விமர்சனம்: காட்டான் 2026 - க்ரைம் திரில்லர் வெப் சீரிஸ்!

'காட்டான்' ஜியோ ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகி உள்ளது.
Kaattaan
Kaattaan
Published on
ரேட்டிங்(2.5 / 5)

இந்த வெப் சீரிஸ் மொத்தம் 10 எபிசோடுகள் கொண்டது. ஒவ்வொரு எபிசோடும் 30 நிமிடங்கள், ஆக மொத்தம் 300 நிமிடங்கள், அதாவது 5 மணி நேரம் ஒரே சிட்டிங்கில் அமர்ந்தால் மொத்த வெப் சீரிசையும் பார்த்து முடித்து விடலாம்.

காக்கா முட்டை, கடைசி விவசாயி புகழ் மணிகண்டன் இயக்கிய வெப் சீரிஸ் இது. விஜய் சேதுபதி நாயகன் ஆக நடித்திருக்கிறார்.

ஸ்பாய்லர் அலெர்ட்

ஒரு கிராமம். அங்கே ஒரு போலீஸ் ஸ்டேசன். அந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக எந்தக் குற்றமும் நடைபெறாததால், 'ஆளே இல்லாத கடைல யாருக்காக டீ ஆத்தறே?' என்ற விவேக் காமெடி மாதிரி அரசாங்கம் அந்த ஊர் ஸ்டேசனை மூடி விட்டு வேறு ஒரு ஊரில் அந்த ஸ்டேஷனை நியமிக்க இருக்கிறது.

இந்த சமயத்தில் தான் நாயகனின் வெட்டப்பட்ட தலை மட்டும் அந்த ஊர் எல்லையில் கிடைக்கிறது. சிரித்த முகமாக அந்தத் தலை இருக்கிறது. இந்தக் கேசை போலீஸ் டீம் இன்வெஸ்டிகேசன் செய்கிறது.

நாயகனின் போட்டோவைக் காட்டி ஊரில் விசாரணை நடக்கிறது. நாயகன் ஒரு நடன நாட்டியக் குழுவின். செக்யூரிட்டி என ஒருவர் சொல்கிறார். நாட்டியக் குழுவில் நடனமாட வரும் பெண்களை கலாய்க்க, கிண்டல் செய்ய வரும் கூட்டத்திலிருந்து பாதுகாப்பவன் தான் நாயகன் என்று ஒருவர் சொல்கிறார்.

ஹோட்டலில் சப்ளையர் ஆக நான் இருந்தேன். என்னை மிகவும் கேவலமாக ஓனர் நடத்தினார். அப்போது அங்கே சாப்பிட வந்த நாயகன் ஓனரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஓட்டலை விலைக்கு வாங்கி என்னை ஓனராக்கி விட்டு அவர் பாட்டுக்குப் போய்ட்டார் என்கிறார் ஒருவர்.

இப்படி ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சொல்கிறார்கள். ஆனால் அனைத்து சம்பவங்ககளிலும், அனைவர் பார்வையிலும் அவர் நல்லவர் ஆகவே இருக்கிறார். இப்படிப்பட்ட நல்லவரை யார் இப்படிக் கொடூரமாகக் கொலை செய்திருப்பார்கள்? என்பதைக் கண்டறிவது தான் மொத்தத் திரைக்கதையும்.

நாயகன் ஆக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் நல்லவர் ஆக மக்கள் மனதில் பதிந்தவர்கள் இருவர் தான். ஒருவர் எம்.சசிகுமார் மற்றவர் விஜய் சேதுபதி.

ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான நடிப்பில் நம் மனதைக் கொள்ளை கொள்கிறார்.

நாயகனை விட அதிகக் காட்சிகளில் வருபவர்கள். சப் இன்ஸ்பெக்டர் ஆக வரும் முத்துக்குமாரும், கான்ஸ்டபிள் ஆக வரும் சிங்கம் புலியும். இருவரும் கொடுத்த கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

வடிவேல் முருகன், பார்வதி, பாலாஜி சக்திவேல், கலைவாணி பாஸ்கர், மிலிந்த் சோமன், அபி நட்சத்திரா, சுனிதா, சாதனா என எல்லோரும் அவரவர் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

இசை ராஜேஷ் முருகேசன். பல கால கட்டங்களில் கதை பயணிப்பதால் கால மாற்றத்துக்கு ஏற்றபடி இசை அமைக்க வேண்டிய சூழல். உணர்ந்து செய்திருக்கிறார். பின்னணி இசையும் குட்.

என் சண்முக சுந்தரம், என் மது இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். கிராமிய அழகைக் காட்டுவதில், நாயகியின் க்ளோசப் ஷாட்ஸ் அனைத்தும் அழகு.

இதையும் படியுங்கள்:
விமர்சனம் - Happy Raj - ரசிகர்கள் ஹாப்பியா?
Kaattaan

சாபு மோகன் + ஜாக்கி இருவரும் ஆர்ட் டைரக்சனை கவனித்து இருக்கிறார்கள், குட்.

பி அஜித் குமார் + மணிகண்டன் இருவரும் இணைந்து இயக்கி இருக்கிறார்கள். இதில் பி அஜித் குமார் எடிட்டிங் பணியையும் செய்திருக்கிறார்.

சபாஷ் டைரக்டர்

  • தமிழில் உருவான மிகப்பெரிய வெப் சீரிஸ் என்ற பெருமையும், விஜய் சேதுபதி நடித்த முதல் வெப் சீரிஸ் என்ற பெயரும் இதற்கு உண்டு.

  • ஒவ்வொரு எபிசோடு முடியும் போதும் நாயகன் பற்றிய விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி நம்மை ஆச்சரியப்படுத்தும் விதம் அருமை.

  • ஹீரோ ஓப்பனிங்க் சீனிலேயே டெட்பாடியாக கிடைப்பது அதுவும் தலை மட்டும் என்பது சுவராஸ்யம் தான்.

  • வாட்ச் ரிப்பேர் மேன், யானைப் பாகன், நடனக்குழு செக்யூரிட்டி, ஆட்டுப் புழுக்கை வியாபாரி, வீட்டு மேனேஜர், சரக்கு வாகன டிரைவர் என ஆறு விதமான பணியாளராக வந்தாலும் அனைத்திலும் மனித நேயம் மிக்க மகத்தான மனிதர் ஆகக் காட்டப்படுவது சிறப்பு.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: சாத்தான்: தி டார்க் - சாத்தான் பயமுறுத்தியதா?
Kaattaan

லாஜிக் மிஸ்டேக்ஸ்

  • பாரன்சிக் டீம் என்று ஒன்று இருப்பதையே மறந்து விட்டார்கள். ஒரு கொலை நடந்தால் கொலை நடந்த இடத்தில் கை ரேகை உட்பட பல விஷயங்கள். தடயவியல் நிபுணர்கள் வந்து தான் கண்டறிவார்கள். இதில் அப்படி ஒரு துறையே இல்லை.

  • மொத்தமாக 6 எபிசோடில் முடிக்க வேண்டிய கதையை ஜவ்வாக இழுத்து விட்டார்கள்.

  • ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு ட்விஸ்ட் வைக்க வேண்டும் என்ற வெப் சீரிஸ் விதியை மறந்து விட்டார்கள் போல. அது பாட்டுக்கு சஸ்பேண்ஸே இல்லாமல் தேமேன்னு நகருது.

  • திரைக்கதை அமைப்பில் மலையாளப் படங்களான சார்லி, எக்கோ படங்களின் சாயல் இருக்கிறது.

  • கடைசி விவசாயி, காக்கா முட்டை ஆகிய படங்களில் இருந்த வாவ் மொமெண்ட்ஸ் இந்த வெப் சீரிசில் இல்லை.

  • நான் லீனியர் கட்டில் திரைக்கதை சொல்லப்படுவதால் பல குழப்பங்கள். எந்தக் காலகட்டத்தில் என்ன சம்பவம் என்பதில் தடுமாற்றம்.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்க்: 18 + வன்முறைக் காட்சிகளுக்காக A சர்ட்டிபிகேட்.

சி பி எஸ் பைனல் கமெண்ட் -  விஜய் சேதுபதி ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம். அனைத்துத் தரப்புக்குமான வெப் சீரிஸ் அல்ல. 2 மணி நேரத்தில் சொல்ல வேண்டியதை அஞ்சே கால் மணி நேரம் சொன்னால் பொறுமை வேண்டுமே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com