45 ஆண்டுக்கு முந்தைய ரகசியம்… கொடைக்கானலில் ரஜித்துக்கு நடந்தது என்ன? 'சிட்டுக்குறிஞ்சி' விமர்சனம்!

கடந்தகால நினைவுகளால் தவிக்கும் இளைஞனின் தேடலும், 80-களின் பிளாஷ்பேக் காதலும் எப்படி இணைகின்றன?
சிட்டுக்குறிஞ்சி
சிட்டுக்குறிஞ்சி
ராகவ்குமார்

ராகவ் குமார். கல்லூரி படிக்கும் காலம் தொட்டு சிறு சிறு கட்டுரைகள் தினசரிகளில் எழுதிய அனுபவம். இதழியல் மற்றும் தகவல் தொடர்பு துறையில் முதுகலை மற்றும் எம் பில் படிப்பு . 15 ஆண்டுகளுக்கு மேலாக உதவி பேராசிரியராக பணி. சென்னை அகில இந்திய வானொலியில் சில காலம் தொகுப்பாளராக பணி. 2006 முதல் கல்கியில் சினிமா விமர்சனங்கள், சினிமா பிரபலங்களின் நேர்காணல் எழுதிய ராகவ், கல்கி ஆன்லைன் தொடங்கிய சமயத்திலிருந்து உடன் பயணித்து வருகிறார். புதிய சினிமா, புதிய சினிமா கலைஞர்களின் படைப்புகளை ஊக்கப்படுத்தி அவர்களின் நேர்காணல்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம்.

Updated on: 
ரேட்டிங் (2.5 / 5)

வி.ஜே.மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் ரஜித், தீப்ஷிகா நடிப்பில் வெளிவந்துள்ள படம் 'சிட்டுக்குறிஞ்சி'.

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருகிறார் ரஜித். தமிழ்நாட்டில் கொடைக்கானல் மலைப்பகுதியில் வரும்போது பல்வேறு விஷயங்கள் முன்பே அவருக்கு நடந்தது போல நினைவு வருகிறது. அதை வைத்துக் கொண்டு அங்கே உள்ள மலை கிராம மக்களிடம் சில தகவல்களை கேட்கிறார். அவர் சொன்ன எந்த தகவலுக்கும் அப்போது உள்ள விஷயத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

இதனால் ஊர் மக்கள் அனைவரும் ரஜித்தை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள். அவர் தேடிப் பிடித்து ஒரு இடத்திற்கு செல்கிறார். அங்கே ஒரு வீடு இருந்த இடம் இருக்கிறது. அப்போது அவருக்கு பழைய விஷயங்கள் ஞாபகம் வருகிறது. அதன் பிறகு முதியவர் ஒருவரை சந்தித்து இங்கே என்ன நடந்தது என்று கேட்கிறார். அவர் உடனே 45 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஒரு சம்பவத்தை தொடர்கிறார். அந்த சம்பவத்திற்கும் இப்போது நான் ரஜித்திற்கு நடக்கும் சம்பவத்திற்கும் என்ன தொடர்பு என்று சொல்கிறது இந்த படம்.

படம் தொடங்கி சில மணி நேரங்களில் இது எந்த மாதிரியான கதை என்று நமக்கு சற்று புரியவில்லை. கொடைக்கானலில் உள்ள மலை கிராமத்திற்கு சென்று ரஜித் கேட்கும் விஷயங்கள் இது எதற்காக என்று குழப்பமும் நமக்கு ஏற்படுகிறது. ஆனால் அதன் பிறகு பிளாஷ்பேக் நடக்கும் காட்சிகள் நம்மை ஈர்க்கின்றன. பிளாஷ்பேக்கில் சிட்டுக்குறிஞ்சி என்ற ஊரில் நடக்கும் ஒரு சம்பவம் நமக்கு நமது தமிழ்நாட்டில் பார்க்கும் பல சம்பவங்களை நினைவுபடுத்துகிறது.

அழகான ஒரு மலை கிராமம் அங்கே காதலராக வரும் ரஜித்தையும், தீப்ஸிகாவையும் அரவணைக்கும் ஊர் மக்கள் என்ற அழகாக செல்கிறது படம். அங்கே நடக்கும் ஒரு திருவிழா, பாடல், திருமணம் என்று படம் அடுத்தடுத்து காட்சிகளில் ஃப்ளாஷ்பேக்கில் நன்றாக செல்கிறது. நன்றாக செல்லும் இந்த படத்திற்கு ஒரு மிகப்பெரிய குறை ஒன்று வந்து விடுகிறது.

சிட்டுக்குறிஞ்சி
சிட்டுக்குறிஞ்சி

அதாவது கிளைமேக்ஸ் விஷயத்தில் இயக்குனர் சற்று பின்னடைவை சந்தித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் கிளைமாக்ஸை சரியாக முடிக்காமல் விட்டுவிட்டார். கிளைமாக்ஸில் ஒரு தெளிவு இல்லை. பழைய நினைவுகள் வரும் ஹீரோ என்ற ஒரு டெம்ப்ளேட்டை எடுத்துக் கொண்டு கிளைமாக்ஸ் சரியாக தர வேண்டாமா? கிளைமாக்ஸ் சரியாக தராததால் இது ஒரு முழுமையான த்ரில்லர் படமாகவோ அல்லது உளவியல் ரீதியான ஒரு திரில்லர் படமாகவோ முழுமையாக வரவில்லை. 

இதையும் படியுங்கள்:
கேரள எல்லையில் காணாமல் போகும் சிறுவர்கள்! 'ஜான் டே' படம் விமர்சனம்!
சிட்டுக்குறிஞ்சி

இருந்தாலும் இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள் நமக்கு நன்றாக இருக்கிறது இதை ஓரளவு நம்மால் ரசிக்க முடிகிறது.

ரஜித் நன்றாக நடித்து இருக்கிறார். குறிப்பாக 80களில் இருக்கும் அந்த ஸ்டைலை தனது நடிப்பில் ரொம்ப அழகாக தந்திருக்கிறார் ரஜித். அதிக வசனங்கள் இல்லை. சில சில மூவ்மெண்ட் மூலமே நம்மை ரசிக்க வைக்கிறார் 80களில் ஹேர்ஸ்டைல், அப்போதிலிருந்து ராஜ்தூத் பைக் போன்றவற்றில் ஒரு ஸ்டைலிஷ் ஆன ஹீரோவாக ரஜீத் மனதில் நிற்கிறார்.

தீப்ஸிகா இதற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் தனது கேரக்டரை நன்றாக புரிந்து நடித்த ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காதலை தனது கண்களாகும் பிரிவை தனது இயக்கத்தாலும் நடிப்பு மூலமாக நன்றாக தந்திருக்கிறார் தீப்ஷிகா.

இதையும் படியுங்கள்:
லந்தர் விளக்கு வெளிச்சம்... இளையராஜா இசையில் மிரட்டும் 'கோந்தல்' திரைவிமர்சனம்!
சிட்டுக்குறிஞ்சி

மாறாவின் இசையில் பாடல்கள் நன்றாக வந்திருக்கிறது. இசைக்கு இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம். டோனி ஜே சுந்தரின் ஒலிப்பதிவில் கொடைக்கானல் காடுகளில் உள்ள சப்தங்கள் நன்றாக பதிவாகியுள்ளன. படத்தில் பாசிட்டிவாக பல விஷயங்கள் இருந்தும், ஒரு சரியான கிளைமாக்ஸ் இயக்குனர் அமைக்க தவறிவிட்டதால் இது முழுமையான காதல் அல்லது காதலை மையமாகக் கொண்ட திரில்லர் படம் என்று நம்மால் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் புதியவர்கள் சிறிய நடிகர்களை வைத்து ஒரு மாறுபட்ட தளத்தில் யோசிப்பதற்காக இயக்குனரை பாராட்டலாம்.

கொடைக்கானல் மலைக்கிராமத்தில் ரஜித்துக்கு ஏற்படும் நினைவுத் தடுமாற்றம், 45 ஆண்டுகளுக்கு முந்தைய பிளாஷ்பேக் காதல் கதை, நடிப்பு மற்றும் இசையின் பலவீனங்கள், இறுதியில் கிளைமாக்ஸ் ஏற்படுத்தும் ஏமாற்றம் ஆகியவற்றின் தெளிவான மதிப்பீட்டைப் பெறுவீர்கள்.