'Don't Trouble The Trouble' பகத் பாசிலின் தெலுங்கு படம். குழந்தைகளைக் கவரும் அமானுஷ்யக் கதை!

எஸ்.எஸ்.ராஜமௌலி தயாரிப்பில் கலக்கலாக வெளியான ஜாலி என்டர்டெய்னர் சினிமா விமர்சனம்.
திரை விமர்சனம்
திரை விமர்சனம்
Updated on: 
ரேட்டிங்(2.5 / 5)

பகத் பாசில் தெலுங்கில் ஹீரோவாக நடித்திருக்கும் முதல் படம் இது. நம்ம ஊரில் ரிலீஸ் ஆன மை டியர் குட்டிச்சாத்தான் படம் போல குழந்தைகளைக் கவரும் விதத்தில் உருவான படம் இது.

2012ம் ஆண்டில் ரிலீஸ் ஆன தெலுங்குப்படமான ஸ்ரீமன் நாராயணா படத்தில் ஹீரோ நந்தமுரி பாலகிருஷ்ணா ஒரு பஞ்ச் டயலாக் பேசி இருப்பார். Don't trouble the trouble, if u trouble the trouble, trouble troubles you, I am not the trouble. இந்த டயலாக்கை இன்ஸ்பிரேசனாகக்கொண்டு தான் படத்துக்கு டைட்டிலே வைத்திருக்கிறார்கள்.

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகன் ஒரு தனியார் ஹாஸ்பிடல் ஆம்புலன்ஸ் டிரைவர். அம்மா, அப்பா இல்லை. நாயகனுக்கு பணம் மட்டுமே குறிக்கோள். பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். இவன் ஒரு போலி மேஜிக் மேன் கூட. அதாவது அரைகுறையா மேஜிக் கற்றுக்கொண்டு பலரை தான் பெரிய மேஜிக் மேன் என்பது போல ஏமாற்றுவான்.

தான் செய்த ஒரு ஏமாற்று வேலையால் ஒரு லோக்கல் ரவுடியிடம் நாயகன் மாட்டிக்கொள்கிறான். அவனுக்கு 25 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும். இரண்டு நாள் டைம் கொடுக்கிறான் ரவுடி.

நாயகனுக்கு இரண்டு நாட்களில் ரூ 25 லட்சம் ரெடி பண்ண வழி இல்லை. அதனால் பணக்கார வீட்டுக் குழந்தையைக் கடத்தி பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கலாம் என்று திட்டம் போடுகிறான்.

நாயகி 10 வயது சிறுமி. அவளிடம் அமானுஷ்ய சக்தி இருப்பதை நாயகன் பின்னாளில் உணர்கிறான். இந்த சிறுமியை வைத்து நாயகன் என்ன எல்லாம் செய்யத் திட்டமிடுகிறான் என்பது பின் பாதித் திரைக்கதை.

நாயகியின் அம்மா, அப்பாவைக் காணவில்லை. திடீர் என்று மறைந்து விட்டார்கள். 'உன் மேஜிக் திறமையைப் பயன்படுத்தி என் அம்மா, அப்பாவை வரவழி' என்கிறாள் சிறுமி. நாயகன் ஒரு டுபாக்கூர் மேஜிக் மேன் என்பது சிறுமிக்குத் தெரியாது.

இதற்குப்பின் நடக்கும் ஜாலி சம்பவங்கள் தான் மீதித் திரைக்கதை.

நாயகனாக பகத் பாசில் உயிர் ஊட்டி இருக்கிறார் அந்தக் கேரக்டருக்கு. இந்தக் கேரக்டர் எல்லாம் அவருக்கு ஜூஜூபி மாதிரி.

நாயகி சிறுமியாக சாரா பலேக்கர் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

சவுரப் சச்தேவா, மகேஷ் மஞ்சுரேக்கர், வெங்கடேஷ் கக்குமானு ஆகியோரும் கொடுத்த கேரக்டரை கச்சிதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

எஸ் எஸ் ராஜமவுலியின் சொந்தப்படம் இது. அவரது மகன் பெயரில் தயாரித்திருக்கிறார்.

ஹம்சா அலியுடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியாக இயக்கி இருக்கிறார் சசாங்க் ஏலட்டி.

நிவின் பாலி நடித்த 'சர்வம் மாயா' பட பாணியில் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

திரை விமர்சனம்
திரை விமர்சனம்

பிராட் பிரான்சிஸ் தான் ஒளிப்பதிவு. அருமையாகக் காட்சிகளைப் படம் பிடித்திருக்கிறார்.

பிரவீன் ஆண்ட்டனியின் எடிட்டிங்கில் படம் 156 நிமிடங்கள் ஓடுகிறது. இன்னமும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்.

கால பைரவா வின் பின்னணி இசை கச்சிதம்.

இதையும் படியுங்கள்:
'வரதன்' பட ரீமேக்கா அசோக் செல்வனின் புதிய படம் 'அன்பில் அவன்'? தம்பதியின் போராட்டமும் த்ரில்லரும்!
திரை விமர்சனம்

சபாஷ் டைரக்டர்

1. போலீஸ் ஸ்டேசன் சீக்வன்சில் நாயகன், சிறுமி இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். தியேட்டரில் ஆரவாரம், கரவொலி அடங்கவே நீண்ட நேரம் ஆனது.

2. காமெடிக்காட்சிகளும் சரி, எமோஷனல் பாண்டிங் சீன்களும் சரி டச்சிங்காக இருந்தன.

3. ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் ஒரு சீக்வன்சும், க்ளைமாக்ஸ் சீனும் அதகளம். குழந்தைகள் கொண்டாடினார்கள்.

4. நாயகியான சிறுமி ஒரு அமானுஷ்ய ஆத்மா என்பதையும் தனது கண்களுக்கு மட்டும்தான் தெரிகிறாள் என்பது தெரிய வரும்போது நாயகன் காட்டும் அதிர்ச்சி அருமை.

5. நாயகனுக்கும், சிறுமிக்கும் நடக்கும் காமெடி காட்சிகள் அருமை.

இதையும் படியுங்கள்:
விஜய் சேதுபதி - சாய் நடித்துள்ள 'பத்தா' விமர்சனம்: பயம் கலந்த சிரிப்பு விருந்து!
திரை விமர்சனம்

லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. படம் முழுக்க நாயகன், சிறுமி காம்பினேஷன் காட்சிகள் தான் ஆக்ரமித்து இருக்கிறது. சில இடங்களில் போர் அடிக்கிறது.

2. குழந்தைகளைக் கவர்வது போல் காட்சிகளை அமைத்தவர்கள், பெரியவர்கள் ரசிக்கும்படி எடுக்கவில்லை.

3. பின் பாதி திரைக்கதை மிக மிக ஸ்லோ.

4. போலீஸ் இன்வெஸ்டிகேஷன் சீன்ஸ் எல்லாம் போர்.

5. சிறுமியின் பெற்றோரைக் கொன்றவர்களை நாயகன் கண்டுபிடிப்பதில் சுவராஸ்யம் இல்லை.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்க் - க்ளீன் யு

கல்கி கமெண்ட் : குழந்தைகளுக்கான ஜாலி படம். பெரியவர்களும் பொறுமை இருந்தால் பார்க்கலாம்.

குழந்தைகளுடன் சேர்ந்து ஜாலியாகப் பார்க்கக்கூடிய ஒரு அமானுஷ்ய நகைச்சுவைத் திரைப்படத்தின் முழுமையான நிறை, குறைகளை வாசகர்கள் இந்த திரை விமர்சனம் மூலம் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com