இது விமான நிலையமா இல்லை உலகத்தின் அடுத்த தலைநகரமா? துபாயின் மாபெரும் ரகசியம்!

மூடும் நிலையில் DXB! 35 பில்லியன் டாலர் செலவில் பாலைவனத்தில் உருவாகும் புதிய அதிசயம்.
துபாய் விமான நிலையம் - Al Maktoum Airport
துபாய் விமான நிலையம் - Al Maktoum Airport
நடேஷ் கன்னா

என் பெயர் நடேஷ் கன்னா. எனது உண்மை பெயர் சிவராம சுப்ரமணியன். எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு. தற்போது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருகிறேன். நான் கடந்த 57 ஆண்டுகளாக பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறேன். சிறுகதை கட்டுரைகள் கவிதைகள் துணுக்குகள் ஜோக்ஸ் என எழுதி உள்ளேன். நான் கல்கி, தீபம், மங்கையர் மலர், குமுதம், விகடன், சாவி இதயம் பேசுகிறது முத்தாரம், ராணி, தேவி, ஜூனியர் விகடன், நக்கீரன், துக்ளக், தினமலர், போன்ற அனைத்து பத்திரிகைகளுக்கும் எழுதியுள்ளேன். எனக்கு ஆரம்ப காலத்தில் எழுத தூண்டியது கல்கி வார இதழ். அதில் நான் எழுதிய முதல் துணுக்கு இடம் பெற்றது அன்றிலிருந்து இன்று வரை எழுதி வருகிறேன். நான் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. என்னை எழுத தூண்டிய கல்கிக்கு வாழ்த்துக்கள்.

Updated on: 

கண்களை மூடித் திறந்து பார்ப்பதற்குள் ஒரு பூமி எப்படித் தலைகீழாக மாற முடியும் என்பதற்குத் துபாயை விடச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

ஒரு காலத்தில் கடலுக்குள் இறங்கி முத்துக்களைத் தேடிய மனிதர்களின் காலடித்தடங்கள் பதிந்திருந்த அந்தச் சிறிய மணல் திட்டு, இன்று உலகை இணைக்கும் வானுலக மையமாக மாறியிருக்கிறது.

1960-களில் ஒரே ஒரு சிறிய கட்டடமும், மணல் பாதையும் மட்டுமே துபாய் விமான நிலையம் இருந்தது. ஆனால், உலகை வியக்க வைக்கும் வகையில் அந்தப் பெயர் இன்று உலகப் பயணிகளின் மையமாக மாறியுள்ளது.

ஆனால், இப்போது அந்தப் புகழின் உச்சத்தில் இருக்கும் துபாய் பெரும் பீதியில் ஆழ்த்தப்பட்டுள்ளது. காரணம், தங்களது மகுடத்தைக் கைப்பற்ற மூன்று சக்திவாய்ந்த எதிரிகள் ஒரே நேரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இந்த ஆபத்தைச் சமாளிக்க, உலகின் மிகவும் லாபகரமான விமான நிலையத்தை மூடிவிட்டு, 35 பில்லியன் டாலர் செலவில் பாலைவனத்தின் நடுவே உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தைக் கட்டத் துடிக்கிறது துபாய்.

பெரும்பாலானோர் துபாய் என்றவுடன் சொகுசு விடுதிகளையும், எண்ணெய்க் கிணறுகளையும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.

துபாய் விற்பது எதை தெரியுமா? 'இடைநிறுத்தத்தை' : (The Layover)

லண்டனில் இருந்து சிட்னிக்கு அல்லது லாகோஸில் இருந்து ஷாங்காய்க்குப் பறக்கும் ஒரு பயணிக்குத் துபாய் வழியாகச் செல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால், துபாயின் பிரம்மாண்டமான 'எமிரேட்ஸ்' விமான நிறுவனம் உங்களை அங்கே இறங்கச் செய்கிறது.

ஒரு விமானத்திலிருந்து இறங்கி, தங்கம் விற்கும் இயந்திரங்கள் நிறைந்த மால்களுக்குள் நடந்து, அடுத்த விமானத்தில் ஏறுவதுதான் இந்த இயந்திரத்தின் ரகசியம்.

உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், துபாயிலிருந்து 8 மணி நேர விமானப் பயணத் தூரத்திற்குள்தான் வசிக்கிறார்கள்.

இந்த புவியியல் அமைப்பு துபாய்க்குப் பெரிய பலமாக இருந்தது. ஆனால், இப்போது அதே இடம் ஒரு பொறியாக மாறியுள்ளது.

துபாய் விமான நிலையம் - Al Maktoum Airport
துபாய் விமான நிலையம் - Al Maktoum Airport

துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB), வளர்ந்துவிட்ட நகரத்தின் நடுவே சிக்கிக்கொண்டது. ஒருபுறம் வானளாவிய கட்டடங்கள், மறுபுறம் நெடுஞ்சாலைகள்.

இங்கு விமான ஓடுபாதையை மேலும் நீட்டிக்க எங்குமே இடமில்லை.

விமான ஓட்டுநர்கள் தரையிறங்கும்போது, திறந்த பாலைவனத்திற்குப் பதிலாக வீடுகளின் விளக்குகளைப் பார்க்கவேண்டிய நிலை உள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழலில்தான், துபாயின் அண்டை நாடுகள் துபாய்க்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

ஆறு ஓடுபாதைகளுடன் ஒரு பிரம்மாண்ட விமான நிலையத்தைக் கட்டுகிறது சவுதி. மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பிராந்தியத் தலைமையகத்தை துபாயிலிருந்து ரியாத்திற்கு மாற்றவேண்டும் என்ற அதிரடி உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக ஒரு சொகுசு விமான நிலையத்தையும், தலைசிறந்த விமான சேவையையும் உருவாக்கி, "துபாயைத் தவிர்த்துவிட்டு எங்களிடம் வாருங்கள்" என்ற கோஷத்தை முன்வைக்கிறது கட்டார்.

ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள Istanbul மெகா விமான நிலையம், துபாயின் முக்கிய வழித்தடங்களை இலக்காகக் கொண்டுள்ளது.

இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், துபாய் தனது எதிர்காலப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாவின் பார்வையை முற்றிலும் மாற்றியமைக்கிறது. தென்மேற்கே உள்ள அல் மக்தூம் (Al Maktoum International) சர்வதேச விமான நிலையத்தை (DWC) உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாற்றும் 35 பில்லியன் டாலர் மதிப்பிலான விரிவுபடுத்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள்:
ரேபிஸ் இல்லா முதல் ஆசிய நாடு! பூடானின் இந்த ரகசியம் தெரியுமா?
துபாய் விமான நிலையம் - Al Maktoum Airport

இந்த புதிய மாஸ்டர் பிளான் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய முனைய வடிவமைப்பு.

ஐந்து இணை ஓடுபாதைகள் மற்றும் 400 விமான வாயில்கள் (Aircraft Gates) விமானங்கள் எந்தவிதத் தாமதமும் இன்றி அடுத்தடுத்து வந்து செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 260 மில்லியன் பயணிகள் திறன். உலகின் மொத்த விமானப் பயணிகளில் கணிசமான பகுதியை ஒரே பாலைவனப் பகுதிக்குள் கொண்டு வருவதற்கான இலக்கு.

இந்த மெகா திட்டம் எதிர்காலத்தில் பழைய துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) மாற்றாக விளங்கி, உலகளாவிய விமானப் போக்குவரத்து முறையை முழுமையாக மாற்றி எழுதப் போகிறது.

மேலும், இங்கு மனிதர்களின் தேவையின்றி முக அடையாளத்தைக் ( facial recognition) கொண்டு பாஸ்போர்ட் இன்றி கடந்து செல்லும் உயர்தர தொழில்நுட்பமும், தானியங்கி வாகனங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

துபாய் இப்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. புதிய விமான நிலையத்திற்குச் செல்லும் எமிரேட்ஸ் நிறுவனம், தனது பழைய விமான நிலையமான DBX ஐ முழுமையாக மூடவுள்ளது.

இதையும் படியுங்கள்:
குளிர்கால உல்லாசப் பயணம்: படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்!
துபாய் விமான நிலையம் - Al Maktoum Airport

பழைய விமான நிலையத்தின் நிலத்தை விற்று, புதிய திட்டத்திற்கான கடன்களை அடைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் துபாய் பின்வாங்குவதற்கு எந்த வழியும் வைத்துக் கொள்ளவில்லை. பழைய விமான நிலையத்திற்குத் திரும்பவே முடியாது என்ற நிலையை உருவாக்கி, தன் முழு எதிர்காலத்தையும் இந்த ஒற்றைத் திட்டத்தின் மீது பந்தயம் கட்டியுள்ளது.

எதிர்காலத்தில் நேரடி விமானங்கள் வந்துவிட்டால் (உதாரணமாக, லண்டனில் இருந்து சிட்னிக்கு நடுவில் நிற்காமல் பறப்பது), துபாயின் இந்தத் திட்டம் என்னவாகும் என்ற கேள்வியும் எழுகிறது.

ஆனால், துபாய் இதைப் பற்றி கவலைப்படவில்லை. இந்த 260 மில்லியன் பயணிகளை இலக்காகக் கொண்ட விமான நிலையம் என்பது வெறும் விரிவாக்கம் அல்ல,

அது ரியாத், டோகா மற்றும் இஸ்தான்புல்லுக்கு விடுக்கப்பட்ட ஒரு பகிரங்க சவால்.

இதையும் படியுங்கள்:
வீக்கெண்ட் ட்ரிப் போகணுமா? அமைதியைத் தேடி மயிலாடுதுறை கூழையார் கடற்கரைக்கு வாங்க!
துபாய் விமான நிலையம் - Al Maktoum Airport

மக்கள் இன்னும் வானில் பறப்பார்கள், அந்தப் பயணங்கள் இந்தச் சிறிய மணற்பரப்பின் வழியேதான் செல்லும் என்ற ஒரே நம்பிக்கையில் தனது ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் இந்தத் திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளது துபாய்.

இறுதியில் இது ஒரு விமான ஓடுபாதையை கட்டும் mega project மட்டுமல்ல; உலகளாவிய விமானப் போக்குவரத்தின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கப் போகும் ஒரு மாபெரும் புரட்சி!

logo
Kalki Online
kalkionline.com