கண் தெரியாத போலீஸ்… சைக்கோ கொலைகாரனை எப்படி பிடித்தார்? சூர்யாவின் 'சீன்' விமர்சனம்!

மலையாள பாணி த்ரில்லராக வந்துள்ள இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு மற்றும் படத்தின் நிறைகள், குறைகள் என்ன? முழு விமர்சனம்.
சீன் விமர்சனம்
சீன் விமர்சனம்
ராகவ்குமார்

ராகவ் குமார். கல்லூரி படிக்கும் காலம் தொட்டு சிறு சிறு கட்டுரைகள் தினசரிகளில் எழுதிய அனுபவம். இதழியல் மற்றும் தகவல் தொடர்பு துறையில் முதுகலை மற்றும் எம் பில் படிப்பு . 15 ஆண்டுகளுக்கு மேலாக உதவி பேராசிரியராக பணி. சென்னை அகில இந்திய வானொலியில் சில காலம் தொகுப்பாளராக பணி. 2006 முதல் கல்கியில் சினிமா விமர்சனங்கள், சினிமா பிரபலங்களின் நேர்காணல் எழுதிய ராகவ், கல்கி ஆன்லைன் தொடங்கிய சமயத்திலிருந்து உடன் பயணித்து வருகிறார். புதிய சினிமா, புதிய சினிமா கலைஞர்களின் படைப்புகளை ஊக்கப்படுத்தி அவர்களின் நேர்காணல்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம்.

Updated on: 
ரேட்டிங்(3.5 / 5)

படத்தின் ஹீரோ ஒரு போலீஸ் ஆபீஸர். ஆனால் கண் தெரியாது. உதவிக்கு வரும் ஹீரோயினுக்கு கை நடுங்கும் பழக்கம் உடையவர். ஹீரோவின் அப்பா, அம்மா இருவரும் முன்னாள் போலீஸ்காரர்கள். அப்பாவிற்கு ஞாபகம் மறதி நோய். அம்மா தொடர்ந்து குடித்து வருபவர். ஆனால் இவர்களெல்லாம் சேர்ந்து ஒரு சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க வேண்டும். இப்படி ஒரு மாறுபட்ட ஒன்றை யோசித்து ஒரு வித்தியாசமான சூரியா படத்தை தந்திருக்கிறார் மலையாளத்தில் பல வெற்றி படங்களை தந்து தற்போது தமிழில் அடியெடுத்து வைத்திருக்கும் ஜித்து மாதவன்.

இவர் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா நடிப்பில் வெளிவந்துள்ள 'சீன்' எப்படி இருக்கிறது என்று இங்கு பார்க்கலாம். சென்னையில் ஒரு சைக்கோ கொலைகாரனால் பல கொலைகள் நடைபெறுகிறது. இதை போலீஸ் அதிகாரியாக இருக்கும் சூர்யா கண்டுபிடிக்க முயல்கிறார். ஒரு கட்டத்தில் சூர்யாவிற்கு கண் தெரியாது என்று உயர் அதிகாரிகளுக்கும், சக அதிகாரிகளுக்கும் தெரிய வருகிறது. உடனே சூர்யா இனிமேல் போலீஸ் வேலையில் இருக்க வேண்டாம் என்று அனுப்புகிறார்கள். இருந்தாலும் சூர்யா தனது தனிப்பட்ட முயற்சியால் தனது அப்பா, அம்மா மற்றும் ஒரு பெண் இவர்களை வைத்து இந்த கொலையை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். கொலைக்கு பின்னால் ஒரு பெர்ஃப்யூம் நறுமணம் இருப்பதை தெரிந்து கொள்கிறார். 

ஒரு கட்டத்தில் அந்த சைக்கோ கொலைகாரன் தான் எப்படியும் அகப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் சூர்யாவை கொல்ல முயற்சி செய்கிறான். இறுதியில் என்ன ஆனது? என்று சொல்கிறது படம். 

வித்தியாசமான கதை மாறுபட்ட ட்ரீட்மென்ட்

ஒரு வித்தியாசமான கதையை எடுத்ததோடு மட்டுமல்லாமல் இதை பிரசண்ட் செய்யும் விதத்திலும் டைரக்டர் மிகவும் வித்தியாசமாக யோசித்து இருக்கிறார். எப்போதும் ஹீரோ தான் எல்லா சிக்கல்களையும் தீர்க்க வேண்டும் என்றில்லாமல் ஹீரோவின் அப்பாவாக வரக்கூடிய ஆனந்தராஜும், அம்மாவாக நடிப்பவரும், சில சமயங்களில் நஸ்ரியாவும் பிரச்சினையை தீர்க்கிறார்கள். கதையின் ஓட்டத்திலேயே இப்படி ஒரு சில ட்விஸ்ட்களை ஆங்காங்கே வைத்திருக்கிறார் டைரக்டர். படத்தின் நகைச்சுவை என்பது கதையின் ஓட்டத்திலேயே இருக்கிறது. 

சீன் விமர்சனம்
சீன் விமர்சனம்

ஆனந்தராஜ் இப்படத்தில் நகைச்சுவைக்கு பொறுப்பெடுத்துக் கொண்டு நம்மை சிரிக்க வைக்கிறார். அவரின் மெமரி லாஸ் நம்மை சிரிப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. கொலையாளிகளை நெருங்கி வரும் போது அவர்கள் தப்பித்து செல்வதும் மறுபடியும் சூர்யா முயற்சி செய்வதும், என படம் பல இடங்களில் பரபரப்பாக இருக்கிறது. இயக்குனர் மலையாளத்தில் இருந்து வந்திருப்பவர் என்பதால் ஒரு மலையாள பாணியில் கதையை அணுகி இருக்கிறார். இது தமிழ்நாட்டிலும் வொர்க் அவுட் ஆகிறது. 

சபாஷ் சூர்யா...

இந்த தீபாவளிக்கு சூர்யாவுக்கு இது ஒரு ஹாட்ரிக் வெற்றி என்று உறுதியாக சொல்லலாம். ஏனெனில் இந்த கதை தான் ஹீரோ என்பதை சூர்யா புரிந்து கொண்டு நஸ்ரியாவுக்கும், ஆனந்தராஜுக்கும், நடிக்க வாய்ப்பு அளித்து தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். தனக்கு கண் தெரியாததை மறைக்கும் இடத்தில் மிக சிறப்பானதொரு நடிப்பை தந்திருக்கிறார் சூர்யா. கொஞ்சம் துள்ளல் சிறிது கம்பீரம் என்று நடித்து இருக்கிறார். 

நஸ்ரியா கம் பேக்... 

நஸ்ரியா ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பாக தனது நடிப்பில் இருக்கிறார். தனக்கு இருக்கும் குறையை ஒரு நம்பிக்கை விஷயமாக மாற்றும் இடத்தில் படம் நன்றாக இருக்கிறது. இவர்களைத் தவிர டேவினோ தாமஸ், ஆனந்தராஜ், போலீஸ்காராக வருபவர்கள், சூர்யாவின் அம்மாவாக நடிப்பவர், வில்லனாக நடிப்பவர் என அனைவரும் சரியான தேர்வுகள். இந்த அனைவருமே படத்தை முழுவதுமாக ரசிக்க வைப்பதற்கு உதவுகிறார்கள். 

சீன் விமர்சனம்
சீன் விமர்சனம்

படத்தொகுப்பு...

மூன்று இடங்களில் நடக்கும் வெவ்வேறு சம்பவங்களை சரியான திசையை நோக்கி தொகுத்து இருக்கிறார் பட தொகுப்பாளர். எடிட்டிங் படத்தின் வரவேற்பிற்கு மிக முக்கிய காரணம். 

இதையும் படியுங்கள்:
'ஜென் சி' கிட்ஸை சீரழிக்கும் வன்முறை! தமிழ்நாட்டில் 'டாக்சிக்' புறக்கணிக்கப்படுமா?
சீன் விமர்சனம்

ஒரே ஒரு சிறிய மைனஸ்..

இந்த படத்தில் ஒரே ஒரு மைனஸ் இருக்கிறது. அது என்னவென்றால் படத்தின் பாடல்கள் நன்றாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக இளையராஜா பாடலை ஓரிடத்தில் பயன்படுத்திய விதமும் ரசிக்க வைக்கிறது. இருந்தாலும் திரில்லர் மூவி காண ஒரு பின்னணி இசை இன்னும் கொஞ்சம் ஆழமாக தந்திருக்கலாம். 

சீன் தரும் அனுபவம் எப்படி?

சீன் படத்தை பார்க்கும் போது நமக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வரும் திரில்லர் கதைகளில் கொலையாளி யார் என்று ரசிகர்களுக்கும் தெரியாமல் கண்டுபிடிக்க போகும் துப்பறிவாளர்களுக்கும் தெரியாமல் இருப்பது ஒரு வகை, இரண்டாவது வகை கொலையாளி யார் என்று ஆடியன்ஸுக்கு தெரியும். இவர் எப்படி காவல்துறையில் அகப்பட போகிறார் என்பது திரைக்கதையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பெண் கல்வித் தாகம்: ஏமாற்றமா அல்லது எதார்த்தமா? 'அருள்வான்' படத்தின் முழுமையான விமர்சனம்!
சீன் விமர்சனம்

இந்த படம் இது போன்ற வகையில் வந்திருக்கும் படம். உண்மையில் கொலைகாரன் மாட்டும் வரை படம் ஒரு பரபரப்பாக எங்கேயும் தோய்வில்லாமல் செல்கிறது. சீன் படத்தை பார்த்தால் தீபாவளிக்கு ஒரு நல்ல சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லர் படத்தை பார்த்த அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். சீன் - சூரியாவின் தீபாவளி சரவெடி.

பார்வையாளர்களை சீட்டின் நுனியிலேயே அமர வைக்கும் ஒரு வித்தியாசமான சைக்கோ த்ரில்லர் அனுபவத்தை படம் எப்படி வழங்குகிறது என்பதை விவரிக்கிறது இந்த சீன் விமர்சனம்.