ஜெயிலர் 2-வில் அரசியல் அட்டாக்? வசூல் சாதனையை முறியடிக்குமா ரஜினியின் மாஸ் கூட்டணி!

650 கோடி சாதனையை முறியடிக்க மெகா ஸ்டார்களுடன் களம் இறங்கும் ஜெயிலர் 2 குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.
ஜெயிலர் 2
ஜெயிலர் 2

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ரிலீஸ் ஆன ஜெயிலர் படம் ஓடுமா?ஓடாதா?என்று ரசிகர்கள் பயத்துடன் தான் இருந்தனர். காரணம் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் பெய்லியர். அதனால் ஜெயிலர் படம் தொடங்கும்போதே டைரக்டரை மாற்றி விடுங்கள் என்று ரசிகர்கள் குரல் கொடுத்தனர்.

அதற்கு முக்கியமான காரணம் நெல்சன் காமெடிக்கு முக்கியத்துவம் தருபவர். என்னதான் காமெடிப்படம் ஹிட் ஆனாலும் வசூலை அள்ள முடியாது.

தம்பிக்கு எந்த ஊரு ஹிட் படம் தான் என்றாலும் ரஜினியின் பாட்ஷா, படையப்பா,மன்னன் மாதிரி ஆக்சன் படங்களைத்தான் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி இருக்கிறார்கள். ரிப்பீட் ஆடியன்சும் ஆக்சன் படத்துக்குத்தான் இருக்கும்.

ஆனால் ரஜினி டைரக்டரை மாற்றவில்லை. நெல்சன் தான் டைரக்டர் என்பதில் உறுதியாக இருந்தார். படம் ரிலீஸ் ஆனது. 220 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஜெயிலர் படம் 650 கோடி ரூபாய் வசூலித்து ரெக்கார்டு படைத்தது.

இதற்கு முன் தமிழ் சினிமாவின் ஹையஸ்ட் ரெக்கார்டு கலெக்சன் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படம் தான் செய்திருந்தது. 500 கோடி ரூபாய் வசூலைப்பெற்ற முதல் தமிழ்ப்படம் அது. 2022 ல் கமல் படைத்த ரெக்கார்டை 2023ல் ரஜினி முறியடித்தார்.

இப்போது 2026ல் ரஜினியின் ஜெயிலர் 2 படம் ஜெயிலர் 1 படத்தின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்சின் தயாரிப்பு என்பதால் சன் டிவியின் ஷேர் மதிப்புகள். ஷேர் மார்க்கெட்டிப் குபு குபு என கடந்த இரு வாரங்களில் 40% உயர்ந்தது.

ஜெயிலர் 2 படத்தில் முதல்வர் விஜயை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கும் வசனங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படி இருந்தால் அது படத்துக்கு நெகடிவ் பிரமோஷனைத் தரும்.

பான் இண்டியா படமாக இது வர முன்னணி ஹீரோக்கள் ஒவ்வொரு மொழியிலிருந்தும் புக் செய்திருக்கிறார்கள். ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன், மிதுன் சக்ரவர்த்தி, ஜாக்கி ஷெராப். மலையாளத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு, மோகன்லால். தமிழில் எஸ் ஜே சூர்யா, விஜய் சேதுபதி, யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.

ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். அவர் போக வித்யா பாலன், முக்கிய ரோலில் நடிக்கிறார்.

அனிரூத்தின் இசை முதல் பாகம் போலவே இரண்டாம் பாகத்திலும் கலக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
இணையத்தை அதிரவைக்கும் ரஜினியின் ஜெயிலர் - 2 படத்தின் 'பிந்தாஸ்'பாடல்..!!
ஜெயிலர் 2

ஜெயிலர் படத்தில் தமனாவின் காவாலா பாட்டு செம ஹிட்டடித்தது. அந்தப்பாட்டு ஹிட்டானதால் தமனா விஐபி களின் இல்லத்திருமண விசேஷங்களில் அதே பாட்டுக்கு நடனமாட 4 கோடி ரூபாய் சார்ஜ் செய்தார். கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட விசேஷங்களில் ஆடி 160 கோடி ரூபாய் சம்பாதித்தார் தமனா.

ஜெயிலர் 2 படத்தில் பூரணாவின் அல் பெல்லோலோ பாட்டு டான்ஸ் கலக்கல் ரகம். அதைப் பார்த்தவர்கள் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் 37 வயதான பூர்ணா இந்த அளவு டான்சில் கலக்க முடியுமா? என பிரமித்தார்கள்.

15/10/2026 ரிலீஸ். ஐ மேக்ஸ் திரையரங்குகளிலும் ரிலீஸ் ஆகிறது.

ஜெயிலர் 2
ஜெயிலர் 2

ஹிட் சாங்கஸ்

1. ஒரு தலைவன் தான்

2. அல பெல்லோ

3. வேற மாதிரி

ட்ரெய்லர் பார்த்தபோது ஓவர் ஹைப் இல்லாமல் மீடியமாக இருப்பதும் நல்லது தான். ஏனெனில் சமீபத்தில் வந்த பிரம்மாண்டப் படங்களான டாக்சிக், பேரடைஸ் எல்லாம் பிளாப் ஆகி விட்டன. ரஜினி ரசிகர்கள் இப்போதிருந்தே கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். இன்னமும் 10 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
#JUST IN : ஜெயிலர் 2 ட்ரெய்லர் ரிலீஸ்: பான் இந்தியா சாதனையை முறியடிக்குமா ரஜினியின் மெகா மாஸ் படம்?
ஜெயிலர் 2

கதை என்னவாக இருக்கும்?

முதல் பாகத்தின் முடிவில் வில்லன் "என்னை நீ அழிக்கலாம், ஆனா எனக்குப்பின் ஒரு நெட் ஒர்க்கே இருக்கு" என்பான். வினாயக் கேரக்டரின் அண்ணன் தான் சுராஜ் வெஞ்சார மூடாக இருக்கலாம். மெயின் வில்லன் எஸ்.ஜே.சூர்யாவாக இருக்கலாம். ஏகப்பட்ட வில்லன்கள் இருப்பதால் படம் ஆக்சன் அதகளமாக இருக்கும் என்று நம்பலாம்.

முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, 2026 அக்டோபரில் வெளியாகவுள்ள ஜெயிலர் 2 படத்தின் அட்ராக்ஷன்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் பாக்ஸ் ஆபீஸ் கணிப்புகள் பற்றிய முழுமையான பார்வையை வாசகர்கள் பெறுகிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com