

தெனிந்திய சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக பல வித்தியாசமான படங்களை தந்து கொண்டு இருப்பவர் துல்கர் சல்மான். சில ஆண்டுகளுக்கு முன் துல்கர் நடிப்பில் வெளியான சீதாராமம், லக்கி பாஸ்கர் படங்கள் இந்தியா முழுவதும் பரவலான வரவேற்ப்பை பெற்றது. தற்போது துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்த AOT(ஆகாயத்தில் ஒரு தாமரை) என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுனனின் தந்தையார் அல்லு அரவிந்த் தயாரித்துள்ளார்.
சீதாராமம், லக்கி பாஸ்கர் போன்ற படங்கள் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரித்து வெற்றி பெற்றதால் இப்போது இந்த AOT படத்தையும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரிக்க முன்வந்துள்ளார்கள். இப்படம் தெலுங்கு மட்டுமன்றி தென்னிந்த மொழிகளிலும் ஹிந்தியிலும் வெளியாகிறது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக சென்னைக்கு வந்து பேசிய துல்கர் சல்மான் பேசிய ஒரு விஷயம் பலரை ஆச்சரியப்பட வைத்தது.
துல்கர் சல்மான் ஒரு முன்னணி நடிகர். இவரிடம் கதை சொல்ல பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பலர் இவரின் கால்ஷீட்டிற்காக வெயிட் செய்கிறார்கள். ஆனால் துல்கர் தனக்கு வாய்ப்பு தரும்படி கேட்டு இருக்கிறார் என்றால் நம்பும்படியாக உள்ளதா? ஆம். நம்பித்தான் ஆக வேண்டும். இது துல்கர் சல்மானே இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் சொன்ன விஷயம்.
"கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகாயத்தில் ஒரு தாமரை என்ற படத்தின் கதையை கேட்டேன். கதையைக் கேட்டவுடன் எனக்கு பிடித்து போய்விட்டது. இது ஹீரோயின் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இருந்தாலும் நான் நடிக்க உறுதியாக இருந்தேன். அதன் பிறகு லக்கி பாஸ்கர் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டேன். நான் லக்கி பாஸ்கர் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது இந்த படம் பற்றி டைரக்டர் பவனிடம் கேட்டேன். இயக்குனர் படத்தின் ஹீரோயின் முடிவாகிவிட்டது என்றார். அப்போது ஹீரோ யார்? என்று ஒரு வித பதைபதைப்புடன் கேட்டேன். இன்னும் ஹீரோ முடிவாகவில்லை சில நாட்களில் முடிவாகிவிடும் என்றார்.
நான் எப்படியாவது இந்த படத்தின் வாய்ப்பை வாங்கி விட வேண்டும் என்று நினைத்தேன். அதனால் எந்த வித வெட்கமும் இல்லாமல், எந்தவித தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னேன் அதன் பிறகு எனக்காக வெயிட் செய்து சில மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பை தொடங்கி வேகமாக நடத்தி முடித்து விட்டார்கள். நான் நானே ஏன் தேடி வாய்ப்பை பெற்றேன் என்பதற்கு ஒரு காரணம் உள்ளது.
இந்த படத்தின் கதை என்பது பெண்களுக்கான சுதந்திரம், பெண்ணுரிமை பற்றி பேசுவது. இந்த கதை அடிப்படையில் தெலுங்கு ஆந்திராவில் ஒரு கிராமத்தில் நடப்பது போல இருக்கும். ஆனால் இந்த கதையை இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய பெண்களுக்கும் பொருந்தும். இந்த படத்தின் கருத்து இந்தியா முழுக்கவும் செல்லும். எனவே, நானும் இந்தியா முழுக்க இன்னும் பிரபலமாவேன் என்பதும் ஒரு காரணம். இந்த கதை இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒன்று.பெண்கள் அவர்கள் விரும்பும் துறையை தேர்ந்தெடுக்க உரிமை அவர்களுக்கு உள்ளது. அதை எந்த அளவுக்கு நாம் ஆதரிக்கிறோம் என்ற ஒரு கேள்வியும் உள்ளது. அதற்கான விடை தான் இந்த திரைப்படம்.
இது ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படம் தான். ஆனால் எனக்கும் நடிப்பதற்கு நிறைய ஸ்கோப் இருக்கும் ஒரு படம். அதனால் தயக்கமில்லாமல் நான் நடிக்க ஒத்துக் கொண்டேன். இன்று ஹீரோயின் சப்ஜெக்ட், ஹீரோ சப்ஜெக்ட் என்றெல்லாம் ஒன்று கிடையாது படத்தில் சப்ஜெக்ட் நன்றாக இருந்தால் மக்கள் பார்ப்பார்கள். எனவே, இந்த படம் வெற்றி பெறும் என்றார் துல்கர் சல்மான்.
இந்தப் படத்தின் ஹீரோயின் சாத்விகா தமிழ்நாட்டை சேர்ந்தவர். ஆனால் அமெரிக்காவில் வளர்ந்தவர். படத்தின் இயக்குனர் பவன் பல ஹீரோயின்களை தேடிப் பார்த்து அதன் பிறகு சாத்விகாவை கண்டுபிடித்துள்ளார். நவம்பர் 20 இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்த படம் வெளியாகும் நாளில் இன்னொரு ஒரு முக்கியமான விஷயம் நடக்க போகிறது.
அதாவது ஏஓடி துல்கர் சல்மான் நடிக்கும் படம். அதே நாளில் துல்கர் சல்மானின் தந்தை நடிகர் மம்முட்டி நடித்து ஓம் திரைப்படமும் வெளியாக உள்ளது. அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சில நாட்களுக்கு முன்பு நடந்தது அங்கே பேசிய மம்முட்டி “இந்த கேரக்டருக்கு எனக்கு என்னை ஏன் கூப்பிட்டாங்கன்னு தெரியல" என்று சொன்ன விஷயமும் இப்போது மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மகன் துல்கர் சல்மானின் படமும் தந்தை மம்முட்டியின் படமும் ஒரே நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஒரு ஹீரோ தனது மகனை அறிமுகப்படுத்தி பெரிய ஹீரோவாக வளர்ந்து வரும் நேரத்தில் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று விடுவார். ஆனால் விதிவிலக்காக சிவாஜி கணேசன் தனது மகனை பிரபுவை அறிமுகப்படுத்தி ஹீரோவாக நடித்தார். சிவாஜி- பிரபுவுக்கு பிறகு மம்முட்டி-துல்கர் சல்மான் தான் ஒரே காலகட்டத்தில் அப்பா மகன் ஹீரோவாக வலம் வருகிறார்கள். சிவாஜி கூட பிரபு அறிமுகமாகி சில வருடங்கள் மட்டும்தான் ஹீரோவாக நடித்தார். ஆனால் துல்கர் சல்மான் அறிமுகம் ஆகி 12 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இருந்தாலும் மம்முட்டி இன்னும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இது மிக ஆச்சரியமான விஷயம்.
அடிப்படையில் மலையாள நடிகர்களாக இருக்கும் இருவரும் சமீப காலங்களில் மலையாளம் என்ற எல்லையை தாண்டி தென்னிந்தியா முழுவதும் தனது நடிப்பின் ஆளுமைகளை செலுத்தி கொண்டு வருகிறார்கள்.
இந்த நவம்பர் 20 எப்படி இருக்க போகிறது என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது. இந்த போட்டியில் ஜெயிக்கப் போவது மகன் துல்கர் சல்மானா அல்லது அப்பா மம்மூட்டியா என்பது இருபதாம் தேதிக்கு பிறகு தெரிந்துவிடும். எது எப்படி இருந்தாலும் நமக்கு 20 ஆம் தேதி அன்று திரை விருந்து காத்துக் கொண்டிருக்கிறது.
ஒரே நாளில் மம்மூட்டி - துல்கர் சல்மான் படங்கள் திரைக்கு வருவதன் பின்னணியில் உள்ள அரிதான திரையுலக நிகழ்வையும், அவர்களின் சாதனைகளையும் வாசகர் தெரிந்து கொள்வார்.