த கேசை விசாரிக்க ஒரு போலீஸ் ஆபீசர் வருகிறார். கொலைகளை செய்தது யார்?

  • நாயகனின் முன்னாள் காதலியா?

  • மருத்துவமனையின் எம்.டி-யா?

  • அல்லது அந்த வில்லனா?

என்பதை போலீஸ் ஆபீசர் கண்டுபிடிப்பது தான் மீதித் திரைக்கதை.

நடிகர்களின் பங்களிப்பு:

  • சிஜூ வில்சன்: நாயகனாக சிஜூ வில்சன் அமைதியாக நடித்திருக்கிறார். டாக்டருக்குண்டான பொறுமை அருமை.

  • ஜெகதீஷ்: மருத்துவமனை எம்.டி-யாக நடித்திருக்கும் இவர்தான் வில்லனோ என்று பல இடங்களில் பார்வையாளர்களைச் சந்தேகிக்க வைக்கும்படி நடித்துள்ளார்.

  • அஸ்வின் குமார்: போலீஸ் ஆபீசராக அஸ்வின் குமார் கச்சிதம்.ஹேர் ஸ்டைல்,உடல் மொழி எல்லாமே பக்கா மிரட்டல்.

  • நாயகனின் காதலியாகவும், மனைவியாகவும் நடித்திருக்கும் நடிகைகளின் நடிப்பும், மற்ற கதாபாத்திரங்களின் பங்களிப்பும் கனகச்சிதம்.

இயக்கம்: கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் அபிலாஷ் ஆர். நாயர்.

DOSE திரைப்பட விமர்சனம்
DOSE திரைப்பட விமர்சனம்

சபாஷ் டைரக்டர் (நிறைகள்):

  1. நாயகனின் இந்நாள் மனைவி, முன்னாள் காதலி இருவருமே குடும்பப்பாங்கான அழகு என்பதால் அவர் யாருடன் இருந்தாலும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறது.

  2. போலீஸ் அதிகாரிக்கும், கொலையாளிக்கும் இடையே க்ளைமாக்ஸில் (Climax) நடக்கும் போராட்டம் அருமை.

  3. படத்தின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் (Climax Twist) முற்றிலும் எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது.

ரசித்த வசனங்கள்:

  • "நமக்குப்பிடிச்சவங்களோட மட்டுமே நாம் வாழ்ந்திட முடியுமா?"

  • "திடீரென்று வரும் மரணம் சில சமயம் வரம்."

  • "போலீஸ் ஆபீசரோட வேலை குற்றவாளியை கோர்ட்டில் நிறுத்துவதோடு முடிஞ்சிடுது. மீதியை கோர்ட் பார்த்துக்கும்."

  • "மனுசங்ககிட்ட ஒரு நேச்சர் இருக்கு... கூட இருக்கறவங்களை சந்தேகப்பட மாட்டாங்க."

  • "என் வீட்டை எப்படிக்கண்டுபிடிச்சீங்க?" - "தேடினால் எல்லாமே கிடைக்கும்னு நீங்கதானே சொன்னீங்க?"

  • "நாம் விரும்புகிறவர்கள் நம்மை விட்டுப்போனபின், அவங்க நம்ம கூடவே இருப்பதைப்போல் நாம் உணர்வது சகஜம்தான்."

  • "மனசுக்கு சந்தோஷமா இருந்தா தெய்வத்துக்குபிடிக்காதுனு படிச்சிருக்கேன்."

லாஜிக் மிஸ்டேக்ஸ் (குறைகள்):

  1. மெயின் கதைக்குப்போகும் முன் தேவை இல்லாத இரு பாட்டுக்கள் எதற்கு?

  2. எதிரில் தென்படும் எல்லா பெண்களிடமும் வழியும் அந்த விசித்திரமான 'காமெடியன் டாக்டர்' அதிகம் அறிமுகமில்லாத ஒரு பெண்ணிடம் "மொட்டை மாடிக்கு வா" என மெசேஜ் அனுப்பியதும், அந்தப் பெண் என்ன ஏதென்று கேட்காமல் கூப்பிட்ட இடத்திற்குப் போவது ஏன்?

  3. அடுத்தடுத்து மர்மமான முறையில் நோயாளிகள் சாகிறார்கள் என்பதை விஷூவலாக சொல்ல ரொம்ப போர் அடிக்கும்படி காட்சிகளை அடுக்குவது ஏன்?

  4. பேஷண்ட் ஆக இருக்கும் அந்தப்பாடகர். தன்னை கவனிக்க வந்த மனைவியிடம் எரிந்து விழுவது ஏன்?

  5. காரில் செல்லும்போது நாயகன் சீட் பெல்ட் (Seat Belt) அணியாமல் செல்வது ஏன்?

  6. பேஷண்ட்டின் உடம்பில் விஷம் மாதிரி எதையோ செலுத்தி இருக்கிறார்களா? என்பதை பிளட் டெஸ்ட் எடுத்துப்பார்த்தா தெரிஞ்சிடுமே? என டாக்டரின் மனைவி கேட்க, உடனே டாக்டர் அதை செயல்படுத்த விரைகிறார்.ஒரு மருத்துவரான அவருக்கே அந்த அடிப்படை யோசனை ஏன் தோன்றவில்லை?

  7. மருத்துவமனை எம்.டி-யின் மகளை காதலிப்பதாக நடிக்கும் வில்லனை, எம்.டி எந்த பின்னணியும் இல்லாத நிலையிலும் தன் மருத்துவமனையிலேயே தொடர்ந்து வேலைக்கு வைத்திருப்பது எப்படி?

8. எந்தவொரு பெரிய பின்புலமும் (Background) இல்லாத வில்லன், மருத்துவமனை எம்.டி-யையே அந்த அளவுக்கு மிரட்டுவது சற்று ஓவர்.

9. நாயகன் தன் முன்னாள் காதலிதான் கொலையாளியோ என சந்தேகப்படுகிறான். ஆனால், தன் மனைவியை அதே மருத்துவமனையில் அட்மிட் செய்வது எப்படி? (க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் இதற்குப் பதில் இருந்தாலும், அதுவரை லாஜிக் இடிக்கிறது).

10. வில்லனை மொட்டை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயல்பவன், அதன்பின் வில்லனின் செல்போனிலிருந்தே தற்கொலை மெசேஜ் அனுப்புகிறான். இப்போது வில்லனின் உடல் கீழே கிடக்க, தள்ளிவிட்டவன் மொட்டை மாடியில் வில்லனின் செல்போனுடன் இருக்கிறான். அப்படியிருக்க, மீண்டும் அந்தச் செல்போனை எப்படிக் கீழே இருக்கும் வில்லனின் சட்டைப் பைக்குள் வைக்க முடியும்?

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்: 16+ (Adult Content Warning)

கல்கி கமெண்ட்: சைக்காலஜிக்கல் க்ரைம் திரில்லர் பார்க்கும் பொறுமை உள்ளவர்கள் பார்க்கலாம்..மெதுவாக நகரும் திரைக்கதை.

ரேட்டிங்: 3/5.

இதையும் படியுங்கள்:
தியேட்டரை தொடர்ந்து ஓடிடிக்கு வரும் 'கட்டா குஸ்தி 2'... எப்போ? எங்கே தெரியுமா?
DOSE திரைப்பட விமர்சனம்
இதையும் படியுங்கள்:
இனி ரேஷன் கடைகளில் பணியாளர்கள் எடை போட தேவையில்லை! வந்தாச்சு டிஜிட்டல் பாக்கெட் சிஸ்டம்!
DOSE திரைப்பட விமர்சனம்
logo
Kalki Online
kalkionline.com