
நடிகர் விஷால் சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இந்தாண்டு பொங்கல் வெளியீட்டில் இருந்து 'விடாமுயற்சி' விலகியதை தொடர்ந்து பல படங்கள் ரேஸில் குதித்தன. இதில் யாரும் எதிர்பாராத விதமாக 'மத கஜ ராஜா' பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. 2012ம் ஆண்டே மத கஜ ராஜா படத்தை வெளியிடுவதற்காக சுந்தர் சி வேக வேகமாக படத்தை எடுத்து முடித்தார். ஆனால், சில பல காரணங்களால் வெளியாகவில்லை. இந்தப் படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும், மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 'மத கஜ ராஜா' உருவாகியுள்ளது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.
மேலும், ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'மத கஜ ராஜா' படத்தில் ஆர்யா கெஸ்ட் ரோலில் நடித்தார். சதாவும் ஒரு பாடலுக்கு நடனமாடினார். ‘எம்.ஜி.ஆர்’ என அழைக்கப்பட்டு வந்த இப்படம், அப்போதே திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் படத்தின் கலகலப்பான டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு பொங்கலுக்கு 'மத கஜ ராஜா' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீர் ரிலீஸை முன்னிட்டு இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் பங்கேற்றிருந்த நிலையில், விஷாலும் கலந்துகொண்டார். அதில், நடிகர் விஷால் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இயக்குநராகும் ஆசையோடு சினிமாவுக்கு வந்த அவர்; நடிகராக செல்லமே படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அவர் நடித்த படங்களும் ஹிட்டானதை அடுத்து தமிழின் முக்கியமான ஆக்ஷன் ஹீரோவாக உயர்ந்தார். திடீரென சில ஆண்டுகளாக அவர் மார்கெட்டிங் சரிந்தது. விஷால் நடிக்கும் படம் பெரிதாக ஓடவும் இல்லை. இந்த நிலையில் தான் விஷாலின் மாஸ் கம்பேக்காக மார்க் ஆண்டனி படம் இருந்தது. எஸ் ஜே சூர்யா மற்றும் விஷால் காம்போவில் உருவான இந்த படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது.
தற்போது அவரின் மத கஜ ராஜா படம் ரிலீஸாகவுள்ளது. இந்த பட புரோமோஷனில் பங்கேற்ற விஷால், உடல் ரொம்பவே தளர்ந்த நிலையில், கைகள் நடுங்கியபடி மைக்கை பிடித்து பேசினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி, விஷாலுக்கு வைரல் ஃபீவர். இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்" என்று கூறினார். ஆனால் பலரும் அவருக்கு நரம்பு தளர்ந்துவிட்டது என பேசி வருகிறார்கள். ஆனால் உண்மையில் விஷாலுக்கு என்ன ஆனது என்று அவர் தான் கூற வேண்டும். இது ஒரு பக்கம் இருந்தாலும் விஷாலை திமிராக பார்த்த ரசிகர்கள், கம்பீரம் குறைந்து இருப்பதை பார்த்து வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். அவர் விரைவில் குணமாகவேண்டும் எனவும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது அப்போலோ மருத்துவமனை விஷாலின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.