

நடிகர் விஷால் தற்போது 'மகுடம்' என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். நேற்று இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா மற்றும் படத்தின் விளம்பர நிகழ்ச்சியும் சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகர் விஷால், தனது பள்ளி வகுப்பு நண்பரும் இன்றைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பற்றி கூறிய ஒரு தகவல் தமிழ்நாட்டில் பரபரப்பு கிளப்பியுள்ளது.
விஷால் சினிமா பாரம்பரியத்தை கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், இயல்பாகவே அவர் சினிமா துறையில் நுழைவதற்கு முயற்சி செய்து கொண்டு வந்தார். தொடக்கத்தில் இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருந்த அவர், பின்னாளில் கதாநாயகனாக அறிமுகமானார். நீண்ட காலமாக ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று குறிக்கோளை வைத்து இருந்தார். விஷாலின் ஆசைகள் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தற்போது நிறைவேறியுள்ளது.
விஷால் முதல் முறையாக மகுடம் என்ற திரைப்படத்தை இயக்கிய நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன் , வம்சிகிருஷ்ணா , ஜான் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வரவேற்று பேசிய விஷால் "ஒவ்வொரு பிரபலத்திற்கும் அவர்களின் வாழ்க்கையின் ஒரு இக்கட்டான சூழல் ஏற்படும். அந்த சூழலில் அவர்களின் கேரியர் முடிந்தது என்ற நிலைக்கு வரும். அதுபோலத்தான் சில பேரால் நான் 14 மாதங்கள் முடங்கி கிடந்தேன். அது யாரால் நடந்தது? என்று நான் கூற விரும்பவில்லை. ஒரு வருடம் எனது தனிப்பட்ட வாழ்க்கை கடுமையாக பாதித்து இருந்தாலும், இன்றைக்கு நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு காரணம் எனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகா தான்". அவருக்கு எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது போன்ற சூழலில் வேறு யாராக இருந்தாலும் அவர்கள் பிய்த்துக்கொண்டு ஓடி இருப்பார்கள். திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள் கொடுத்த நம்பிக்கையும் ஊக்கமும் தான், நான் இந்த திரைப்படத்தை நன்றாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்தது. அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். மகுடம் திரைப்படத்தின் வெற்றிக்கு அவர் முக்கிய காரணமாக இருப்பார்.
ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் எனக்கு இது ஒரு சவாலான திரைப்படம். நான் இயக்குனராக எனது அப்பா அர்ஜுனிடம் 4 நான்கு மணி நேரங்கள் காத்திருந்து வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அர்ஜுன் என்னை நடிகராக மாற்றினார். ஆனாலும், திரைப்படம் இயக்க வேண்டும் என்பது எனது 35 வருட கனவாகும் , என்று விஷால் பேசியிருந்தார்.
மேலும் பேசிய விஷால் " தனது நண்பர் உதயநிதியுடன் கிளப்புக்கு சென்றதைப் பற்றி நினைவு கூர்ந்தார். நானும் உதயநிதியும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் நைட் கிளப்பிற்கு சென்றோம். கூட பெண்கள் இருந்தால்தான் அந்த கிளப்பிற்குள் விடுவார்கள். அப்போது ஜான் விஜய் லுங்கி கண்ணாடியுடன் வந்து, அங்கிருந்தவர்களை மிரட்டி தனியாளாக உள்ளே சென்றார். அந்த காட்சி இந்த திரைப்படத்தில் அப்படியே வைத்துள்ளோம்.
ஜான் விஜய் எனக்கு கல்லூரி சீனியர், அவர் கல்லூரியில் படிக்கும் பொழுது அவரால் பெரிய ஜாதி கலவரமே நடந்தது". அவர் சிறப்பாக நடிப்பார் என்பதால் இந்த திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளேன் என்று விஷால் கூறியுள்ளார்.