விமர்சனம்: பைக்கர் (2026) - ஸ்போர்ட்ஸ் டிராமா!

Biker
Biker
Published on
ரேட்டிங்(2.5 / 5)

நம்ம ஊரில் அந்நியன் படத்தில் விக்ரமும், வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவும் படத்தில் நடிப்பதற்காக உடல் எடையைக் குறைத்த மாதிரி தெலுங்கில் சர்வானந்த் 18 வயது இளைஞன் ஆக, 30 வயது வாலிபன் ஆக நடிக்க ஜிம் போய் கடுமையாகப் பயிற்சி செய்து ஹெல்த் பிட் ஆக மாறி நடித்த படம் பைக்கர் (Biker).

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகனின் அப்பா மிகப்பெரிய பைக் ரேஸ் வீரர். புகழ் பெற்றவர். பைக்கை ஸ்டார்ட் செய்தாலே எதிரிகளுக்கு ஸ்ட்ராட்டிங் ட்ரபுள் ஏற்படுத்தும் அளவுக்கு கெத்து உள்ளவர்.

இவருக்கு ஒரு லட்சியம் உண்டு. தன் மகனை எப்படியாவது தன்னைப் போலவே ஒரு பைக் ரேஸ் வீரன் ஆக்கி விட வேண்டும் என நினைக்கிறார். மகனுக்குக் கடுமையான பயிற்சி அளித்துத் தான் நினைத்தபடி. அவனை பைக் ரேஸ் வீரன் ஆக்கி விடுகிறார்.

இப்போது நாயகன் தான் பைக் ரேஸ் நெ 1வீரர்.

ஒரு கட்டத்தில் நாயகனுக்குக் காதல், கல்யாணம் என்று நடக்கும் போது நாயகி நாயகனுக்குக் கடிவாளம் போடுகிறாள்.

பைக்கை எடுத்துட்டு நீங்க வெளில போனா திரும்பி வந்தாதான் நிஜம். இப்படி எல்லாம் சஸ்பென்சோடு நான் வாழ முடியாது. ஒழுங்கா குடும்பஸ்தனா இருக்க வழி பாருங்க என கண்டிப்புடன் கூறி விடுகிறாள்.

மனைவி சொல்லே மந்திரம், அவள் கிட்டே செல்லாது நம் தந்திரம் என்பதை உணர்ந்த நாயகன் பைக் ரேஸ்க்கு கும்பிடு போட்டு தன் வேலையை மட்டும் பார்க்கிறான்.

இத்தனை வருடங்களாக மகனுக்குப் பயிற்சி அளிக்கத்தன் வாழ்க்கையையே முழுவதுமாக அர்ப்பணித்த அப்பாவுக்கு இது பிடிக்கவில்லை.

உன்னை பைக் ரேஸ் வீரன் ஆக்கியது போல வேறு ஒருவரை என்னால் உருவாக்க முடியாதா? என சவால் விட்டு அதற்கான முயற்சியில் இறங்குகிறார். ஆனால் நாயகன் போல வேறு யாரையும் நாயகனின் அப்பாவால் உருவாக்க முடியவில்லை.

இந்தப் பிரச்சனையால் அப்பா மகன் இருவரும் பேசிக்கொள்வதில்லை. மனஸ்தாபம் ஏற்பட்டு விடுகிறது.

நாயகனின் அப்பாவுக்கு ஸ்பான்சர் செய்த ஒரு கார்ப்பரேட் கம்பெனி அவரை வேலையை விட்டுத்தூக்கி விடுகிறது.

தன் மனைவிக்காக பைக் ரேசை விட்ட நாயகன் இப்போது தன் அப்பாவின் தன்மானத்தைக் காப்பாற்ற மீண்டும் பைக் ரேசில் களம் இறங்குகிறார்.

இதற்குப்பின் நிகழும் அதிரி புதிரி சம்பவங்கள் தான் மொத்தத் திரைக்கதையுமே.

நாயகன் ஆக சர்வானந்த் பிரமாதமாக நடித்திருக்கிறார். அவரது பாடி பிட்னெஸ் வியக்க வைக்கிறது.

நாயகனின் அப்பாவாக இது தாண்டா போலீஸ் புகழ் டாக்டர் ராஜசேகர் நடித்திருக்கிறார். நல்ல நடிப்பு. ஆனால் அவரது கெட்டப், ஒப்பனை சரி இல்லை.

நாயகி ஆக மாளவிகா நாயர் இளமைத்துள்ளலுடன் நடித்திருக்கிறார்.

பிரம்மராஜ், தயானந்த் ரெட்டி ஆகியோர் நடிப்பும் அருமை. வில்லனாக அதுல் குல்கர்னியின் கெட்டப்பும், நடிப்பும் அருமை.

ஜிப்ரானின் இசையில் 6 பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை கலக்கல் ரகம்.

அனில் குமார் பலாசாவின் எடிட்டிங்கில் படத்தின் ரன்னிங்க் டைம் 162 நிமிடங்கள். இன்னனும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்.

ஜே யுவராஜின் ஒளிப்பதிவு அற்புதம்.

இருவருடன் இணைந்து திரைக்கதை எழுதி தனி ஆளாக இயக்கி இருக்கிறார் அபிலாஷ் ரெட்டி கங்காரா.

சபாஷ் டைரக்டர்

  • தமிழில் வெளிவந்த வெண்ணிலா கபாடிக்குழு, ஹிந்தியில் வெளியான டங்கல், ஹாலிவுட்டில் வெளியான கிங்க் ரிச்சர்டு ஆகிய படங்களைப் போலவே எமோஷனல் கனெக்ட் தரக்கூடிய காட்சி அமைப்புகள். பெரிய பிளஸ்.

  • பைக் ரேசிங்க் ஆக்சன் சீக்வன்ஸ் அனைத்தும் அதகளம். மேக்கிங்கிலும் தரம்.

  • ஸ்போர்ட்ஸ் ட்ராமா மூவிகள் அனைத்திலுமே வருவது போல் இதிலும் சாமான்ய மக்களுக்குப் புரியும்படி விதிமுறைகளை ஏதோ ஒரு கேரக்டர் மூலம் விளக்கி விட்டு க்ளைமாக்சில் பொருத்தமாக அதை மேட்ச் செய்து நாயகன் ஜெயிப்பதை காட்டிய விதம்.

  • மலைப்பிரதேசத்தில் வரும் பைக் ஜம்ப்பிங்க் சீன் ஸ்லோமோஷனில் கலக்கல் ரகம்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: Masthishka Maranam (2026) - மலையாளம் - சயின்ஸ் பிக்சன் க்ரைம் திரில்லர்!
Biker

லாஜிக் மிஸ்டேக்ஸ்

நாயகனை பைக் ரேஸ் வீரர் எனக்காட்டும் காட்சிகள் நிறைய இருந்தாலும் நாயகனின் குருவாக வரும் நாயகனின் அப்பா ஒரு சீனில் கூட பைக் ரேஸ் வீரர் என்பதை விஷூவலாகக்காட்டவே இல்லை. இது பெரிய பின்னடைவு.

நாயகன், நாயகனின் அப்பா இருவருக்கும் இடையே ஆன பாண்டிங்க் சரியாக காட்டப்படவில்லை. அது கச்சிதமாகக் காடப்பட்டு இருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.

ஜிப்ரான் தமிழில் இசை அமைத்த அதே கண்கள் (2017) படத்தில் வரும் அடியே நீ களவாணி பாடல் இசையை நைசாக களவாடி இதில் சாமார்த்தியமாகப் பயன்படுத்தி விட்டார். பாடல் வரிகள் மட்டும் வேறு. இசை டிட்டோ அதே தான்.

பைக்கை எரிக்கும் சீனில் பைக்குக்கு அருகிலேயே நின்றால் பெட்ரோல் டாங்க் வெடிக்காதா?

ஒவ்வொரு காட்சியும் யூகித்தபடியே வருவது மைனஸ். எதிர்பாராத திருப்பம் என எதுவும் இல்லை.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16 + (ஒரு லிப் லாக் காட்சி உண்டு.)

சி பி எஸ் பைனல் கமெண்ட் - அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்கும் படம் அல்ல, ஆண்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு, அஜித் ரசிகர்களுக்குப் பிடிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com