இன்ஃபினிட்டி வார் சாதனையை தூள் தூளாக்கிய ஸ்பைடர் மேன்! உலக அளவில் எத்தனை ஆயிரம் கோடி வசூல் தெரியுமா?

ஸ்பைடர் மேன் புதிய படத்தின் தாறுமாறான வசூல் வேட்டை மற்றும் பல்வேறு நாடுகளின் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள் குறித்த முழு விவரங்கள்.
Spiderman box office
Spider manX
Updated on

ஹாலிவுட் திரைப்படமான 'ஸ்பைடர் மேன் - ப்ரான்ட் நியூ டே' திரைப்படம், சர்வதேச அளவில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகளை செய்து வருகிறது. இதன் வசூல் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'தி ஒடிசி' திரைப்படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது. டாம் ஹாலன்ட் ஹீரோவாக நடித்துள்ள இந்த திரைப்படம் வெளியீட்டில் சக்கை போடு போட்டு வருகிறது.

மற்ற நாடுகளைக் கடந்து, ஸ்பைடர் மேன் திரைப்படம் இந்தியாவிலும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளது. இதுவரை இல்லாத வரலாற்று சாதனையாக ஸ்பைடர் மேன் - ப்ரான்ட் நியூ டே திரைப்படம், முதல் நாளிலேயே இந்தியாவில் ₹ 100 கோடி வசூலித்து பெரும் சாதனையை செய்துள்ளது. வழக்கமாக இந்த பாக்ஸ் ஆபிஸ் தொகை இந்தியாவின் அதிக எதிர்பார்ப்புமிக்க, மிகவும் பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு மட்டுமே சாத்தியமாகி உள்ளது.

பாலிவுட்டை பொருத்தவரையில் முதல் நாளில் ₹100 கோடி வசூலைத் தொட்ட ஒரே நடிகராக ரன்வீர் சிங் மட்டுமே இருக்கிறார். தெலுங்கு திரை உலகை பொறுத்தவரையில் பிரபாஸ், ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர். இவர்களின் இந்த முதல் நாள் வசூல் சாதனைகள் அனைத்தும் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய திரைப்படங்களின் மூலம் சாத்தியமானது.

பொதுவாக இந்தியாவில் ஹாலிவுட் திரைப்படங்கள் , இந்திய சினிமாவுக்கு நிகரான பாக்ஸ் ஆபிஸை பெற்றதில்லை. ஆனால், இந்த சூழலை ஸ்பைடர் மேன் புதிய திரைப்படம் மாற்றியுள்ளது. இந்தியாவில் 4 வது நாளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஸ்பைடர் மேன் - ப்ரான்ட் நியூ டே ₹314 கோடி வசூல் என்ற உச்ச சாதனையை செய்துள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த வசூல் வேட்டை தொடரும் பட்சத்தில் அந்த ஹாலிவுட் திரைப்படம் பெரிய வசூல் சாதனை செய்ய முடியும்.

Spiderman record box office record
Tom Holland as spidermanX

இந்தியாவில் இந்த அளவிற்கு ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் வசூல் சாதனை செய்யும் பொழுது, உலக அளவில் அது 927 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்துள்ளது. இந்த வசூலின் இந்திய மதிப்பு ₹8838.31 கோடி ஆகும். 4 நாட்களில் இந்த திரைப்படத்தின் வசூல் அளவு பல பெரிய வெற்றி பெற்ற ஹாலிவுட் திரைப்படங்களின் மொத்த வசூலையும் விட அதிகமாகும்.

இன்ஃபினிட்டி வார்ஸ் திரைப்படம் முதல் வாரத்தில் 1.2 பில்லியன் டாலர்கள் வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் உள்ளது. இந்த சூப்பர் ஹீரோ திரைப்படம் 'தி ஒடிஸி' திரைப்படத்தின் 911 மில்லியன் டாலர் வசூலை முந்தியுள்ளது. மேலும் 'பேட்மேன் விஸ் சூப்பர்மேன் - டான் ஆஃப் ஜஸ்டிஸ்' திரைப்படத்ததின் 874 மில்லியன் டாலர் வசூலையும் , 'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால் - 2' திரைப்படத்தின் 869 மில்லியன் டாலர் வசூலையும் முந்தியுள்ளது.

வட அமெரிக்காவில் ஸ்பைடர் மேன் திரைப்படம் 4 நாட்களில் 355 மில்லியன் டாலர்கள் (₹3383.15 கோடி) வசூல் செய்துள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் சீனாவிலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அங்கு மட்டும் 121 மில்லியன் டாலர் என்னும் சாதனை வசூலை செய்து வருகிறது.இரண்டாவது வார இறுதியில் இன்னும் பல வசூல் சாதனையை இந்த திரைப்படம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்திய ரெயில்வேயின் புதிய வசதி: இனி கூடுதல் லக்கேஜை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்..!
Spiderman box office
இதையும் படியுங்கள்:
ஆவின் கார்டுதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! லிட்டருக்கு 2 தள்ளுபடி திடீர் ரத்து..!
Spiderman box office
இதையும் படியுங்கள்:
இனி வெறும் ரூ.12க்கு கிடைக்கும் மொறுமொறு ஆவின் மில்க் ரஸ்க்: டீ,காபி பிரியர்களுக்கு குட் நியூஸ்..!
Spiderman box office
logo
Kalki Online
kalkionline.com