கமலா தியேட்டரில் சர்ப்ரைஸ் விசிட்! ‘சிக்மா’ பார்க்க வந்த விஜய்யின் மனைவி சங்கீதா - சாஷா!

தனது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக முதன்முறையாகக் களம் இறங்குவதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சங்கீதா தற்போது சென்னை வந்துள்ளார்.
Sangita and daughter Sasha visit Kamalaa Theatre|சங்கீதா விஜய்
Sangita and daughter Sasha visit Kamalaa Theatre|சங்கீதா விஜய்
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

தமிழ்நாட்டின் முதலமைச்சரும், முன்னணி நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள 'சிக்மா' திரைப்படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநராகத் தனது முதல் அடியை எடுத்து வைக்கும் ஜேசன் சஞ்சய்க்கு குடும்பத்தினரின் ஆதரவு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

ஒருபுறம் முதலமைச்சர் விஜய் இன்று காலை கோயம்பேட்டில் இலவச பேருந்து பயண திட்டத்தை தொடங்கி வைத்திருந்த நிலையில், மறுபுறம் அவரது மனைவி சங்கீதா, மகள் திவ்யா ஷாஷா, மகன் ஜேசன் சஞ்சய் ஆகியோர் வடபழனியில் இருந்தனர்.

இலவச பேருந்து பயண திட்டத்தை தொடங்கிய வைத்ததுடன், மதுராந்தம் தொகுதியில் ரோடு ஷோ என முதலமைச்சர் மக்கள் பணியில் பிஸியாக இருக்க, அவரது மனைவி (சங்கீதா விஜய்) சங்கீதாவோ, மகள் திவ்யா ஷாஷாவுடன் தனது மகன் ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை வடபழனியில் உள்ள புகழ்பெற்ற கமலா திரையரங்கிற்கு வருகை தந்திருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்ஹப தனது கணவர் விஜய்க்கு வேறொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் இதனால் தன்னை விலக்கி வைத்திருப்பதாகவும், தனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தர வேண்டும் என்றும் சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

வழக்கு விசாரணையின் போது இருவரும் காணொலி (Video Call) வாயிலாக ஆஜராகி விளக்கமளித்தனர்.

விவாகரத்து வழங்குவதில் விஜய்க்கு விருப்பம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரிடமிருந்து விவாகரத்து கோரி தொடரப்பட்ட வழக்கை சங்கீதா திரும்பப் பெற்றார் (வாபஸ் பெற்றார்). அவராகவே விவாகரத்து கோரினார், பின்னர் அவராகவே மனுவை திரும்பப் பெற்றார்.

sigma movie
sigma movie source:district app

இதற்கிடையே சமீபத்தில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்ற விஜய், அங்கு மனைவி சங்கீதாவை சந்திப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் இதெல்லாம் நடக்கவில்லை.

இந்நிலையில், தனது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக முதன்முறையாகக் களம் இறங்குவதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சங்கீதா தற்போது சென்னை வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜேசன் சஞ்சய் தனது இயக்கத்தில் வெளியான ‘சிக்மா’ திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்க்க, இன்று காலை தனது தாய் சங்கீதா மற்றும் தங்கை திவ்யா சாஷாவுடன் சென்னை கமலா திரையரங்கிற்கு வருகை தந்தார்.

இதையும் படியுங்கள்:
திடீர் திருப்பம்! விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா: வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்!
Sangita and daughter Sasha visit Kamalaa Theatre|சங்கீதா விஜய்

அவர்களைப் பார்த்ததும் திரையரங்கில் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகமடைந்து ஆரவாரம் செய்தனர். அப்போது ஜேசன் சஞ்சய் தன் தாயைக் கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஜேசன் சஞ்சய் தனது தாய் மற்றும் தங்கையை தியேட்டருக்கு அழைத்துச் சென்றார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி அவர்களுக்குப் பலத்த மற்றும் உற்சாகமான வரவேற்பை அளித்தனர்.

கேமராக்களுக்கு புன்னகையுடன் போஸ் கொடுத்தபடி சங்கீதா மற்றும் திவ்யா தியேட்டருக்குள் சென்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா நடிப்பில் ஒரு ஹெய்ஸ்ட் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
சிக்மா படத்திற்காக அப்பா விஜய் கொடுத்த பரிசு: ஜேசன் சஞ்சய் அளித்த நெகிழ்ச்சியான பதில்!
Sangita and daughter Sasha visit Kamalaa Theatre|சங்கீதா விஜய்

இளம் திறமையாளரான சஞ்சய்யின் இந்த முதல் முயற்சிக்கு, ஏற்கனவே நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யா உள்ளிட்ட பல முன்னணித் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com